Topic : Community

நமக்கு வாக்களித்தவர் உண்மையுள்ளவர். அன்பு செய்யவும் நற்பணிகள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக.
சிலர் வழக்கமாக நம் கூட்டங்களுக்கு வருவதில்லை. அதைப்போல் நாமும் செய்யலாகாது. ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக. இறுதி நாள் எவ்வளவுக்கு அருகிலிருப்பதாகக் காணப்படுகிறதோ அவ்வளவுக்கு உற்சாகமாக ஊக்கமூட்டுங்கள்.

Hebrews 10:24-25

ஒரே உடலில் நமக்கு உறுப்புகள் பல உள; அந்த உறுப்புகளெல்லாம் ஒரே செயலைச் செய்வதில்லை.
அதுபோலவே பலராயிருக்கிற நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே உடலாய் இருக்கிறோம்; ஒருவருக்கொருவர் உறுப்புகளாய் இருக்கிறோம்.

Romans 12:4-5

சகோதரர் ஒருமித்து வாழ்வது எத்துணை நல்லது! எத்துணை இனியது!

Psalms 133:1

சகோதரர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால், உங்களை நான் வேண்டுவது: நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழுங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். மாறாக, ஒரே மனமும் ஒரே கருத்தும் கொண்டு, மீண்டும் முற்றிலும் ஒன்றித்து வாழுங்கள்.

1 Corinthians 1:10

இரண்டு, மூன்று பேர்என் பெயரால் எங்கே கூடியிருப்பார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்."

Matthew 18:20

இறுதியாக, நீங்கள் அனைவரும் ஒருமனப் பட்டிருங்கள்; பிறரிடம் பரிவு, சகோதர அன்பு, இரக்கம் காட்டுங்கள்; மனத் தாழ்ச்சியுடையவராய் இருங்கள்.

1 Peter 3:8

இவையெல்லாவற்றிற்கும் மேலாக அன்பை அணிந்துகொள்ளுங்கள். அதுவே எல்லா நற்பண்புகளையும் பிணைந்து நிறைவு அளிப்பது.

Colossians 3:14

உங்களுக்குள் ஒன்றுபட்டு வாழுங்கள். உயர்வு மனப்பான்மை கொள்ளாமல் தாழ்ந்தவர்களோடு அன்பாய்ப் பழகுங்கள். உங்களை நீங்களே அறிவாளிகளாய்க் கருதாதீர்கள்.

Romans 12:16

நாடோறும் தவறாமல் ஒரே மனதாய்க் கோயிலில் கூடினர்; வீடுகளில் அப்பத்தைப்பிட்டு, மனமகிழ்வோடும் கபடற்ற உள்ளத்தோடும் உணவைப் பகிர்ந்துகொண்டனர்.
இங்ஙனம் கடவுளைப் புகழ்ந்துவந்தனர்; மக்கள் அனைவருக்கும் வேண்டியவர்களாய் விளங்கினர். ஆண்டவரும் மீட்புப்பெறுவோரை நாள்தோறும் அவர்களோடு சேர்த்து வந்தார்.

Acts 2:46-47

அன்புக்குரியவர்களே, கடவுள் நமக்கு இவ்வாறு அன்பு செய்தார் எனில், நாம் ஒருவர்க்கொருவர் அன்பு செய்தல் வேண்டும்.

1 John 4:11

நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒரு வாய்ப்பட மகிமைப்படுத்துமாறு,

Romans 15:5

விசுவாசிகள் அத்தனை பேரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்; அவர்களுள் ஒருவனும் தன் உடைமை எதன்மீதும் உரிமைப்பாராட்டவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.

Acts 4:32

தேவ ஆவி அளிக்கும் ஒருமைப்பாட்டைச் சமாதானம் என்னும் பிணைப்பால் காப்பாற்றக் கண்ணும் கருத்துமாய் இருங்கள்.

Ephesians 4:3

இனி யூதனென்றும் கிரேக்கனென்றும் இல்லை; அடிமையென்றும் உரிமைக் குடிமகனென்றும் இல்லை; ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை; கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள் அனைவரும் ஒருவரே.
நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்களாயின், ஆபிரகாமின் வழி வந்தவர்களாய் இருக்கிறீர்கள்; வாக்குறுதியின்படி உரிமையாளர்களுமாய் இருக்கிறீர்கள்.

Galatians 3:28-29

மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல நாமும் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டவர்களாவோம். அப்போது அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்துகிறது.

1 John 1:7

சகோதரர்களே, நான் உங்களை வேண்டுவது: நீங்கள் கற்றுக்கொண்ட போதனையை மீறி, பிளவுகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர் மேல் கண்ணாயிருங்கள்.

Romans 16:17

விசுவாசத்தில் எவனாவது வலுவற்றவனாய் இருந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால் அவன் எழுப்பும் கேள்விகளைப்பற்றி வாதாடாதீர்கள்.

Romans 14:1

இவர்கள் எல்லாரும் பெண்களோடும், இயேசுவின் தாய் மரியாளோடும், அவர் சகோதரரோடும் ஒரே மனதாய்ச் செபத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

Acts 1:14

உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்பவனோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான்."

John 13:20

ஏனெனில், யூதர் அல்லது கிரேக்கர், அடிமைகள் அல்லது உரிமைக்குடிகள் யாராயினும் நாம் அனைவரும் ஒரே ஆவியால் ஒரே உடலுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றோம்; ஒரே ஆவியால் தாகந்தணியப் பெற்றோம்.

1 Corinthians 12:13

இராயப்பர் இவ்வாறு சிறையில் இருக்கையில் திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் இடையறாது மன்றாடிக்கொண்டிருந்தது.

Acts 12:5

கைம்பெண்களுக்கு மரியாதை காட்டும். ஆதரவற்ற கைம்பெண்களையே ஈண்டுக் குறிப்பிடுகிறேன்.

1 Timothy 5:3


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |