Topic : Spirit

நீங்கள் அவருடைய இஸ்பிரீத்துவினால் உள்ளரங்க மனிதனாக வல்லமையால் பலப்படவும்,
விசுவாசத்தினாலே கிறீஸ்துநாதர் உங்கள் இருதயங்களில் வாசம் பண்ண வும், நீங்கள் பரம அன்பில் வேரூன்றி நிலைபெற்று, (கொலோ. 2:7.)

Ephesians 3:16-17

இஸ்பிரீத்துவின் கனிகள் ஏதென் றால்: பரம அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயாளம், நன்மைத்தனம், சகிப்பு,
சாந்தம், விசுவாசம், அடக்க வொடுக்கம், இச்சையடக்கம், நிறைகற்பு இவைகளாம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணமில்லை.

Galatians 5:22-23

நீங்கள் நம்பிக்கையிலும், இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையிலும், பெருகும்படிக்கு நம்பிக்கையின் தெய் வம் விசுவசிப்பதினாலுண்டாகும் எவ் வித சந்தோஷத்தினாலும் உங்களை நிரப்புவாராக.

Romans 15:13

சர்வேசுரன் ஞான வஸ்துவாயிருக்கிறார். ஆதலால் அவரை ஆராதிக்கிறவர்கள் ஞானத்திலும் உண்மையிலும் ஆராதிக்கவேண்டும் என்றார். (1 கொரி. 3:17.) * 21-24. சாலமோன் இராஜா ஜெருசலேமில் கட்டின தேவாலயத்தில் மாத்திரம் அந்நாள் பலிகளெல்லாம் செலுத்தப்படவேண்டியதாயிருந்தது. பிரிவினைக்காரரான சமாரியர்கள் ஜெருசலேமில் பலியிடப்போகாமல், அவர்கள் பட்டணத்துக்கு அருகேயிருந்த காரீசிம் என்ற மலையின்மேல் சர்வேசுரனுடைய கற்பனைக்கு விரோதமாய்ப் பலிகளைச் செலுத்திக்கொண்டிருந்தார்கள். இந்தப் பலிகளெல்லாம் தெய்வபக்தியில்லாமல் யூதர்கள் வெறுஞ் சடங்குகளாக நிறைவேற்றிவந்ததினாலே அவைகளுக்கு முடிவுகாலம் வந்ததென்றும், இது முதற்கொண்டு ஞானமாயிருக்கப்பட்ட சர்வேசுரனை ஞானமும் உண்மையும் அடங்கிய தேவ விசுவாசம் தேவ நம்பிக்கை தேவ சிநேகத்தினாலே ஆராதிக்கிற காலம் வந்திருக்கிறதென்றும் சேசுநாதர்சுவாமி படிப்பிக்கிறார்.

John 4:24

அவர் தம்முடைய இஸ்பிரீத்துவிலிருந்து நமக்குத் தந்தருளினதினால், நாம் அவரிலும், அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதாக அறிந்திருக்கிறோம். (அரு. 14:17.) *** 13. இஸ்பிரீத்துவிலிருந்து: - அதாவது, சேசுநாதர்சுவாமி இஸ்பிரீத்துசாந்துவின் வரங்களில் நமக்கு வேண்டியதை அளிக்கிறாரென்று அர்த்தமாம்.

1 John 4:13

ஏனெனில், சர்வேசுரன் நமக்குப் பயத்தின் இஸ்பிரீத்துவைக் கொ டாமல், தைரியம், சிநேகம், மனஅமைதி என்பவற்றின் இஸ்பிரீத்துவைக் கொடுத் திருக்கிறார். (உரோ. 8:15.)

2 Timothy 1:7

நாம் இஸ்பிரீத்துவினால் ஜீவிக்கிறோமாகில், இஸ்பிரீத்துவுக்கேற்றபடி நடக்கவுங்கடவோம்.

Galatians 5:25

அவ்வண்ணமே, இஸ்பிரீத்துவானவரும் நமது பலவீனத்தைத் தாங் கிக்கொண்டுவருகிறார். எவ்வாறெனில், நாம் தக்கபடி மன்றாடிக் கேட்கிற தென்னவென்று அறியாமலிருக்கி றோம். ஆனால் இஸ்பிரீத்துவானவரே நமக்காக வாக்குக்கெட்டாத பெரு மூச்சுகளோடு பிரார்த்திக்கிறார்.

Romans 8:26

ஆண்டவருடைய இஸ்பிரீத்து வானவர் என்பேரில் அமர்ந்தார்; ஆதலால் ஆண்டவர் என்னைத் தம் பரிசுத்த ஸ்தலத்தால் அபிஷேகஞ் செய்தார்; ஆண்டவர் என்னை அனுப் பினது: சாந்தந் தாழ்மை உடையோ ருக்குப் போதிக்கவும், இருதயம் நொந்தவர்களைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டவர்களுக்குக் கிருபை யையும், அடைபட்டோருக்கு மீட்பையும் பிரசித்தஞ் செய்யவும் (லூக்.4:18),

Isaiah 61:1

எப்படியெனில், எவர்கள் சர்வேசுரனுடைய ஞானத்தால் நடத்தப்படுகிறார்களோ, அவர்களே சர்வேசுரனுடைய பிள்ளைகள்.

Romans 8:14

எனக்கு மிகவும் அன்பரே, நீங்கள் எல்லா ஞானிகளையும் நம்பாமல், அவர்கள் சர்வேசுரனிடத்திலிருந்து வந்தவர்களோ என்று சோதித்து அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில், உலகத்தில் அநேகம் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருக்கிறார்கள். (யூதா. 4.)

1 John 4:1

நம்முடைய கர்த்தராகிய சேசுக்கிறீஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமாயிருக்கிறவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்குரிய ஞானமும் தெளிவுமாகிய இஸ்பிரீத்துவின் வரங்களை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,

Ephesians 1:17

அல்லாமலும், அக்கினிமயம் போன்ற பிரிந்த நாவுகள் அவர்களுக்குத் தோன்றி, அவர்களில் ஒவ்வொருவர் மேலும் வந்து தங்கினது.
அவர்கள் எல்லாரும் இஸ்பிரீத்துசாந்துவினால் நிரப்பப்பட்டு, பேசும் படிக்கு இஸ்பிரீத்துசாந்துவானவர் அவர் களுக்குக் கொடுத்த வரத்தின்படியே பற்பல பாஷைகளில் பேசத் தொடங்கி னார்கள். (மத். 3:11; அப். 11:16; 1 கொரி. 12:10; அரு. 7:39.)

Acts 2:3-4

மாம்ச சிந்தை மரணமாம். ஞானத்தின் சிந்தையோ சீவியமும், சமாதானமுமாம்.

Romans 8:6

ஆனால் நீங்கள் தீயோராயினும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கொடைகளைக் கொடுக்க அறிந்தி ருக்கும்போது, உங்கள் பரம பிதாவானவர் தம்மை வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய் நல்ல இஸ்பிரீத்துவைத் தந்தருளுவார் என்று திருவுளம்பற்றினார்.

Luke 11:13

பின்னர் மாறுத்தாரமாக அவன் என்னைப் பார்த்து: யஸாரோப பேலுக்கு ஆண்டவர் அருளும் வாக்கியமாவது: சேனையினாலு மன்று, (சுய) பலத்தினாலுமன்று நமது ஆவியால் மாத்திரமுண்டு எனச் சேனைகளின் தேவனார் செப்புகின் றார் என உரைத்தார்.

Zechariah 4:6

நாம் சர்வேசுரனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம் என்று இஸ்பிரீத்துசாந்துவானவரே நம்முடைய புத்திக்கு அத்தாட்சி கொடுக்கிறார்.

Romans 8:16

எப்படியெனில் மாம்சம் இஸ்பிரீத்துவுக்கு விரோதமாயும், இஸ்பிரீத்து மாம்சத்துக்கு விரோதமாயும் இச்சிக்கிறது. உங்களுக்கு இஷ்டப்பட்டவைகள் எவைகளோ, அவைகளை நீங்கள் செய்யாதபடி இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கின்றன.

Galatians 5:17

நாங்களெல்லோரும் ஆண்டவருடைய பிரதாப மகிமையைத் திறந்த முகமாய்த் தரிசித்து ஆண்டவ ருடைய இஸ்பிரீத்துவின் செயலால் ஒளிக்குமேல் ஒளிபெற்று, அந்தச் சாயலாக மறுரூபமாகிறோம். *** 18. 12-ம் வசனமுதல் கடைசிமட்டுமுள்ள வசனங்களின் அர்த்தமாவது: புதிய ஏற்பாட் டின் ஊழியருக்குண்டாயிருக்கிற நிகரற்ற மகிமையை நாங்கள் உத்தேசித்து மோயீசன் இஸ்ராயேல் பிரஜைகளோடு பேசும்போது தன் முகத்தை மூடினதுபோல் நாங்கள் மூடாமலும் கூச்சப்படாமலும் சுவிசேஷத்தை மிகுந்த தைரியத்தோடே பிரசங்கிக்கிறோம். மோயீசன் முகத்தின்மேல் போடப்பட்ட முக்காடு இஸ்ராயேல் பிரஜைகளின் இருதயக் கடினத்துக்கும் குருட்டாட்டத்துக்கும் அடையாளமாயிருந்தபடியால், அவர்கள் மோயீசன் ஆகமங்களை வாசிக்கும்போதெல்லாம் அந்த முக்காடு அவர்கள் இருதயங்களின்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிறாப்போலே மோயீசன் ஆகமங்களில் கிறீஸ்துநாதரைக்குறித்துச் சொல்லியிருக்கிற சாட்சியை அவர்கள் கண்டுபிடியாமல், அவரை இந்நாள்வரைக்கும் விசுவசியாதிருக்கிறார்கள். அவரை அவர்கள் விசுவசிக்கும்போது அந்த முக்காடு எடுபடும். அதுவும் சேசுக்கிறீஸ்துநாதரால்தான் ஆகவேண்டும். எங்கள் இருதயமோ அப்படிப்பட்ட முக்காட்டினால் மூடப்படாமல், இஸ்பிரீத்துசாந்துவின் வரப்பிரசாதமாகிய ஞான வெளிச்சத்தைக்கொண்டு ஞானப்பிரகாசத்தை நாளுக்குநாள் அதிகமதிகமாய் அடைந்து அந்தப் பிரகாசத்தினால் ஆண்டவருடைய மகிமையைத் தரிசிக்கிறாப்போல் இவ்வுலகத் திலே தரிசித்து மறுவுலகத்திலே அதற்கு ஒப்பானவர்களாவோம் என்று அர்த்தமாம்.

2 Corinthians 3:18

ஆதியிலே கடவுள் பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்தார். (சங். 32:6; 135:5: சர்வப். 18:1; அப். 14:14; 17:24.)
பூமியோவெனில் உருவமற்றதும் வெறுமையுற்றதுமாயிருந்தது; அன்றியும் பாதாளத்தின் முகத்தே இருள் வியாபித்திருந்தது; தேவ ஆவியானவர் தண்ணீரின்மீது அசைவாடிக்கொண்டிருந்தார்.

Genesis 1:1-2

உங்கள் அலுவலில் அசதியாயிராமல் மனதில் வேகமாயிருங்கள்; ஆண்டவருக்கு ஊழியஞ் செய்யுங்கள்.

Romans 12:11

அப்படியே நீங்கள் திரும்பவும் பயத்தோடுகூடிய அடிமைத்தனத் தின் புத்தியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடுகிற சுவீ காரப் பிள்ளைகளுக்குரிய புத்தியைப் பெற்றுக்கொண்டீர்கள். (2 தீமோ. 1:7.)

Romans 8:15

சமாதான பந்தனத்தில் மன ஒற்றுமையை ஜாக்கிரதையாய்க் காப்பாற்றிக்கொள்ளுங்கள். (உரோ. 12:10.)

Ephesians 4:3

ஏனெனில் உங்கள் வேண்டுதலினாலும், சேசுக்கிறீஸ்துநாதருடைய இஸ்பிரீத்துவின் உதவியினாலும், இது எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிந்திருக்கிறேன்.

Philippians 1:19

ஆகையால் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: இஸ்பிரீத்துவுக்கு ஏற்றபிரகாரம் நடந்துகொள்ளுங்கள். அப்போது மாம்ச இச்சைகளை நிறை வேற்றமாட்டீர்கள். (1 இரா. 2:11.)

Galatians 5:16


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |