Topic : Contentment

பிறந்த பொழுது நாம் ஒன்றையும் கொண்டுவரவில்லை. இறக்கும் பொழுது எதையும் எடுத்துச் செல்லவும் முடியாது.
எனவே, உணவு, உடையோடு மனநிறைவுகொள்வோம்.

1 Timothy 6:7-8

பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளது போதுமென்றிருங்கள். ஏனெனில், 'நான் ஒருபோதும் உன்னைக் கைவிடேன்; உன்னை விட்டுப் பிரியேன்' என்று இறைவனே கூறுகிறார்.

Hebrews 13:5

உங்களுக்குள் ஒன்றுபட்டு வாழுங்கள். உயர்வு மனப்பான்மை கொள்ளாமல் தாழ்ந்தவர்களோடு அன்பாய்ப் பழகுங்கள். உங்களை நீங்களே அறிவாளிகளாய்க் கருதாதீர்கள்.

Romans 12:16

ஆகவே, நான் என் குறைபாடுகளைக் காணும்போது, இழிவுறும்போது, நெருக்கடியில் இருக்கும்போது, துன்புறுத்தப்படும்போது, இடுக்கண்ணுறும் போது கிறிஸ்துவை முன்னிட்டு நான் மனநிறைவோடு இருக்கிறேன். ஏனெனில், வலுவின்றி இருக்கும்போது தான் நான் வலிமை மிக்க வனாயிருக்கிறேன்.

2 Corinthians 12:10

ஆம், பக்தி நெறி நல்ல ஆதாயம் தருவதுதான்; ஆனால் போதுமென்ற மனமுள்ளவர்களுக்கே தரும்.

1 Timothy 6:6

"ஆதலால் உங்களுக்குச் சொல்லுகிறேன்: உயிர்வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலை மூட எதை உடுப்பது என்றோ கவலைப்பட வேண்டாம். உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவையல்லவா ?

Matthew 6:25

வளமையிலும் வாழத்தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவுற்று வாழவோ, குறைவுற்றுத் தாழவோ, எதற்கும் பயிற்சி பெற்றிருக்கிறேன்.

Philippians 4:12

பின் மக்களைப் பார்த்து, "எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாதபடி கவனமாயிருங்கள். ஏனெனில், ஒருவனுக்கு எவ்வளவு தானிருந்தாலும் செல்வப்பெருக்கினால் வாழ்வு. வந்துவிடாது" என்றார்.

Luke 12:15

நான் இவ்வாறு சொல்வது எனக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு குறையினாலன்று. ஏனெனில், எந்நிலையிலும் போதுமென்ற மனத்தோடு வாழக் கற்றுக்கொண்டேன். வறுமையிலும் வாழத்தெரியும்.

Philippians 4:11

அக்கிரமத்தோடு நிறைவு கொண்டிருப்பதைவிட நீதியோடு வறுமையுற்றிருப்பது நன்று.

Proverbs 16:8

அப்போது யோபு எழுந்திருந்து தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, தலையையும் மழித்து விட்டுத் தரையில் விழுந்து தொழுது,
நிருவாணியாய் என் தாய் வயிற்றிலிருந்து வெளிப்பட்டேன். நிருவாணியாகவே திரும்பிப் போவேன்; ஆண்டவர் அளித்தார், ஆண்டவர் எடுத்துக்கொண்டார்; ஆண்டவரின் திருப்பெயர் வாழ்த்தப்பெறுக!" என்றார்.

Job 1:20-21

பின்னர், அவர் தம் சீடருக்குக் கூறியதாவது: "ஆதலால் உங்களுக்குச் சொல்லுகிறேன்: உயிர் வாழ எதை உண்பதென்றோ, உடலை மூட எதை உடுப்பதென்றோ கவலைப்பட வேண்டாம்.
ஏனெனில், உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவை.

Luke 12:22-23

"இதைக் கேட்ட பிலிப்பு, "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும், அதுவே போதும்" என்றார்.

John 14:8


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |