Topic : Jesus

இயேசு அவர்களை உற்றுநோக்கி, "மனிதரால் இது முடியாது. ஆனால் கடவுளுக்கு அப்படியன்று. கடவுளால் எல்லாம் முடியும்" என்று சொன்னார்.

Mark 10:27

விசுவாசத்தைத் தொடங்கி வைத்தவரும், அதை நிறைவுபெறச் செய்பவருமான இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைப்போம். அவர் தம் முன்னே வைத்திருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, நிந்தையைப் பொருட்படுத்தாமல், சிலுவையைத் தாங்கினார். இப்பொழுது கடவுளது அரியணையின் வலப்புறத்தில் அமர்ந்திருக்கிறார்.

Hebrews 12:2

அதற்கு இயேசு, "உனக்கு விசுவாசம் இருந்தால், கடவுளின் மகிமையைக் காண்பாய் என்று நான் சொல்லவில்லையா ?" என்றார்.

John 11:40

இயேசு கடவுளின் மகன் என ஏற்றுக்கொள்பவன் எவனோ அவனுள் கடவுள் நிலைத்திருக்கிறார்; அவனும் கடவுளுக்குள் நிலைத்திருக்கிறான்.

1 John 4:15

கிறிஸ்து இயேசுவில் இருந்த மனநிலையே உங்களிலும் இருப்பதாக.

Philippians 2:5

நான் அவற்றிற்கு முடிவில்லாவாழ்வு அளிக்கிறேன்; அவை என்றும் அழியா. எவனும் என் கையிலிருந்து அவற்றைக் கவர்ந்துகொள்வதில்லை.
அவற்றை எனக்களித்த என் தந்தை அனைவரிலும் பெரியவர்; என் தந்தையின் கையிலிருந்து எவனும் அவற்றைக் கவர்ந்துகொள்ள முடியாது.
நானும் தந்தையும் ஒன்றே."

John 10:28-30

இரண்டு, மூன்று பேர்என் பெயரால் எங்கே கூடியிருப்பார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்."

Matthew 18:20

ஆனால் நம் பாவங்களுக்காகவே அவர் காயப்பட்டார், நம் அக்கிரமங்களுக்காகவே அவர் நொறுக்கப்பட்டார்; நம்மை நலமாக்கும் தண்டனை அவர் மேல் விழுந்தது, அவருடைய காயங்களால் நாம் குணமடைந்தோம்.

Isaiah 53:5

அவர் "மனிதரால் கூடாதது கடவுளால் கூடும் " என்றார்.

Luke 18:27

இவராலன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை; ஏனெனில், நாம் ' மீட்படைவதற்கு அவர் பெயரைத்தவிர இவ்வுலகில் மனிதருக்கு வேறு பெயர் அருளப்படவில்லை."

Acts 4:12

தம் ஒரே பேறான மகனின் வழியாக நாம் வாழ்வு பெறும் பொருட்டு, கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்படுத்தப்பட்டது.

1 John 4:9

ஆனால் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய் நமக்கு இந்த வெற்றிதரும் கடவுளுக்கு நன்றி.

1 Corinthians 15:57

நான் உங்களிடம் அன்புகூர்ந்ததுபோல நீங்களும் ஒருவர் ஒருவரிடம் அன்புகூரவேண்டுமென்பதே எனது கட்டளை.நி31339

John 15:12

தன் சிலுவையை ஏற்றுக்கொண்டு, என்னைப் பின்செல்லாதவன் எனக்கு ஏற்றவன் அல்லன்.

Matthew 10:38

மாட்சிமிக்க தம் செல்வத்திற்கேற்ப என் கடவுள் உங்கள் தேவைகள் அனைத்தையும் கிறிஸ்து இயேசுவுக்குள் நிறைவாக்குவார்.

Philippians 4:19

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக.

Philemon 1:25

மெய்யாகவே அவர் நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார், நம்முடைய நோய்களைச் சுமந்துகொண்டார்; ஆனால் அவர் தண்டனைக்குள்ளானவர் எனவும், கடவுளால் ஒறுக்கப்பட்டவர் எனவும், வாதிக்கப் பட்டவர் எனவும் நாம் எண்ணினோம்.

Isaiah 53:4

கிறிஸ்து தம்மையே கடவுளுக்கு நறுமணம் வீசும் காணிக்கையும் பலியுமாக நம்மை முன்னிட்டுக் கையளித்து உங்கள் மேல் அன்பு கூர்ந்தது போல், நீங்களும் அன்பு கொண்டு ஒழுகுங்கள்.

Ephesians 5:2

ஆண்டவராகிய கிறிஸ்து பரிசுத்தர் என உங்கள் உள்ளத்தில் போற்றுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு விளக்கங் கூறும்படி யாராவது கேட்டால் தக்க விடை பகர எப்போதும் தயாராய் இருங்கள்.

1 Peter 3:15

ஆண்டவராகிய இயேசுவின் அருள் அனைவரோடும் இருப்பதாக.

Revelation 22:21

கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இதயங்களில் ஆட்சி புரிவதாக. இச் சமாதானத்திற்கே நீங்கள் ஒரே உடலின் உறுப்பினராய் அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாயும் இருங்கள்.

Colossians 3:15

ஒரே உடலில் நமக்கு உறுப்புகள் பல உள; அந்த உறுப்புகளெல்லாம் ஒரே செயலைச் செய்வதில்லை.
அதுபோலவே பலராயிருக்கிற நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே உடலாய் இருக்கிறோம்; ஒருவருக்கொருவர் உறுப்புகளாய் இருக்கிறோம்.

Romans 12:4-5

நாம் செய்ய வேண்டுமென்று கடவுள் முன்னேற்பாடு செய்த நற்செயல்களில் நாம் ஈடுபடுவதற்கே கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் படைக்கப்பட்டோம்.

Ephesians 2:10

உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்பவனோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான்."

John 13:20

அன்பினாலே உண்மையைப் பற்றிக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள்ளாக எல்லாவற்றிலும் நாம் வளரவேண்டும்.

Ephesians 4:15


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |