Topic : Spirit

தம்முடடைய மாட்சியின் வளத்திற்கேற்ப, அவருடைய ஆவியினால், உங்கள் உள் மனத்தில் நீங்கள் வலிமையும் ஆற்றலும் பெறும்படி அருள்வாராக.
அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடிப்படையுமாக அமைவதாக. இவ்வாறு நீங்கள்,

Ephesians 3:16-17

ஆனால், தேவ ஆவி விளைவிக்கும் பலன்களாவன: அன்பு, மகிழ்ச்சி, அமைதி பொறுமை, பரிவு, நன்னயம், விசுவாசம், சாந்தம், தன்னடக்கம்.
இவையுள்ள இடத்தில் சட்டம் எத்தடையும் விதிப்பதற்கு இடமில்லை. .

Galatians 5:22-23

பரிசுத்த ஆவியின் வல்லமையால் உங்களில் நம்பிக்கை பெருகும்படி, நம்பிக்கை தரும் கடவுள், விசுவாசத்தால் உண்டாகும் எல்லா வகையான மகிழ்ச்சியாலும் அமைதியாலும் உங்களை நிரப்புவாராக.

Romans 15:13

கடவுள் ஆவியானவர்; ஆதலால் அவரைத் தொழுபவர்கள் ஆவியிலும் உண்மையிலும்தான் அவரைத் தொழுதல் வேண்டும்."

John 4:24

தம் ஆவியில் அவர் நமக்குப் பங்கு தந்தமையால், நாம் அவருள் நிலைத்திருக்கிறோம் எனவும், அவர் நம்முள் நிலைத்திருக்கிறார் எனவும் அறிகிறோம்.

1 John 4:13

கடவுள் தம் ஆவியால் கோழை உள்ளத்தை நமக்கு அருளவில்லை. வலிமையும் அன்பும் விவேகமும் கொண்ட உள்ளத்தையே அருளினார்.

2 Timothy 1:7

ஆவியானவரே நமக்கு உயிர் ஊட்டுபவராயின், ஆவியானவர் காட்டும் நெறியிலேயே நடப்போமாக.

Galatians 5:25

அவ்வாறே நம் வலுவற்ற நிலையில் நமக்கு ஆவியானவர் துணைநிற்கிறார்; ஏனெனில், செபிக்க வேண்டிய முறையில் செபிப்பதெப்படி என நாம் அறியோம்; ஆவியானவர் தாமே சொல்லொண்ணாப் பெருமூச்சுகளோடு பரிந்து பேசிச் செபிக்கிறார்.

Romans 8:26

ஆண்டவரின் ஆவி என்மேலே, ஏனெனில் ஆண்டவர் என்னை அபிஷுகம் செய்துள்ளார்; எளியோர்க்கு நற்செய்தி அறிவித்து, உள்ளம் நொந்தவர்களைக் குணப்படுத்தவும்: சிறைப்பட்டவர்களுக்கு விடுதலைச் செய்தியும், கட்டுண்டவர்களுக்கு மீட்புச் செய்தியும் அறிவிக்கவும்;

Isaiah 61:1

ஏனெனில் கடவுளின் ஆவியால் யார் இயக்கப்படுகிறார்களோ, அவர்களே கடவுளின் மக்கள்.

Romans 8:14

அன்புக்குரியவர்களே, தேவ ஆவியின் ஏவுதல் தமக்கிருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் எல்லாரையுமே நம்பிவிடாதீர்கள். அந்த ஏவுதல் கடவுளிடமிருந்துதான் வருகிறதா என்பதைச் சோதித்தறியுங்கள். ஏனெனில், போலித் தீர்க்கதரிசிகள் பலர் உலகெங்கும் பரவியுள்ளனர்.

1 John 4:1

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமை மிக்க தந்தையுமானவர் தேவ ஆவியை உங்களுக்கு கொடுப்பாராக! அந்த ஆவியினால் நீங்கள் உண்மையை வெளிப்படுத்தும் அருளையும் ஞானத்தையும் பெற்று, அவரை முற்றும் அறிந்துகொள்வீர்களாக.

Ephesians 1:17

நெருப்புப்போன்ற நாவுகள் அவர்களுக்குத் தோன்றிப் பிளவுண்டு, ஒவ்வொருவர்மேலும் வந்து தங்கின.
எல்லாரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று, ஆவியானவர் அருளியபடி அயல்மொழிகளில் பேசத்தொடங்கினர்.

Acts 2:3-4

ஊனியல்பின் நாட்டத்தால் விளைவது சாவே; ஆவியால் தூண்டப்படும் இயல்பின் நாட்டத்தால் வருவது வாழ்வும் அமைதியுமே.

Romans 8:6

ஆகவே, தீயோராகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிவீர்களானால், வானகத்திலுள்ள உங்கள் தந்தை, தம்மிடம் கேட்பவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய்ப் பரிசுத்த ஆவியை அளிப்பார்! " என்றார்.

Luke 11:13

அப்போது அவர் என்னிடம், "சொரொபாபெலுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு இதுவே: ஆற்றலாலுமன்று, வல்லமையாலுமன்று, ஆனால் நமது ஆவியாலே ஆகும், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

Zechariah 4:6

நாம் இவ்வாறு கூப்பிடும்போது நம் உள்ளத்தோடு தேவ ஆவியானவரே நாம் கடவுளின் பிள்ளைகள் என்று சான்று பகர்கிறார்.

Romans 8:16

அந்த இயல்பு இச்சிப்பது தேவ ஆவிக்கு முரணானது. தேவ ஆவி விரும்புவதோ அவ்வியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று முரணாய் உள்ளன; அதனால் தான் விருப்பமானதை உங்களால் செய்யமுடியாமல் இருக்கிறது.

Galatians 5:17

இப்பொழுது நாமனைவரும் மூடு திரையில்லா முகத்தினராய், ஆண்டவரின் மாட்சிமையைக் கண்ணாடிபோல் காட்டுகிறோம். அதனால் மேன்மேலும் மாட்சிமை ஒளி பெற்று. அதன் சாயலாகவே உருமாற்றம் அடைகிறோம்; இவையெல்லாம் ஆவியாகிய ஆண்டவரின் செயலே.

2 Corinthians 3:18

ஆதியிலே கடவுள் விண்ணையும், மண்ணையும் படைத்தார்
பூமி உருவமற்றதும் வெறுமையுற்றதுமாய் இருந்தது. பாதாளத்தின் முகத்தே இருள் பரவியிருந்தது. கடவுளின் ஆவியானவர் தண்ணீரின் மீது அசைவாடிக் கொண்டிருந்தார்.

Genesis 1:1-2

ஊக்கத்தளராதிருங்கள்; ஆர்வம் தணியாதிருங்கள்: நீங்கள் ஊழியஞ் செய்வது ஆண்டவருக்கே.

Romans 12:11

நீங்கள் பெற்றுக்கொண்டது, திரும்பவும் அச்சத்திற்குள்ளாக்கும் அடிமையுள்ளம் அன்று; பிள்ளைகளாக்கும் தேவ ஆவியையே பெற்றுக்கொண்டீர்கள். அந்த ஆவியினால் நாம், "அப்பா, தந்தாய்" எனக் கூப்பிடுகிறோம்.

Romans 8:15

தேவ ஆவி அளிக்கும் ஒருமைப்பாட்டைச் சமாதானம் என்னும் பிணைப்பால் காப்பாற்றக் கண்ணும் கருத்துமாய் இருங்கள்.

Ephesians 4:3

உங்கள் மன்றாட்டினாலும் இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியின் துணையாலும் இதெல்லாம் எனக்கு மீட்பளிப்பதாய் முடியும் என்று நான் அறிவேன்.

Philippians 1:19

ஆகவே நான் சொல்வது: ஆவியின் ஏவுதலின்படி நடங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்றமாட்டீர்கள்.

Galatians 5:16


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |