Topic : Freedom

கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து உரிமை வாழ்வு நமக்கு அளித்தார். அதிலே நிலைத்திருங்கள். அடிமைத்தனத்தின் நுகத்தைத் திரும்பவும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

Galatians 5:1

நீங்களோ, சகோதரர்களே, உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அந்த உரிமை, ஊனியல்பின் இச்சைகளுக்கு ஏற்ற வாய்ப்பாகும்படி விட்டுவிடாதீர்கள். மாறாக ஒருவருக்கொருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள்.

Galatians 5:13

ஆண்டவர் என்றது ஆவியானவரைத்தான்; ஆண்டவரின் ஆவியானவர் எங்கிருக்கிறாரோ அங்கு விடுதலை உண்டு.

2 Corinthians 3:17

எனவே, மகன் உங்களுக்கு விடுதலையளித்தால்தான், உங்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்.

John 8:36

நீதிமானின் துயரங்கள் பல: ஆனால் அவயைனைத்தினின்றும் ஆண்டவர் அவனைக் கடைத்தேற்றுவார்.

Psalms 34:19

ஆண்டவரின் ஆவி என்மேலே, ஏனெனில் ஆண்டவர் என்னை அபிஷுகம் செய்துள்ளார்; எளியோர்க்கு நற்செய்தி அறிவித்து, உள்ளம் நொந்தவர்களைக் குணப்படுத்தவும்: சிறைப்பட்டவர்களுக்கு விடுதலைச் செய்தியும், கட்டுண்டவர்களுக்கு மீட்புச் செய்தியும் அறிவிக்கவும்;

Isaiah 61:1

' எதையும் செய்ய எனக்கு உரிமையுண்டு' என்கிறார்கள். - ஆனால் எல்லாமே பயன்தராது. எதையும் செய்ய எனக்கு உரிமையுண்டு என்பது உண்மைதான். ஆனால் எதற்கும் நான் அடிமையாக மாட்டேன்.

1 Corinthians 6:12

பின்னர், தம்மை விசுவசித்த யூதர்களுக்கு இயேசு கூறினார்: "நீங்கள் என் வார்த்தையில் நிலைத்திருப்பீர்களாகில், உண்மையாகவே என் சீடராயிருப்பீர்கள்.
உண்மையை அறிவீர்கள்; அவ்வுண்மையும் உங்களுக்கு விடுதலையளிக்கும்."

John 8:31-32

அகன்றதொரு பாதையில் நான் நடப்பேன்: ஏனெனில், உம் கட்டளைகளைப் பற்றி நான் கருத்தாய் இருக்கின்றேன்.

Psalms 119:45

ஆகவே, என்ன சொல்வோம்? சட்டத்தின் அதிகாரத்தில் இல்லாமல், இறையருளின் அதிகாரத்தில் இருப்பதால் நாம் பாவம் செய்யலாம் என்போமா? ஒருகாலும் இல்லை.

Romans 6:15

இதைத் தெரிந்துகொள்ளுங்கள். மோயீசன் சட்டத்தின் வழியாக உங்கள் குற்றங்கள் எவற்றினின்றும் நீங்கள் விடுபடமுடியவில்லை.
ஆனால், விசுவசிக்கிற அனைவரும் இவர்வழியாக அவற்றினின்று விடுபடுவர்.

Acts 13:38-39

உரிமை அடைந்தவர்களென வாழுங்கள்; ஆனால், இந்த உரிமையை, தீவினை செய்வதற்குப் போர்வையாகக் கொள்ளாதீர்கள். கடவுளுக்கு அடிமைகளென்றே வாழுங்கள்.

1 Peter 2:16

ஆகவே, கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிறவர்களுக்கு இனித் தண்டனைத் தீர்ப்பு என்பதில்லை.
ஏனெனில், கிறிஸ்து இயேசுவுக்குள் உயிர் தரும் ஆவியானவரின் சட்டம் என்னைப் பாவம், சாவு என்பவற்றின் சட்டத்தினின்றும் விடுதலை செய்துவிட்டது.

Romans 8:1-2

ஆனால், 'இப்பொழுது பாவத்தினின்று விடுதலைபெற்றுக் கடவுளின் அடிமைகள் ஆனீர்கள்; இதனால் உங்களுக்குக் கிடைத்துள்ள பலன் நீங்கள் பரிசுத்தர்கள் ஆவதே; அதன் முடிவு முடிவில்லா வாழ்வு.

Romans 6:22

'ஆண்டவருடைய ஆவி என்மேலே, ஏனெனில், என்னை அபிஷுகம் செய்துள்ளார். 'எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும், சிறைப்பட்டோர் விடுதலையடைவர், குருடர் பார்வை பெறுவர் என அறிவிக்கவும், ஒடுக்கப்பட்டோர்க்கு உரிமை வாழ்வு வழங்கவும்,

Luke 4:18

ஆனால் நிறைவான திருச்சட்டத்தை, விடுதலையாக்கும் அச்சட்டத்தைக் கூர்ந்து நோக்கி அதிலே நிலைப்பவன் அதைக் கேட்பதோடு மட்டும் நின்று விடுவதில்லை; கேட்பதை மறந்து விடுவதுமில்லை; அதன்படி நடக்கிறான். அதன்படி நடப்பதால் அவன் பேறு பெற்றவன்.

James 1:25

கைவிடப்பட்டவர்க்குக் கடவுள் இல்லமொன்றை ஆயத்தப்படுத்துகிறார், சிறைப் பட்டவர்களை நல்வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறார்: எதிர்த்து எழுபவர்களோ வறண்ட நிலத்தில் வாழ்வார்கள்.

Psalms 68:6

தீமையை வெறுப்பவர்கள் மீது ஆண்டவர் அன்பு கூருகின்றார்: தம் புனிதர்களின் ஆன்மாக்களைக் காக்கின்றார்; தீயவர்களின் கையினின்று அவர்களை விடுவிக்கின்றார்.

Psalms 97:10

எங்கள் மீட்பரான இறைவா, உம் திருப்பெயரின் மகிமைக்காக எங்களுக்குத் துணை செய்யும்: உம் பெயரின் பொருட்டு எங்கள் பாவங்களை மன்னித்து எங்களுக்கு விடுதலையளித்தருளும்.

Psalms 79:9


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |