Topic : Pride

அகந்தை எங்கே இருக்கின்றதோ அங்கே அவமானமும், தாழ்ச்சி எங்கேயோ அங்கே ஞானமும் (உண்டு).

Proverbs 11:2

தெய்வ பயம் தீமையைப் பகைக்கின்றது. நானும் அகந்தையையும் வீம்பையும் தீயவழியையும், இரு பொருள்பட மொழியும் நாவையும் வெறுக்கிறேன்.

Proverbs 8:13

உங்களுக்குள் ஒன்றுபட்டு வாழுங்கள். உயர்வு மனப்பான்மை கொள்ளாமல் தாழ்ந்தவர்களோடு அன்பாய்ப் பழகுங்கள். உங்களை நீங்களே அறிவாளிகளாய்க் கருதாதீர்கள்.

Romans 12:16

ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "அவனுடைய முகத்தையும் உடல் உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நாம் அவனைத் தள்ளி விட்டோம். மனிதன் பார்க்கிறது ஒருவிதம், நாம் தீர்ப்பிடுவது வேறுவிதம். மனிதன் வெளிக்குத் தோன்றுபவற்றை மட்டும் பார்க்கிறான்; ஆண்டவரோ இதயத்தை பார்க்கிறார்" என்று சொன்னார்.

1 Samuel 16:7

பெருமை பாராட்டுவோன் ஆண்டவரைப்பற்றிப் பெருமை பாராட்டுக."
ஏனெனில், தன்னைப் பற்றித் தானே நற்சான்று கூறுபவன் சான்றோன் அல்லன்; ஆனால், ஆண்டவர் யாரைப்பற்றி நற்சான்று அளிக்கிறாரோ அவனே சான்றோன்.

2 Corinthians 10:17-18

அகங்காரியைத் தாழ்வு பின்தொடர்கின்றது. மனத்தாழ்ச்சியுடையோன் மகிமை அடைவான்.

Proverbs 29:23

ஊனியல்பு இச்சிப்பதும், கண்கள் காண இச்சிப்பதும், செல்வத்தில் செருக்கு கொள்வதுமாகிய இவ்வுலகிற்குரியவையெல்லாம் பரம தந்தையிடமிருந்து வரவில்லை; உலகிலிருந்தே வருகின்றன.

1 John 2:16

தாழ்வு வருமுன் மனிதன் தன் மனத்தில் செருக்குக் கொள்வான். மகிமைக்கு முன்னே தாழ்மை வருகின்றது.

Proverbs 18:12

மேலும், "மனிதனுள்ளிருந்து, வருவதே அவனை மாசுபடுத்தும்.
ஏனெனில், மனிதர் உள்ளத்தினின்றே தீய எண்ணம், மோகம்,
களவு, கொலை, விபசாரம், ஃ பேராசை, தீச்செயல், கபடு, கெட்ட நடத்தை, பொறாமை, பழிச்சொல், செருக்கு, மதிகேடு ஆகியவை வெளிவரும்.
இத்தீயவை யாவும் உள்ளத்திலிருந்து வந்து மனிதனை மாசுபடுத்தும்" என்றார்.

Mark 7:20-23

உலகம் பொருட்படுத்துவதை ஒழித்து விட, உலகம் பொருட்படுத்தாததையும் தாழ்ந்ததெனக் கருதுவதையும், இகழ்ச்சிக்குரியதையும் கடவுள் தேர்ந்து கொண்டார்.
எந்த மனிதனும் கடவுள் முன் பெருமை பாராட்டாதபடி இவ்வாறு செய்தார்.

1 Corinthians 1:28-29

இவ்வுலகில் செல்வம் படைத்தவர் இறுமாப்புக் கொள்ளலாகாது. நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல், நமது இன்பத்துக்காக எல்லாவற்றையும் ஏராளமாக அளிக்கும் கடவுளில் மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும்.

1 Timothy 6:17

எனக்குள்ளதெல்லாம் நான் வாரி வழங்கினும் எரிப்பதற்கு என் உடலைக் கையளித்தாலும் அன்பு எனக்கு இல்லையேல், எனக்குப் பயன் ஒன்றுமில்லை.

1 Corinthians 13:3All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |