பெந்தெகொஸ்தே என்னும் திருநாளின்போது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். அப்பொழுது திடீரென, பெருங்காற்று வீசுவதுபோன்ற இரைச்சல் வானத்தினின்று உண்டாகி, அவர்கள் இருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
ஆனால், பரிசுத்த ஆவி உங்கள்மேல் வரும்போது, அவரது வல்லமையைப் பெற்று யெருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், மண்ணுலகின் இறுதி எல்லை வரைக்குமே நீங்கள் என் சாட்சிகளாயிருப்பீர்கள்" என்றார்.