Topic : Speaking

நல்லவன் தன் உள்ளமாகிய நற்கருவூலத்தினின்று நல்லவற்றை எடுத்துக்கொடுக்கிறான். தீயவனோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக்கொடுக்கிறான். ஏனெனில், உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்.

Luke 6:45

சாவும் வாழ்வும் நாவிலிருந்தே (விளைகின்றன). அதை நேசிக்கிறவர்களே அதன் கனியை உண்பார்கள்.

Proverbs 18:21

தீய சொல் எதுவும் உங்கள் வாயினின்று வராதிருக்கட்டும். கேட்போருக்கு அருட் பயன் விளையுமாறு தேவைக்கு ஏற்றபடி ஞான வளர்ச்சி தரக்கூடிய நல்ல வார்த்தைகளையே சொல்லுங்கள்.

Ephesians 4:29

தன் நாவைக் காக்கிறவன் தன் ஆன்மாவையே காப்பாற்றுகிறான். ஆனால், பேச்சில் கவனமில்லாதிருப்பவன் தீமையைச் சுமக்கிறான்.

Proverbs 13:3

மதியீனனுங்கூட மௌனமாயிருப்பானாயின் ஞானியாகவும், தன் உதடுகளை மூடுவானாயின் அறிவுடையோனாகவும் மதிக்கப்படுவான்.

Proverbs 17:28

சமாதான வாக்கு வாழ்வு தரும் மரமாம். அடக்கப்படாத வாய் உயிரை நசுக்கும்.

Proverbs 15:4

தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; பழிக்குப்பழி கூறாதீர்கள். மாறாக, ஆசி கூறுங்கள்; ஏனெனில், இறைவனின் ஆசிக்கு உரிமையாளர் ஆவதற்கே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

1 Peter 3:9

மனிதர் பேசும் பயனற்ற சொல் ஒவ்வொன்றுக்கும் தீர்வை நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Matthew 12:36

ஊமைக்காகவும், உன்னிடம் வருகிற கைவிடப்பட்டவர்களுக்காகவும் உன் வாயைத்திற.

Proverbs 31:8

என் அன்புச் சகோதரர்களே, இவை உங்களுக்குத் தெரியும். இனி இறை வார்த்தையைக் கேட்பதற்கு விரைதல் வேண்டும்; பேசுவதற்கோ, தாமதித்தல் வேண்டும்; சினங்கொள்வதற்கும் தாமதித்தல் வேண்டும்.

James 1:19

மனிதன் தன் வாயின் வாக்கில் மகிழ்கிறான். காலத்துக்கேற்ற உரையே சிறந்ததாம்.

Proverbs 15:23

அன்புக் குழந்தைகளே, நம் அன்பு சொல்லிலும் பேச்சிலும் இராமல், செயலில் விளங்கும் உண்மையான அன்பாய் இருக்கட்டும்.

1 John 3:18

நீண்ட பேச்சில் பாவம் இராமற் போகாது. தன் உதடுகளை அடக்குகிறவனோ பெரிய விவேகி.

Proverbs 10:19

சாந்தமான பதில் கோபத்தை அடக்கும். கடுஞ் சொல் கோபத்தை மூட்டும்.

Proverbs 15:1

ஏனெனில், நாம் அனைவரும் பலவற்றில் தவறுகிறோம். தவறான பேச்சுக்கு இடங்கொடாதவன் தன் முழு உடலையும் கட்டுப்படுத்த வல்லவன்; அவனே நிறைவு பெற்றவன்.

James 3:2

வஞ்சனையாய் நடக்கிறவன் இரகசியங்களை வெளியாக்குகிறான். பிரமாணிக்கமுள்ளவனோ தன் நண்பனின் இரகசியத்தை மறைக்கிறான்.

Proverbs 11:13

"உன் சகோதரன் உனக்கு எதிராகக் குற்றஞ்செய்திருந்தால் நீ போய், நீயும் அவனும் தனித்திருக்கையில் அவனைக் கண்டித்துப்பார். அவன் உனக்குச் செவிசாய்த்தால் உன் சகோதரனை உன்வச மாக்கிக்கொள்வாய்.

Matthew 18:15

என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே: நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே.

Psalms 71:8

ஞானியின் வாய்மொழிகள் இனிமையாய் இருக்கின்றன. மூடனுடைய உதடுகளோ அவனைத் தாழ விழத்தாட்டும்.

Ecclesiastes 10:12

ஆதலின், நீங்கள் இருளில் கூறியதெல்லாம் ஒளியில் கேட்கப்படும். அறைகளில் காதோடு காதாய்ப் பேசியது கூரைமீதிருந்து அறிவிக்கப்படும்.

Luke 12:3

அவ்வாறே நம் வலுவற்ற நிலையில் நமக்கு ஆவியானவர் துணைநிற்கிறார்; ஏனெனில், செபிக்க வேண்டிய முறையில் செபிப்பதெப்படி என நாம் அறியோம்; ஆவியானவர் தாமே சொல்லொண்ணாப் பெருமூச்சுகளோடு பரிந்து பேசிச் செபிக்கிறார்.

Romans 8:26

செபம் செய்யும்பொழுது, புறவினத்தாரைப்போல நீங்கள் பிதற்றவேண்டாம். அதிகம் பேசுவதால், தங்கள் செபம் கேட்கப்படும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

Matthew 6:7

ஆலோசனை எங்கே இல்லையோ அங்கே சிந்தனைகள் சிதைந்துபோகின்றன. சிந்திப்போர் எங்கே அதிகமோ அங்கே (சிந்தனைகள்) வலுப்படுகின்றன.

Proverbs 15:22

அந்த வார்த்தை நாங்கள் அறிவிக்கிற விசுவாச அறிக்கையே. ஏனெனில், 'இயேசு ஆண்டவர்' என உன் வாயினால் அறிக்கையிட்டு, கடவுள் அவரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்தார் என உன் உள்ளத்தில் விசுவசித்தால், நீ மீட்புப் பெறுவாய்.

Romans 10:9

அல்லேலூயா! ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; அவர்தம் திருப்பெயரைச் சொல்லி வழிபடுங்கள்: எல்லா இனத்தாரும் அவருடைய செயல்களை அறியச் செய்யுங்கள்.

Psalms 105:1


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |