Topic : Relationships

வல்லமையுள்ள பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார் ? அவள் தூரமாய்க் கடைகோடிகளினின்று அடையப்பெற்ற செல்வமாம்.

Proverbs 31:10

கணவர்களே 'கிறிஸ்து திருச்சபைக்கு அன்பு செய்தது போல் நீங்களும் உங்கள் மனைவியருக்கு அன்பு செய்யுங்கள்.
ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்கு அன்பு செய்து அதற்காகத் தம்மையே கையளித்தார்.

Ephesians 5:25-26

ஒருவனை யாரேனும் மற்றொருவன் மேற்கொள்ளப் பார்த்தால் இருவரும் கூடி அவனுக்கு எதிர்த்து நிற்கலாம். முப்புரிக் கயிறு அறுவது கடினம்.

Ecclesiastes 4:12


மனைவியரே, உங்கள் கணவருக்கு பணிந்து நடங்கள். இதுவே ஆண்டவருக்குள் வாழும் முறை.
கணவர்களே, உங்கள் மனைவியர்க்கு அன்பு காட்டுங்கள், அவர்கள் மேல் எரிந்து விழாதீர்கள்.

Colossians 3:18-19

இதை மனத்தில் வைத்து, முழு ஊக்கங்காட்டி, உங்களிடம் விசுவாசத்தோடு நற்பண்பும்,
நற்பண்போடு அறிவும், அறிவோடு தன்னடக்கமும், தன்னடக்கத்தோடு மனவுறுதியும்,
மனவுறுதியோடு இறைப்பற்றும், இறைப்பற்றோடு சகோதர நேசமும், சகோதர நேசத்தோடு அன்பும் இணைந்திருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

2 Peter 1:5-7

மேலும், ஆண்டவராகிய கடவுள்: மனிதன் தனிமையாய் இருப்பது நன்றன்று; ஆதலால் அவனுக்குச் சரிநிகரான ஒரு துணைவியை அவனுக்கென உண்டாக்குவோம் என்றார்.

Genesis 2:18

ஆனால் கெட்ட நடத்தை எங்கும் மிகுதியாயிருப்பதால், ஒவ்வொருவனுக்கும் மனைவி இருக்கட்டும். ஒவ்வொருத்திக்கும் கணவன் இருக்கட்டும்.

1 Corinthians 7:2

அவிசுவாசிகளுடன் நீங்கள் தகாத முறையில் ஒரே நுகத்தடியில் இணைந்திருக்கலாகாது. இறை நெறிக்கும் தீய நெறிக்கும் தொடர்பேது?

2 Corinthians 6:14

இரும்பு இரும்பால் தீட்டப்படுகின்றது. மனிதனோ தன் நண்பனால் தூண்டப்படுவான்.

Proverbs 27:17

வீடும் செல்வமும் தாய் தந்தையரால் தரப்படுகின்றன. ஆனால், தக்க விவேகமுள்ள மனைவி ஆண்டவராலேயே (தரப்படுகிறாள்).

Proverbs 19:14

இப்படி நான் சொல்லும்போது, நான் தேடுவது மனிதருடைய நல்லெண்ணமா, கடவுளுடைய நல்லெண்ணமா? நான் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கவா பார்க்கிறேன்? இன்னும் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கப் பார்த்தால், நான் கிறிஸ்துவின் ஊழியனாய் இருக்கவே முடியாது.

Galatians 1:10

நண்பன் எக்காலமும் நேசிக்கிறான்; துன்பத்திலேயும் சகோதரனாவான்.

Proverbs 17:17

மனைவியரே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல் உங்கள் கணவர்க்குப் பணிந்திருங்கள்.
ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோல் கணவன் மனைவிக்குத் தலையாய் இருக்கிறான். 'கிறிஸ்து திருச்சபையாகிய தம் உடலின் மீட்பர்.

Ephesians 5:22-23

நற்புகழ் அளவற்ற திரவியத்தைக் காட்டிலும் நல்லதாம். நன்கு மதிக்கப்பெறுவது வெள்ளியையும் பொன்னையும்விட மேலானதாம்.

Proverbs 22:1

உங்கள் மீது எங்களுக்குள்ள அன்பு பெருகுவது போல், ஒருவருக்கொருவர் மீதும் உங்களுக்குள்ள அன்பில் ஆண்டவர் உங்களை வளர்ந்தோங்கச் செய்வாராக.

1 Thessalonians 3:12

தன் உறவினரை, சிறப்பாகத் தன் சொந்த வீட்டாரைப் பார்த்துக் கொள்ளாதவன் விசுவாசத்தை மறுதலித்தவனே. அவன் அவிசுவாசியைவிடக் கேடு கெட்டவன்.

1 Timothy 5:8

தாய் தந்தையரைப் போற்று. மேலும், உன் மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான் மீதும் அன்பு காட்டுவாயாக" என்று கூறினார்.

Matthew 19:19

அப்படியிருக்க, தனித்து இருப்பதிலும் இருவராகக் கூடியிருப்பதே நலம். அவர்களுடைய கூட்டுறவினால் அவர்களுக்கு நன்மை உண்டாகும்.

Ecclesiastes 4:9


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |