Topic : Relationships

வல்லமையுள்ள ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவனார்? தூரமாய்க் கடைகோடிகளினின்றாம் அவளு டைய விலைமதிப்பு.

Proverbs 31:10

புருஷர்களே, கிறீஸ்துநாதர் திருச்சபையை நேசித்து, அதற்காகத் தம்மைத்தாமே கையளித்ததுபோல, நீங்களும் உங்கள் மனைவிகளை நேசியுங்கள். (கொலோ. 3:19.)
கிறீஸ்துநாதர் ஜீவ வாக்கியத்தைக்கொண்டு ஜல ஞானஸ்நானத்தால் அதைச் சுத்திகரித்துப் பரிசுத்தமாக்கவும்,

Ephesians 5:25-26

யாதாமொருவன் மற்றொரு வனை மேற்கொள்ளப்பார்த்தால் இருவருங் கூடி அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிக்கயிறு அறுவது வருத்தம்.

Ecclesiastes 4:12

ஆகையால் மனுஷர் உங்களுக்கு எதெதைச் செய்யவேணுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். ஏனெனில் வேதப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமிதுவே. (லூக் 6:31; தோபி. 4:16.)

Matthew 7:12

மனைவிகளே, கடமைப்படி உங்கள் புருஷர்களுக்கு ஆண்டவருக்குள் கீழ்ப்படிந்திருங்கள். (எபே. 5:22; 1 இரா. 3:1.)
பூமான்களே, உங்கள் மனைவிகளைச் சிநேகியுங்கள். அவர்களுக்குக் கசப்பாயிராதேயுங்கள். *** 19. உங்கள் மனைவிகளுக்குக் கசப்பாயிராமல் என்பதற்கு உங்கள் பேச்சுவார்த்தை நடபடிக்கைகளிலும், கண்டித்துப் புத்திசொல்லவேண்டிய விஷயங்களிலும் மனவருத்தத்தை உண்டுபண்ணாமல், பிரியத்தோடும் தயாளத்தோடும் நடத்தி வரவேண்டுமென்பது கருத்தாகும்.

Colossians 3:18-19

அப்படியிருக்க, நீங்களும் உங்களாலான முயற்சியெல்லாஞ் செய்து உங்கள் விசுவாசத்தோடு புண்ணியத்தையும், (கலாத். 5:22.)
புண்ணியத்தோடு விவேகத்தையும், விவேகத்தோடு இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடு பொறு மையையும், பொறுமையோடு பக்தி யையும்,
பக்தியோடு சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடு தேவ சிநேகத்தையும் சேர்த்து அநுசரியுங்கள்.

2 Peter 1:5-7

பின்னையும் கர்த்தராகிய கடவுள்: மனிதன் தனிமையாயிருப் பது நல்லதல்லவாதலால் அவனுக்குச் சரிசமானமாக ஒரு துணைவியை அவனுக்கு உண்டாக்குவோமாக, என்றார்.

Genesis 2:18

ஆயினும் வேசித்தனத்தை விலக்கும்பொருட்டு அவனவன் தன் மனைவியையும், அவளவள் தன் புருஷனையும் உடையவர்களாயிருக்கட்டும். *** 2. இந்த வாக்கியத்தில் விவாகஞ் செய்துகொண்ட ஸ்திரீபூமான்களைப்பற்றிப் பேசியிருக்கிறதல்லாதே சகலரையுங் குறித்துப் பொதுப்படையாகப் பேசவில்லை. சகலரும் விவாகஞ் செய்துகொள்வது அர்ச். சின்னப்பருடைய நோக்கமானால், 8-ம் வசனத்தில் கலியாணஞ் செய்யாத வாலர்களையும் கன்னிகைகளையுங் குறித்து அவர்கள் தம்மைப்போல் இருக்கவேண்டுமென்று அவர் ஆசிப்பதேன்? அப்படியானால் தாம் சொன்னதைத் தாமே மறுத்துப் பேசுகிறாரென்கவேண்டும். ஆகையால் இந்த வசனத்தில் கலியாணஞ் செய்துகொண்டவர்களாகிய ஸ்திரீபூமான்கள் ஒருவரோடொருவர் ஐக்கியமாய் இருக்கவேண்டியதைப்பற்றி மாத்திரம் பேசுகிறாரென்று அறியவும்.

1 Corinthians 7:2

அவிசுவாசிகளோடு ஒரு நுகத்தில் இணைக்கப்படாதிருங்கள். நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் கூட்டேது?

2 Corinthians 6:14

இரும்பு இரும்பால் தீட்டப் படுகின்றது; மனிதனோ தன் சிநேகித னால் தூண்டப்படுவான்.

Proverbs 27:17

மனையுந் தனமுந் தாய் தந்தை யரால் தரப்படுகின்றன; ஆனால் தக்க விவேகமுள்ள மணைவி ஆண்ட வராலேயே.

Proverbs 19:14

இப்போது நான் மனிதர்களுக்கு ஏற்கவோ அல்லது சர்வேசுரனுக்கு ஏற்கவோ இதைப் போதிக்கிறேன்? மனிதர்களுக்குப் பிரியப்படத்தேடுகிறேனோ? நான் இன்னும் மனிதர்களுக்குப் பிரியப்படப் பார்த்தால் கிறீஸ்துவின் ஊழியனாயிருக்க மாட்டேன்.

Galatians 1:10

சிநேகிதவனாயிருக்கிறவன் எக்காலமும் நேசிக்கிறான்; இக்கட் டிலேயும் சகோதரனாவான்.

Proverbs 17:17

மனைவிகள் கர்த்தருக்கென்றாற்போல் தங்கள் புருஷர்களுக்குக் கீழ்ப்படியக்கடவார்கள். (ஆதி. 3:16; கொலோ. 3:18.)
ஏனெனில் கிறீஸ்துநாதர் திருச்சபைக்குத் தலைவராயிருக்கிறதுபோல புருஷனானவன் தன் மனைவிக்குத் தலைவனாயிருக்கிறான். அவர் தம்முடைய சரீரத்தின் இரட்சகராய் இருக்கிறாரல்லோ. (1 கொரி. 11:3; கொலோ. 1:18.)

Ephesians 5:22-23

நற்கீர்த்தி அளவற்ற திரவியத் தைக் காட்டிலும் அதிக நல்லதாம்; நன்றாய்ப் பதிக்கப்படுவது வெள்ளி யையும், பொன்னையும் விட மேலானதாம் (சர்வ. 7:2).

Proverbs 22:1

கர்த்தர் உங்களைப் பலுகச் செய்து, உங்கள் மட்டில் எங்களுக்குள்ள சிநேகம் எப்படியோ, அப்படியே ஒருவரொருவர்மட்டிலும் மற்றெல்லா மனுஷர்மட்டிலும் உங்களுக்குள்ள சிநேகத்தையும் ஓங்கிவளரப் பண்ணுவாராக.

1 Thessalonians 3:12

ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாய்த் தன் வீட்டாரையும் விசாரியாதிருந்தால், அவன் விசுவாசத்தை மறுத்தவனும், அவிசுவாசியைவிட அதிகக் கெட்ட வனுமாய் இருக்கிறான்.

1 Timothy 5:8

உன் பிதாவையும், மாதாவை யும் சங்கித்திருப்பாயாக; உன்னைப் போல உன் பிறனையும் சிநேகிப்பா யாக என்றார்.

Matthew 19:19

அப்படியிருக்க, ஒன்றியாயிருக் கிறதிலும் இருவராகக் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய கூட்டுற வினால் அவர்களுக்கு நன்மையுண் டாகும்.

Ecclesiastes 4:9


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |