Topic : Pride

ஆங்காரம் எங்கே இருந்ததோ அங்கேயே அவமானமும்; தாழ்ச்சி எங்கேயோ அங்கே ஞானமும் (உண்டு).

Proverbs 11:2

தேவ பயந் தீமையைப் பகைக் கின்றது; நானும் அகந்தையையும், ஆங்காரத்தையும், தீய வழியையும். இரட்டிக்கிற மொழியையும் நாவை யும் அரோசிக்கின்றேன்.

Proverbs 8:13

ஒருவரோடொருவர் ஏக சிந்தனையுள்ளவர்களாய் இருங்கள். பெருமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களோடு ஒத்து நடங்கள். உங்களையே புத்திசாலிகளென்று எண்ணாதிருங்கள்.

Romans 12:16

ஆண்டவர் சமுவேலை நோக்கி: நீ அவனுடைய முகத்தையுஞ் சரீர உயரத்தையும் பார்க்காதே; ஏனெ னில், நான் அவனைத் தள்ளிவிட் டேன். மனுஷன் பார்க்கிறது ஒரு விதம், நாம் தீர்மானிக்கிறது வேறு விதம்; மனிதன் வெளிக்குத் தோன்று பவைகளைப் பார்க்கிறான்; ஆண்ட வர் இருதயத்தைப் பார்க்கிறா ரென்று சொன்னார் (சங். 7:10).

1 Samuel 16:7

எப்படியிருந்தும், மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரிடத்திலே மேன்மைபாராட்டுவானாக. (எரே. 9:23; 1 கொரி. 1:31.)
ஏனெனில் தன்னைத்தானே புகழுகிறவன் புகழ்ச்சிக்குரியவனல்ல. சர்வேசுரனாலே புகழப்படுகிறவனே புகழ்ச்சிக்குரியவன்.

2 Corinthians 10:17-18

ஆங்காரியைத் தாழ்மை பின் தொடர்கின்றது; மனத்தாழ்ச்சி யுடையோன் மகிமையை அடை வான் (யோபு. 22:29).

Proverbs 29:23

ஏனெனில் உலகத்திலுள்ள யாவும் சரீர இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவியத்தின் அகங்காரமுமாயிருக்கின்றது. அவைகள் பிதாவினிடத்தினின்று வராமல் உலகத்தினின்றே வருகின்றது.

1 John 2:16

தாழ்வு வருமுன் மனிதன் தன் மனதில் ஆங்காரம் கொள்வான்; மகிமைப்படுத்தப்படுமுன்னே தாழ்த்தப்படுகின்றது.

Proverbs 18:12

மனிதனுடைய இருதயத்திலி ருந்து புறப்படுகிறவைகளே மனிதனை அசுத்தப்படுத்துகின்றன.
ஏனெனில் மனிதனுடைய இரு தயத்துக்குள்ளிருந்து துர்ச்சிந்தனை களும், விபசாரங்களும், வேசித்தனங் களும், கொலைபாதகங்களும்,
களவுகளும், லோபித்தனங்க ளும், துஷ்டத்தனங்களும், கபடங்களும், காமவிகாரங்களும், வன்கண்ணும், தேவ தூஷணமும், ஆங்காரமும், மதிகேடும் புறப்படுகின்ற ன. (ஆதி. 6:5.)
இந்தத் தின்மைகளெல்லாம் உள்ளத்தினின்று புறப்பட்டு, மனி தனை அசுத்தப்படுத்துகின்றன என்றார்.

Mark 7:20-23

உள்ளவைகளை அழிக்கும்படி சர்வேசுரன் உலகத்தில் இழிவானவைகளையும், நீசமானவைகளையும், இல்லாதவைகளையும் தெரிந்துகொண்டார்.
ஏனெனில் மாம்சமான எவனும் அவருடைய சமுகத்தில் பெருமை பாராட்டாதபடிக்கு அப்படிச் செய் தருளினார்.

1 Corinthians 1:28-29

இப்பிரபஞ்சத்தில் ஐசுவரியராய் இருக்கிறவர்கள் ஆங்கார சிந்தை யுள்ளவர்களாய் இராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அநுபவிப்பதற்கு வேண்டிய யாவையும் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள சர்வேசுரன் பேரில் நம்பிக்கையாயிருக்கவும், (லூக். 12:21.)

1 Timothy 6:17

அன்றியும் என் ஆஸ்திபாஸ்திகளெல்லாவற்றையும் நான் ஏழைகளுக்குப் போஜனமாகப் பகிர்ந்தாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கும்படி கையளித்தாலும் என்னிடத்தில் தேவசிநேக மில்லாவிட்டால், எனக்குப் பிரயோசனம் ஒன்றுமில்லை. (மத். 6:2, 3.)

1 Corinthians 13:3



All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |