Topic : Greed

ஆஸ்தி மிகுமளவில் அதை உண்பவர்களும் மிகுதியாம். அதை உடையவனோ தன் கண்களினாலே திரவியங்களைக் காண்பதல்லாதே அவனுக்கு வேறென்ன பயன்?

Ecclesiastes 5:10

ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும், பசாசின் கண்ணியிலும், கேட்டிலும், நரகாக் கினியிலும் மனிதர்களை அமிழ்த்துகிற வீணும் கெடுதியுமான பற்பல இச்சைகளிலும் விழுகிறார்கள்.

1 Timothy 6:9

பின்பு அவர் அவர்களைப் பார்த்து திருவுளம்பற்றினதாவது: எவ்வித பொருளாசையின் மட்டிலும் எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்குள்ள ஆஸ்தியின் பெருக்கத்தில் அவனுடைய உயிர் நிற்கிறதில்லை என்றார்.

Luke 12:15

மனிதனானவன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக்கொண்டாலும், தன் ஆத்துமத்தைச் சேதப்படுத்துவானாகில் அவனுக்குப் பிரயோஜனமென்ன?

Mark 8:36

பூலோகத்தில் உங்களுக்குப் பொக் கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம். இங்கே அந்தும் துருவும் அரிக்கின்றது, திருடருங் கன்னமிட்டுத் திருடுகிறார்கள். * 19. பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்:- என்பதினால் இலெளகீக பொருட்களின்மேல் மிதமிஞ்சின பற்றுதல் விலக்கப்பட்டிருக்கிறது. (21-ம் வசனம் காண்க.) எனெனில் மிதமிஞ்சின பற்றுதலால் இருதயஞ் சர்வேசுரனை மறந்து இந்த உலக வாழ்வை மாத்திரம் அபேட்சிக்கும்.
ஆனால் பரலோகத்தில் உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள். அங்கே அந்தும்துருவும் அரிக்கிறதுமில்லை. திருடர் அங்கே கன்னமிட்டுத் திருடுகி றதுமில்லை , (லூக். 12:33; 1 தீமோ . 6:19.)

Matthew 6:19-20

சடுதியான சம்பாத்தியம் குறைந்துபோகும்; மெதுவாய்க் கையில் சேர்ந்ததோ மிகுந்து வரும்.

Proverbs 13:11

அவன் நாள் முழுவதும் இச் சித்து ஆசிக்கிறான்; ஆனால் நீதிமானா யிருக்கிறவன் கொடுப்பான்; ஒயாமல் கொடுப்பான்.

Proverbs 21:26

நீ தனவானாகும்படியாக உழைக்காதே; ஆனால் உன் கவலைக்கு ஒர் மட்டுக்கட்டு.

Proverbs 23:4

ஏனெனில், பொருளாசை எல்லாத் தின்மைகளுக்கும் வேராயிருக்கிறது. சிலர் அப்படிப்பட்ட இச்சைக்கு இடங்கொடுத்து, விசுவாசத்தினின்று தவறி, பற்பல துன்பங்களில் சிக்கிக்கொண்டார்கள்.

1 Timothy 6:10

இது மிகப் பிரலாபத்துக்குரிய விஷயமன்றோ? அவன் வந்த பிரகா ரமே திரும்பிப்போவான்; அவன் இப்படி விருதாவில் உழைத்ததினால் அவனுக்குப் பலனென்ன காணும்?

Ecclesiastes 5:15

எவனானாலும் இரண்டு எஜ மான்களுக்கு ஊழியஞ் செய்யக் கூடாது. ஏனெனில் ஒருவனைப் பகைத்து, மற் றொருவனை நேசிப்பான், அல்லது ஒருவனைச் சார்ந்துகொண்டு மற்றொரு வனைப் புறக்கணிப்பான். சர்வேசுரனுக் குந் திரவியத்திற்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது. (லூக். 16:13.) * 24. திரவியத்துக்கும்:- என்னும் இந்த வார்த்தை மூல பாஷையில் மாம்மோன் என்றிருக்கிறது. அதற்குச் சீரிய பாஷையில் திரவியமென்றர்த்தமாம்.

Matthew 6:24

மேலும் அர்ச்சிக்கப்பட்டவர்களுக்கு யோக்கியமானபடி எவ்வித வேசித்தனமும், அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பெயர் முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படக்கூடாது. (கொலோ. 3:5.)

Ephesians 5:3


ஆகையால் உங்களுடைய இலெளகீக அவயவங்களைச் சாகடியுங்கள். அவையாவன: விபசாரம், அசுத்தம், காமம், துர் இச்சை, விக்கிரக ஆராதனையாகிய பொருளாசை. *** 5. விக்கிரகங்களுக்கு அடிமைத்தனமாகிற பொருளாசை என்பதற்கு எபேசியர் 5-ம் அதிகாரம் 5-ம் வசனம் காண்க.

Colossians 3:5

இதற்காகவே நீங்கள் பகுதியுஞ் செலுத்திவருகிறீர்கள். ஏனெனில் அவர்கள் இந்த வேலையைப் பார்ப்பதிலே சர்வேசுரனுடைய ஊழியர்களாயிருக்கிறார்கள்.

Romans 13:6


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |