Topic : Blameless

நான் கர்த்தருக்குக் சொன்ன தாவது: நீர் என் தேவனாயிருக்கிறீர்; ஏனெனில் என்னுடைய ஆஸ்திகள் உமக்கு வேண்டியதில்லை.
அவருடைய சொந்த பூமியி லுள்ள பரிசுத்தவான்களுக்கு எனது விருப்பங்களையெல்லாம் அதிசயிக் கப் பண்ணினார்.

Psalms 15:2-3

நாமெல்லோரும் அநேக காரியங்களில் தவறிப்போகிறோம். ஆகிலும் யாதாமொருவன் வார்த்தையில் தவறாதிருந்தால், அவன் உத்தம புருஷன். ஏனெனில் அவன் தன் சரீரமுழுமையும் கடிவாளத்தால் நடப்பித்துக் கொள்ள வல்லவன்.

James 3:2

ஆனால் இவையெல்லாவற்றிற்கும் மேலாக உத்தமதனத்தின் பந்தன மாகிய பரம அன்பைக் கொண்டிருங்கள்.

Colossians 3:14

நீங்கள் இவ்வுலகத்துக்கு ஏற்றபடி நடவாமல், சர்வேசுரனுடைய சித்தத் துக்கு இன்னது நலமாகவும், பிரிய மாகவும், உத்தமமாகவும் இருக்கிற தென்று அறிந்துகொள்ளும்படி உங்கள் மனதைப் புதிப்பித்து, உங்களைச் சீர்திருத்திக்கொள்ளுங்கள். (எபே. 5:17; 1 தெச. 4:3.)

Romans 12:2

ஆகையால் எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும், தத்தளிப் பில்லாமலும் நிறைவேற்றிவாருங்கள். (1 இரா. 4:9.)
இத்தன்மையாய்க் கோணலும், மாறுபாடுள்ளதுமான ஜனத்தின் நடுவில் நீங்கள் குற்றமற்றவர்களாகவும், சர்வே சுரனுடைய நேர்மையான பிள்ளைக ளாகவும், மாசற்றவர்களாகவும் இருப் பீர்கள். (மத். 5:16.)
ஏனெனில் நான் வீணாக ஓடினதும், வீணாகப் பிரயாசைப்பட்டதுமில்லையென்கிறதினாலே கிறீஸ்துவின் நாளில் எனக்கு மகிமையுண்டாயிருக்கும்படிக்கு நீங்கள் அவர்கள் நடுவிலே ஜீவ வாக்கியத்தைக் கையிலேந்திக்கொண்டு, உலகத்தில் சுடர்களைப் போல் பிரகாசிக்கிறீர்கள். (1 தெச. 2:19.)

Philippians 2:14-16

சகோதரரே, உங்களுக்குள்ளே பிரிவினைகளில்லாமல், நீங்களனைவரும் ஒரே காரியத்தைப் பேசவும், ஒரே மன மும் ஒரே அபிப்பிராயமுமுள்ள உத்தம ராயிருக்கவும் வேண்டுமென்று நம்மு டைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து வின் நாமத்தினாலே நான் உங்களை மன்றாடுகிறேன். (பிலிப். 2:2; 3:16.)

1 Corinthians 1:10

ஒருவரும் எவனுக்காவது தின்மைக்குத் தின்மை செய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்குள்ளும் மற்றெல்லாருக்குள்ளும் எப்போதும் நலமானதைச் செய்யும்படி நாடுங்கள். (பழ. 17:13; உரோ. 12:17.)

1 Thessalonians 5:15


ஆனாலும் நான் போகிற வழியை அவர் அறிவார்; அக்கினி யில் புடம்போட்ட பொன்னைப் போல் என்னைப் பரீட்சிக்கின்றாரே.
நானோ அவருடைய கால் அடிகளைப் பற்றி நடந்தேன்; அவரு டைய நெறியை விட்டு விலகாமலே அவரைப் பின்சென்றேன்.

Job 23:10-11

நான் இக்கட்டுப்படுகையில் ஆண்டவரை நோக்கி அபயசத்த மிட்டேன்; அவர் என் மன்றாட்டைக் கேட்டருளினார்.

Psalms 119:1

நம்முடைய பிதாவாகிய சர்வேசுரனுடைய சமுகத்தில் பரிசுத்தமும் மாசற்றதுமான தேவபக்தி ஏதெனில், அநாதைப்பிள்ளைகளையும், விதவை களையும் அவர்களுடைய துன்பத்தில் சந்திக்கிறதும், இப்பிரபஞ்சத்தினின்று தன்னை மாசற்றவனாய்க் காப்பாற்று கிறதும் என்க. * 14-15. இதிலே அர்ச். இயாகப்பர் இருவகைச் சோதனைகளைப்பற்றிப் பேசுகிறார். அதன் முதலாவது: கஸ்தி, துன்பம், வியாதி, தரித்திரம் முதலிய பாவத்துக்குச் சம்பந்தப்படாததும், ஆத்துமத்துக்குப் புறத்திப்பட்டதுமான சோதனைகள். அப்படிப் பட்ட சோதனைகளைச் சர்வேசுரன்தான் அனுப்புகிறார். ஆகையால் நல்ல கிறீஸ்துவன் அவைகளெல்லாம் சர்வேசுரனாலே அனுப்பப்பட்ட சோதனைகளென்று அறிந்து, சர்வேசுரனுடைய சித்தத்துக்கு இணங்கி, அவைகளைப் பொறுமையோடு சகித்துக் கொள்வதினால் பாக்கியவானாவான். ஏனென்றால் நாம் பொறுமையோடு சகித்துக் கொள்ளுகிற அப்படிப்பட்ட சோதனைகள் பாவத்துக்கு உத்தரிப்பாக ஆத்துமத்தைச் சுத்திகரிக்கவும், புண்ணிய பலன்களைப் பெறுவிக்கவும் உதவுவதுமன்றி, அவைகளுக்குச் சம்பாவனையாக மோட்சத்தில் நித்திய ஜீவிய முடியைப் பெறுவதற்குங் காரணமா யிருக்கின்றன. எல்லா அர்ச்சியசிஷ்டவர்களும் இப்படிப்பட்ட சோதனைகளால் பரீட்சிக்கப்படுவதுந்தவிர அர்ச்சியசிஷ்டதனத்தில் எவ்வளவுக்கு உயர்த்துபோகிறார்களோ, அப்படிப்பட்ட சோதனைகளால் அவ்வளவுக்கு அதிகமாய்ச் சோதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. அப்படியே தட்டானானவன் பொன்னை உலையில் சோதிக்கிறது போல் சர்வேசுரன் நீதிமான்களைப் பரிசோதிக்கிறாரென்று ஞானாகமம் 3-ம் அதிகாரம் 5-ம், 6-ம் வசனங்களில் சொல்லியிருக்கின்றது. இந்தப்பிரகாரமாய்ச் சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமாயிருந்த அபிரகாமுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டது. இவ்வண்ண மாய் யோபு ஆகமம் முதலாம் அதிகாரம் 8-ம்வசனத்தில்: என் தாசனாகிய யோபு என்பவனைப்போல் சற்குணமுள்ளவனும், நீதிமானும், சர்வேசுரனுக்குப் பயந்து தின்மைக்கு விலகி நடக்கிறவனும் இல்லையென்று சர்வேசுரன் தாமே அவரைக் குறித்து சாட்சி கொடுத்தாலும், நிகரில்லாத துன்பங்களால் அவரைச் சோதிக்கும்படி சர்வேசுரன் சாத்தானுக்கு உத்தரவு கொடுத்தார். அப்படியே தோபியாஸ் சர்வேசுரனுக்குப் பிரியமுள்ளவராயிருந்ததினால், சோதனைகளால் பரீட்சிக்கப்பட வேண்டியதாயிருந்த தென்று தோபியாஸ் ஆகமம் 12-ம் அதிகாரம் 13-ம் வசனத்தில் சொல்லப்பட்டிக்கிறது. 2-ம் வகை சோதனையாவது: விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம், பிறர்சிநேகம் முதலிய புண்ணியங்

James 1:27

இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றையும் கேட்கவில்லை. கேளுங்கள், உங்கள் சந்தோஷம் பூரணமாகும்பொருட்டு பெற்றுக் கொள்வீர்கள்.

John 16:24

சேசுநாதர் அவனை நோக்கி: நீ உத்தமனாயிருக்க விரும்பினால், போய், உனக்குள்ளவைகளை விற்றுத் தரித்திரருக்குக்கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷ முண்டாயிருக்கும். பின்னும் வந்து என்னைப் பின்செல் என்றார்.

Matthew 19:21

உத்தமமான எந்தக் கொடையும், பூரணமான எந்த வரமும் ஒளிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்குவதால், மேலாவிலிருந்து வருகின்றது. அவரிடத்தில் யாதொரு வேற்றுமையும், விகற்பத்தின் நிழலுமில்லை. (மத். 7:11.)

James 1:17

தேவனுடைய வழி மாசற்ற வழியே. கர்த்தருடைய வசனம் புட மிடப்பட்ட வசனமே. அவர்மேல் எவர்கள் நம்பிக்கையுள்ளவர்களா யிருக்கிறார்களோ அவர்கள் அனை வருக்கும் அவர் கேடயமாயிருக்கின் றவர்.

2 Samuel 22:31

சம்பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்பட்டிருக்கிற யாவருக்கும் நித்திய ஈடேற்றத்தின் காரணராகி,

Hebrews 5:9

அவர் நேர்மையுடையோரின் இரட்சிப்பைக் காப்பாற்றுகிறார்; எதார்த்தமாய் நடக்கிறவர்களையும் ஆதரிக்கிறார்.

Proverbs 2:7


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |