Topic : Jesus

சேசுநாதர் அவர்களை நோக்கி: இது மனிதர்களால் கூடாததாயினும், சர்வேசுரனால் கூடாததல்ல; ஏனெனில் சர்வேசுரனால் சகலமும் கூடுமென்று திருவுளம்பற்றினார்.

Mark 10:27

நமது விசுவாசத்தின் ஆதி கர்த்தாவும், அதைச் சம்பூரணமாக்குகிறவருமாகிய சேசுநாதரை எப்போதும் கண்முன்பாக வைத்துக்கொண்டு, நமக்குக் குறிக்கப்பட்டிருக்கிற யுத்தத்துக்குப் பொறுமையோடு ஓடக்கடவோம். அவர் சந்தோஷ ஜீவியம் தமக்குமுன் வைக்கப்பட்டிருக்க, அவமானத்துக்குக் கூச்சப்படாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டு, இப்பொழுது சர்வேசுரனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார்.

Hebrews 12:2

சேசுநாதர் அவளை நோக்கி: நீ விசுவசித்தால், சர்வேசுரனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையோ? என்றார்.

John 11:40

சேசுநாதர் தேவசுதனென்று எவனெவன் அறிக்கையிடுகிறானோ, அவனிடத்தில் சர்வேசுரன் நிலைத்திருக்கிறார். அவனும் சர்வேசுரனிடத்தில் நிலைத்திருக்கிறான்.

1 John 4:15

கிறீஸ்து சேசுவினிடத்தில் உண்டாயிருந்த சிந்தைகளே உங்களிடத்திலும் உண்டாயிருக்கக்கடவது.

Philippians 2:5

நான் அவைகளுக்கு நித்திய ஜீவியத்தைக் கொடுக்கிறேன். அவைகள் என்றென்றைக்குஞ் சேதமாய்ப் போவது மில்லை, என் கைகளினின்று அவை களை ஒருவனும் பறித்துக்கொள்ளுவது மில்லை. (உபாக. 32:39.)
என் பிதாவினால் எனக்குக் கொடுக்கப்பட்டது சர்வத்திலும் மேன்மையானதாய் இருக்கின்றது. என் பிதாவின் கையினின்று அதைப் பறித்துக் கொள்ள ஒருவனாலுங் கூடாது.
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். (அரு. 8:19; 12:45; 14:9.)

John 10:28-30

ஏனெனில் என் நாமத்தினாலே எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே நானிருக்கிறேனென்று திருவு ளம்பற்றினார்.

Matthew 18:20

நமது பாவங்களுக்காக அவர் காயப்பட்டனர்; நமது அக்கிரமங் களுக்காக நொறுக்கப்பட்டார்; நமது சமாதானத்துக்குரித்தாய கண்டனை அவர்மீது விழ, அவர் காயத்தால் நாம் இரட்சிக்கப்பட் டோம் (1கொரி. 15:3).

Isaiah 53:5

அதற்கு அவர்: மனிதர்களால் கூடாதவைகள் சர்வேசுரனால் கூடும் என்று அவர்களுக்குச் சொன்னார்.

Luke 18:27

(இவராலன்றி) வேறு எவராலும் இரட்சணியமில்லை; ஏனெனில் நாம் இரட்சணியம் அடையவேண்டியதற்கு வானத்தின்கீழ் (அவருயை நாமமல் லாது) வேறே நாமம் மனுஷருக்குக் கொடுக்கப்படவில்லை, என்றார்.

Acts 4:12

தம்முடைய ஏக குமாரனால் நாம் ஜீவிக்கும்படிக்குச் சர்வேசுரன் அவரை இவ்வுலகத்தில் அனுப்பினதினாலே, சர்வேசுரன் நமதுபேரில் வைத்த சிநேகம் வெளிப்பட்டது. (அரு. 3:16.)

1 John 4:9

நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதரைக் கொண்டு நமக்கு ஜெயந்தந்தருளின சர்வேசுரனுக்குத் தோத்திரம். (1 அரு. 5:5.)

1 Corinthians 15:57

நான் உங்களைச் சிநேகித்தது போல, நீங்களும் ஒருவர் ஒருவரைச் சிநேகிக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. (அரு. 13:34; எபே. 5:2; 1 தெச. 4:9.)

John 15:12

தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்செல்லாதவ னும் எனக்குப் பாத்திரவானல்ல. (மத். 16:24; மாற். 8:34; லூக்.14:27.)

Matthew 10:38

ஆதலால் என் சர்வேசுரன் தம்முடைய ஐசுவரியத்தின்படியே உங்கள் விருப்பமெல்லாவற்றையும் கிறீஸ்து சேசுநாதருக்குள் மகிமையாக நிறைவேற்றுவாராக.

Philippians 4:19

நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய இஷ்டப்பிரசாதம் உங்கள் ஆத்துமத்தோடே கூடஇருப்பதாக. ஆமென்.

Philemon 1:25

மெய்யாகவே அவரே நமது ஆயாசத்தை எடுத்துக்கொண்டு, நமது வேதனைகளைத்தானே சுமந்து கொண்டார்; நாம் அவரைக் குஷ்ட ரோகியாகவும், கடவுளால் தண்டிக் கப்பட்டவராகவும், ஒரு நிசேதகனா கவும் எண்ணினோம் (மத். 8:17).

Isaiah 53:4

கிறீஸ்துநாதர் நமக்காகத் தம்மைச் சர்வேசுரனுக்குப் பரிமள வாச னையுள்ள காணிக்கையாகவும், பலியாகவும் ஒப்புக்கொடுத்து, நம்மைச் சிநேகித்ததுபோல நீங்களும் சிநேகத்தில் நடந்துவருவீர்களாக. (அரு.13:34; 15:12; 1 அரு. 4:21.)

Ephesians 5:2

ஆண்டவராகிய கிறீஸ்துநாதரை உங்கள் இருதயங்களில் அர்ச்சியுங்கள். உங்களிலுள்ள நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும், வணக்கத்தோடும் தகுந்த பதில் சொல்லும்படி எப்போதும் ஆயத்தமாயிருங்கள்.

1 Peter 3:15

நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவின் வரப்பிரசாதம் உங்க ளனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

Revelation 22:21

கிறீஸ்துநாதருடைய சமாதானம் உங்கள் இருதயங்களில் சந்தோஷ அக்களிப்புக்கொள்ளட்டும். இதற்கா கவே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப் பட்டிருக்கிறீர்கள். இதற்காக நன்றியறிந் திருங்கள்.

Colossians 3:15

அதெப்படியென்றால், நமக்குள்ளே ஒரே சரீரத்தில் பல அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் அல்லாததுபோல,
பலபேராகிய நாமும் கிறீஸ்துநாதருக்குள் ஒரே சரீரமாகவும், தனித்தனியே பார்த்தால் ஒருவருக்கொருவர் உறுப்புகளாகவும் இருக்கிறோம்.

Romans 12:4-5

ஏனெனில் நாம் நற்கிரியைகளைச் செய்கிறதற்குக் கிறீஸ்து சேசு வுக்குள் சிருஷ்டிக்கப்பட்டுத் தேவனுடைய கைவேலையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார். *** 10. கைவேலை: நீதிமானாக்கப்பட்டவன் மெய்யாகவே இஷ்டப்பிரசாதத்தால் புது உயிர் அடைந்தவனாயிருப்பதால், சர்வேசுரனுடைய கைவேலை எனப்படுகிறான்.

Ephesians 2:10

நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். என்னை ஏற்றுக்கொள்ளுகிறவனோ, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத். 10:40.)

John 13:20

பரம அன்பில் உண்மையோடு நடந்து, தலைமையாயிருக்கிற கிறீஸ்துநாதரிடத்தில் எல்லாவற்றிலும் வளருவோமாக.

Ephesians 4:15


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |