Topic : Savior

நாம் சர்வேசுரனைச் சிநேகித்ததினால் அல்லவே, அவரே நம்மை முந்திச் சிநேகித்து, நம்முடைய பாவங்களுக்குப் பரிகாரப்பலியாகத் தமது குமாரனை அனுப்பினதிலே அவருடைய அன்பு இன்னதென்று விளங்குகின்றது.

1 John 4:10

(அவை ஏதெனில்,) என் இரட்சகர் உயிரோடிருக்கிறார் என்றும், கடைசி நாளிலே நான் மண்ணிலிருந் தும் உயிர்த்தெழுந்திருப்பேன் என்றும் அறிந்திருக்கிறேன்.

Job 19:25

நம்முடைய பாவங்களுக்கு அவரே பிராயச்சித்தப்பலியாய் இருக்கிறார். நம்முடைய பாவங்களுக்காக மாத்திர மல்ல, சர்வலோக பாவங்களுக்காகவும் அவர் பிராயச்சித்தப்பலியாமே.

1 John 2:2

அதேதெனில்: இன்று தாவீதின் நகரத்தில் கிறீஸ்துநாதராகிய இரட்சகர் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார்.

Luke 2:11

நான் ஜீவிக்கிறேன்; ஆனாலும் நானல்ல; கிறீஸ்துநாதர்தான் என்னில் ஜீவிக்கிறார். ஏனெனில் நான் இப்போது சரீரத்தில் ஜீவிக்கிறதோ, இது என்னைச் சிநேகித்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவசுதனைப் பற்றும் விசுவாசத்தினாலே ஜீவிக்கிறேன். *** 20. மனுஷ உயிர் என்னிடமிருந்தபோதிலும், சேசுக்கிறீஸ்துநாதர் தம்முடைய இஷ்டப்பிரசாதத்தினாலே என்னிடம் வசித்து, என் நினைவு பற்றுதலெல்லாம் ஆண்டு நடத்திவருவதால், அவரே என்னிடத்தில் ஜீவிக்கிறார் என்று அர்ச். சின்னப்பர் சொல்லுகிறாரென்றறிக.

Galatians 2:20

அவர் தேவரூபமாயிருக்கையில் தாம் சர்வேசுரனுக்குச் சரிசமானமாயிருப்பதைத் திருட்டென்று எண்ணாமல்.
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலாகி, மனுரூபமாகக் காணப்பட்டார்.
தம்மைத்தாமே தாழ்த்தி, மரண மட்டுக்கும் அதாவது சிலுவை மரண மட்டுக்கும் கீழ்ப்படிதலுள்ளவரானார். (எபி. 2:9.)

Philippians 2:6-8

ஆகையால் இவர் நமக்காக மனுப்பேசுவதற்கு எப்போதும் ஜீவிய ராயிருந்து, தமது மூலமாய்ச் சர்வே சுரனிடத்தில் அண்டிவருகிறவர்களை என்றென்றைக்கும் இரட்சிக்க வல்ல வராயிருக்கிறார்.

Hebrews 7:25

எல்லாரும் பாவஞ்செய்து, கடவுளின் மகிமையற்றவர்களாகி,
அவருடைய கிருபையால் கிறீஸ்து சேசுநாதரிடத்திலுள்ள இரட் சணியத்தால் இலவசமாய் நீதிமான்க ளாக்கப்படுகிறார்கள்.

Romans 3:23-24

நமது விசுவாசத்தின் ஆதி கர்த்தாவும், அதைச் சம்பூரணமாக்குகிறவருமாகிய சேசுநாதரை எப்போதும் கண்முன்பாக வைத்துக்கொண்டு, நமக்குக் குறிக்கப்பட்டிருக்கிற யுத்தத்துக்குப் பொறுமையோடு ஓடக்கடவோம். அவர் சந்தோஷ ஜீவியம் தமக்குமுன் வைக்கப்பட்டிருக்க, அவமானத்துக்குக் கூச்சப்படாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டு, இப்பொழுது சர்வேசுரனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார்.

Hebrews 12:2

அவருடைய வரப்பிரசாத பெருக்கத்தின்படியே இவருடைய இரத்தத்தால் நமக்கு இவரிடத்தில் பாவப் பொறுத்தலாகிய இரட்சணியம் உண்டாயிருக்கிறது.

Ephesians 1:7

உங்கள் பிதாக்கள் வழியாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான ஆசாரங்களினின்று அழிவுள்ள பொன்னினாலும், வெள்ளியினாலும் நீங்கள் இரட்சிக்கப்படாமல்,
மாசுமறையற்ற ஆட்டுக்குட்டிக் கொப்பாகிய கிறீஸ்துநாதருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அறிந்திருக்கிறீர்கள். (1 கொரி. 6:20; 7:23; எபி. 9:14; 1 அரு. 1:7; காட்சி. 1:5.)

1 Peter 1:18-19

நாம் சர்வேசுரனுக்குச் சத்துருக்களாயிருக்கையிலே, தேவ சுதனு டைய மரணத்தினால் அவரோடு சமாதானமாக்கப்பட்டிருக்க, சமாதான மாக்கப்பட்டபின்பு அவருடைய ஜீவனால் நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

Romans 5:10

அப்பொழுது, தேவதூதன் அந்த ஸ்திரீகளைப் பார்த்து: நீங்கள் பயப் படவேண்டாம், சிலுவையிலே அறை யுண்ட சேசுநாதரைத் தேடுகிறீர்க ளென்று அறிவேன்.
அவர் இங்கே இல்லை . ஏனெனில் தாம் திருவுளம்பற்றினபடியே உயித் தெழுந்தார். ஆண்டவர் வைக்கப்பட் டிருந்த இடத்தை வந்து பாருங்கள்.

Matthew 28:5-6

(கடவுளால்) அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தைப் பெற் றுக்கொள்ளும்பொருட்டு முந்தின உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களைப் பரிகரிக்கும்படி தாம் அடைந்த மரணத்தால் புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராய் இருக்கிறார். (கலாத். 3:15; 1 தீமோ. 2:5.)

Hebrews 9:15

சம்பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்பட்டிருக்கிற யாவருக்கும் நித்திய ஈடேற்றத்தின் காரணராகி,

Hebrews 5:9

எஜிப்த்து தேசத்தினின்று உன்னை மீட்டு இரட்சித்த உன் தேவனாகிய ஆண்டவராயிருப்பது நாமே; நம்மையன்றி வேறு தெய்வந் தெரிந்துகொள்ளாதிருப்பாயாக! நமக்கு முன் உனக்கு வேறு இரட்சக ரில்லை (இசா.43:11).

Hosea 13:4


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |