Topic : Speaking

நல்ல மனிதன் தன் இருதயமா கிய நல்ல பொக்கிஷத்தினின்று நல்லவைகளை எடுத்துக் காட்டுகிறான். கெட்ட மனிதனும் கெட்ட பொக்கிஷத்தினின்று கெட்டவைகளை எடுத்துக் காட்டுகிறான். ஏனெனில் இருதயத்தின் நிறைவாகவேதான் வாய் பேசுகின்றது.

Luke 6:45

மரணமுஞ் சீவியமும் நாவிலிருந்து அதை நேசிக்கிறவர்களே அதின் கனிகளைத் தின்பார்கள்.

Proverbs 18:21

கெட்ட பேச்சு ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம். விசுவாசத்தின் நல்விருத்திக் கேதுவான பேச்சு உண்டானால், கேட்கிறவர்களுக்குப் பக்தியை வருவிக்கும்படி அதைப் பேசுங்கள்.

Ephesians 4:29

தன் வாயைக் காக்கிறவன் தன் ஆன்மாவையே காப்பாற்றுகிறான். ஆனால் பேச்சில் கவனமில்லாதிருக் கிறவன் தீமையைச் சகிப்பான்.

Proverbs 13:3

மதியீனனுங்கூட மெளனமா யிருப்பானாகில் ஞானியாகவும், தன் உதடுகளை மூடுவானாகில் அறிவுடை யோனாகவும் மதிக்கப்படுவான்.

Proverbs 17:28

சமாதான வாக்கு சீவிய விருட்சமாம்; அடக்கப்படாத வாய் பிராணனை நசுக்கும்.

Proverbs 15:4

நீங்கள் தின்மைக்குத் தின்மை செய்யாமலும், சாபத்துக்குச் சாபமிடா மலும் இருப்பதுந்தவிர, அதற்குப் பதி லாக நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்த ரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்ட வர்களாகையால், ஆசீர்வதியுங்கள். (பழ. 17:13; உரோ. 12:17; 1 தெச. 5:15.)

1 Peter 3:9

ஆனால் மனுஷர்கள் பேசியிருக் கும் ஒவ்வொரு வீண் வார்த்தையின் பேரிலும் தீர்வை நாளில் கணக்குச் சொல்லுவார்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். * 36. ஒரு வீண் வார்த்தைக்கும் கணக்குக் கொடுக்கவேண்டியிருக்குமென்று சேசு நாதர்சுவாமி சொல்லுகிறதினாலே அற்பக் குற்றங்களுக்கு தண்டனையாக மறுலோகத்தில் உத்தரிக்கிற ஸ்தலமிருக்கிறதென்று வெளியாகிறது. 38. இவ்விடத்தில் அடையாளமென்பது புதுமை, அல்லது ஆச்சரியமான செய்கை என்று அர்த்தமாம். இன்னும் வேறிடங்களிலும் இப்படியே அர்த்தமாம்.

Matthew 12:36

ஊமைக்காகவும் உன்னிடத்தில் வருகிற கைவிடப்பட்டவர்களுக் காகவும் உன் வாயைத் திற.

Proverbs 31:8

எனக்கு மிகவும் பிரியமான சகோதரரே, இதை நீங்கள் அறிந்திருக் கிறீர்கள். எந்த மனிதனும் கேட்கிறதுக்குத் தீவிரமாயிருக்கக்கடவான்; பேசுகிறதற்கும் கோபிக்கிறதற்குமோ தாமதம் பண்ணக்கடவான். (பழ. 17;27.)

James 1:19

மனிதன் தன் வாயின் வாக்கில் சந்தோஷிக்கிறான்; காலத்துக்கேற்ற வசனமே உத்தமமாம்.

Proverbs 15:23

என் பிள்ளைகளே, நம்முடைய சிநேகம் வார்த்தையிலும் நாவிலும் இராமல், கிரியையிலும் உண்மையிலும் இருக்கவேண்டியது.

1 John 3:18

அதிக பேச்சில் பாவமிராமல் போகாது; தன் உதடுகளை மட்டு கட்டுகிறவனோ மகா விவேகி.

Proverbs 10:19

சாந்தமான பதில் கோபத்தை அடக்கும்; கடுஞ் சொல் கோபத்தை மூட்டும் (பழ.25:15).

Proverbs 15:1

நாமெல்லோரும் அநேக காரியங்களில் தவறிப்போகிறோம். ஆகிலும் யாதாமொருவன் வார்த்தையில் தவறாதிருந்தால், அவன் உத்தம புருஷன். ஏனெனில் அவன் தன் சரீரமுழுமையும் கடிவாளத்தால் நடப்பித்துக் கொள்ள வல்லவன்.

James 3:2

வஞ்சனையாய் நடக்கிறவன் இரகசியங்களை வெளியாக்குகிறான்; மனப் பிரமாணியோ தன் சிநேகித னின் இரகசியத்தை மறைக்கிறான்.

Proverbs 11:13

மேலும் உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்திருப்பா னாகில், நீ போய், நீயும் அவனுந் தனித் திருக்கையில் அவனைக் கடிந்துகொள். அவன் உனக்குக் காது கொடுத்தால் உன் சகோதரனை ஆதாயமாக்கிக்கொள் வாய். (லூக். 17:3: லேவி. 19:17; சர்வப். 19:13; இயா . 5:19, 20.)

Matthew 18:15

எத்தியோப்பியர் அவருக்கு முன் பணிந்து வணங்குவார்கள்; அவருடைய சத்துருக்கள் (அவருக் குத்) தண்டம் பண்ணுவார்கள்.

Psalms 71:8

ஞானியுடைய வாய்மொழி கள் மதுரமாயிருக்கின்றன; மூடனு டைய உதடுகளோ அவனைத் தாழே விழத்தாட்டும்.

Ecclesiastes 10:12

ஏனென்றால் நீங்கள் இருளிலே சொன்னவைகள் வெளிச்சத்திலே சொல் லப்படும்; நீங்கள் அறைகளிலே காதுக் குள் பேசினது வீடுகளின் மேலே பிரசங் கிக்கப்படும்.

Luke 12:3

அவ்வண்ணமே, இஸ்பிரீத்துவானவரும் நமது பலவீனத்தைத் தாங் கிக்கொண்டுவருகிறார். எவ்வாறெனில், நாம் தக்கபடி மன்றாடிக் கேட்கிற தென்னவென்று அறியாமலிருக்கி றோம். ஆனால் இஸ்பிரீத்துவானவரே நமக்காக வாக்குக்கெட்டாத பெரு மூச்சுகளோடு பிரார்த்திக்கிறார்.

Romans 8:26

அல்லாமலும் நீங்கள் ஜெபம் செய்யும்போது அஞ்ஞானிகளைப் போல வளர்த்துச் சொல்லாதேயுங்கள். ஏனென் றால் தங்களுடைய சொல் மிகுதியினால் தங்கள் மன்றாட்டுக் கேட்டருளப்படு மென்று நினைக்கிறார்கள்.

Matthew 6:7

ஆலோசனை எங்கே இல்லையோ அங்கே சிந்தனைகள் சிதைந்துபோகின்றன; யோசனைக் காரர் எங்கே அதிகமோ அங்கே (சிந்தனைகள்) பலப்படுகின்றன.

Proverbs 15:22

எப்படியெனில், ஆண்டவரா கிய சேசுநாதரை உன் வாயினால் அறிக்கையிட்டு, சர்வேசுரன் அவரை மரித்தோரிலிருந்து உயிர்ப்பித்தார் என்று உன் இருதயத்தில் விசுவசிப்பாயாகில் இரட்சிக்கப்படுவாய்.

Romans 10:9

ஆண்டவர் நல்லவராகவும், அவருடைய கிருபாகடாட்சம் என்று முள்ளதுமாகவும் இருக்கிறபடி யினாலே அவரைத் துதியுங்கள் (யூதித். 13:21).

Psalms 105:1


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |