Topic : Greed

செல்வம் அதிகரிக்க, அதை உண்பவர்களும் மிகுவர். அதை உடையவனோ தன் கண்களினாலே செல்வங்களைக் காண்பதன்றி அவனுக்கு வேறென்ன பயன்?

Ecclesiastes 5:10

செல்வம் சேர்க்க விரும்புகிறவன் சோதனைகளில் வீழ்கிறான்; பேயின் வலையில் சிக்குகிறான். தீமை விளைவிக்கும் மதிகேடான பல்வேறு ஆசைகளில் அமிழ்ந்து விடுகிறான். இவையோ அவனைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்திவிடும்.

1 Timothy 6:9

பின் மக்களைப் பார்த்து, "எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாதபடி கவனமாயிருங்கள். ஏனெனில், ஒருவனுக்கு எவ்வளவு தானிருந்தாலும் செல்வப்பெருக்கினால் வாழ்வு. வந்துவிடாது" என்றார்.

Luke 12:15

ஒருவன் தன் ஆன்மாவிற்குக் கேடு விளைவித்து, உலகமெல்லாம் தனதாக்கிக்கொள்வதனால் அவனுக்கு வரும் பயனென்ன?

Mark 8:36

"மண்ணுலகில் செல்வம் சேர்த்துவைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் கன்னமிட்டுத் திருடுவர்.
ஆனால் விண்ணுலகில் செல்வம் சேர்த்துவையுங்கள். அங்கே பூச்சியும் துருவும் அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.

Matthew 6:19-20

திடீரென்று சேர்த்த செல்வம் குறைந்துபோகும். மெதுவாய்க் கையில் சேர்ந்ததோ மிகுந்து வரும்.

Proverbs 13:11

அவன் நாள் முழுதும் ஆவலோடு இச்சிக்கிறான். ஆனால், நீதிமானாய் இருக்கிறவன் கொடுப்பான்; ஓயாமல் கொடுப்பான்.

Proverbs 21:26

நீ செல்வந்தனாகும் நோக்கத்தோடு உழைக்காதே. ஆனால், உன் கவலைக்கு ஓர் எல்லை இடு.

Proverbs 23:4

பண ஆசைதான் எல்லாத் தீமைகளுக்கும் வேர். அந்த ஆசையால்தான் சிலர் தங்களையே ஊடுருவக் குத்திக்கொள்வதுபோல் பல துன்பங்களைத் தங்கள்மேல் வருவித்துக்கொண்டார்கள்.

1 Timothy 6:10

இது மிக வருந்தத்தக்க செயலன்றோ? அவன் வந்ததுபோலவே திரும்பிப் போவான். அவன் இப்படி வீணில் உழைத்தனால், அவனுக்குப் பயன் என்ன?

Ecclesiastes 5:15

"எவனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது. ஏனெனில், ஒருவனை வெறுத்து மற்றவனுக்கு அன்பு செய்வான். அல்லது, ஒருவனைச் சார்ந்துகொண்டு மற்றவனைப் புறக்கணிப்பான். கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்யமுடியாது.

Matthew 6:24

கெட்ட நடத்தை. அசுத்தம், பொருளாசை முதலியவற்றின் பெயர் முதலாய் உங்களிடையே சொல்லப்படலாகாது. இதுவே இறைமக்களுக்கு ஏற்ற நடத்தை.

Ephesians 5:3

உம் ஆணைகளின் பால் என் இதயம் திருப்பியருளும்: இம்மைப் பயனை நாட விடாதேயும்.

Psalms 119:36

ஆகவே உங்களில் உலகிற்கடுத்தவற்றைச் சாகச் செய்யுங்கள். கெட்ட நடத்தை, கற்பின்மை, காமம், தீய இச்சைகள், சில வழிபாட்டுக்கு ஒப்பான பொருளாசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள்.

Colossians 3:5

இதற்காகவே நீங்கள் வரிகள் செலுத்துகிறீர்கள். ஏனெனில் அரசினர் தங்கள் பணியில் ஈடுபடும்போது கடவுளுக்கே தொண்டு செய்கின்றனர்.

Romans 13:6


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |