பின்னும் பெந்த்தேகோஸ்தே என்னும் நாட்கள் முடிவாகையில் அவர் கள் எல்லாரும் ஒரே இடத்தில் ஒருமித்திருந்தார்கள்.
*** 1. பெந்தேகோஸ்தே நாளென்பது இஸ்ராயேல் ஜனங்கள் எஜிப்துநாட்டை விட்டுப் புறப்பட்ட ஐம்பதாம் நாள். சீனாய்மலையில் சர்வேசுரன் மோயீசனுக்கு வேதகற்பனை கொடுத்த நாளாமே. அந்த நாளை யூதர்கள் முக்கியமான திருநாளாகக் கொண்டாடி வருவார்கள். இந்தத் திருநாளுக்குப் பற்பல தூர தேசங்களிலிருந்து யூதர்களும், வேதத்தை அநுசரிக்கும் புறஜாதியரும் திரளாய்க் கூடிவருவது வழக்கமாம்.
அப்பொழுது பலத்த காற்றடித்தாற்போல, திடீரென வானத்தினின்று ஓர் முழக்கமுண்டாகி, அவர்கள் உட் கார்ந்திருந்த வீடு முழுமையும் நிரப்பிற்று.
Acts 2:1-2