Topic : Contentment

ஏனெனில், உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை; இங் கிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோக வுங் கூடாது என்பதற்குச் சந்தேக மில்லை. (யோப். 1:21; சங்கப். 5:14.)
ஆகையால் அன்னமும் ஆடையும் இருந்தால், இதுவே நமக்குப் போதுமென்று இருக்கக்கடவோம். (பழ. 27:26, 27.)

1 Timothy 6:7-8

உங்கள் ஒழுக்கம் பேராசையின்றி, உள்ளது போதுமென்று இருக்கட்டும். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவரே சொல்லி யிருக்கிறார். (ஜோசு. 1:5.)

Hebrews 13:5

ஒருவரோடொருவர் ஏக சிந்தனையுள்ளவர்களாய் இருங்கள். பெருமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களோடு ஒத்து நடங்கள். உங்களையே புத்திசாலிகளென்று எண்ணாதிருங்கள்.

Romans 12:16

இதனிமித்தம் எனக்கு உண்டா கும் பலவீனங்களிலும், அவமானங்க ளிலும், இக்கட்டுகளிலும், கலாபங்களி லும், நெருக்கிடைகளிலும், கிறீஸ்துவைப்பற்றி நான் பிரியப்படுகிறேன். ஏனெனில் எப்போது பலவீனப்படுகிறே னோ, அப்போது வல்லவனாயிருக்கி றேன்.

2 Corinthians 12:10

(உள்ளது) போதுமென்ற எண் ணத்தோடுகூடிய பக்தியே மிகுந்த ஆதாயம்.

1 Timothy 6:6

ஆதலால் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: உங்கள் உயிர் பிழைக்க எதை உண்போமென்றும், உங்கள் உடலை மூட எதை உடுத்திக் கொள்வோமென்றும் ஏக்கமாயிராதேயுங்கள். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் மேன்மையானதல்லவோ ? (லூக். 12:22-31; பிலிப். 4:6; 1 தீமோ . 6:7; 1 இரா . 5:7: சங். 54:23, 24.)

Matthew 6:25

சிறுமைப்படவும், சம்பத்தோடிருக்கவும் எனக்குத் தெரியும். எங்கும், எல்லாக் காரியங்களிலும் நான் திருப்தியாயிருக்கவும், பட்டினியாயிருக்கவும், செல்வத்தோடிருக்கவும், வறுமைப்படவும் அப்பியாசப்பட்டிருக்கிறேன்.

Philippians 4:12

பின்பு அவர் அவர்களைப் பார்த்து திருவுளம்பற்றினதாவது: எவ்வித பொருளாசையின் மட்டிலும் எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்குள்ள ஆஸ்தியின் பெருக்கத்தில் அவனுடைய உயிர் நிற்கிறதில்லை என்றார்.

Luke 12:15

ஆகிலும் அவகாசக்குறைவைப் பற்றி நான் இப்படிச் சொல்லுகிற தில்லை. ஏனெனில், நான் எந்த ஸ்திதியிலிருந்தாலும், மனத்திருப்தியாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.

Philippians 4:11

அக்கிரமத்தோடு திருப்தி யடைவதைவிட நீதியோடு வறுமைப் படுகிறது நன்று.

Proverbs 16:8

அப்பொழுது யோபு எழுந் திருந்து தன் ஆடைகளைக் கிழித்துத் தலை மயிரைச் சிரைத்துத் தரையில் விழுந்து (கடவுளைத்) தொழுது:
நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டேன், நிர்வாணியாய் அவ்விடத்திற்குத் திரும்புவேன். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். தேவனுக்கு எப்படி இஷ்டமோ, அப்படியே ஆயிற்று. ஆண்டவரின் நாமத்திற்குத் தோத்திர முண்டாகக் கடவது என்றான். (சர்வப்.5:14; 1 திமோ.6:7.)

Job 1:20-21

பிற்பாடு அவர் தம்முடைய சீஷர்களைப் பார்த்து: இப்படியிருக்க, எதை உண்போமென்று உங்கள் ஜீவனுக்காகவும், எதை உடுத்திக் கொள்ளுவோமென்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்களென்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத். 6:25.)
உணவைவிட ஜீவனும், உடையைவிட உடலும் மேன்மையுள்ளதாயிருக்கிறது. (1 இரா. 5:7; சங். 54:23, 24.)

Luke 12:22-23

அப்பொழுது பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பித்தருளும், அதுவே எங்களுக்குப் போதும் என்றார்.

John 14:8


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |