Topic : Community

பரம அன்புக்கும் நற்கிரியைகளுக் கும் நமக்குத் தூண்டுதலுண்டாகும் படி ஒருவரை ஒருவர் கவனிப்போமாக.
சிலருக்குத் துர்வழக்கமாய் இருக் கிறதுபோல நாம் சபைக்கூட்டத்தை விட்டுவிடாமல் ஒருவரை ஒருவர் தேற்று வோமாக. அந்த மகாநாள் எவ்வளவுக்கு நெருங்கக் காண்பீர்களோ அவ்வளவுக்கு அதிகமாய் இவ்விதஞ் செய்யுங்கள்.

Hebrews 10:24-25

அதெப்படியென்றால், நமக்குள்ளே ஒரே சரீரத்தில் பல அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் அல்லாததுபோல,
பலபேராகிய நாமும் கிறீஸ்துநாதருக்குள் ஒரே சரீரமாகவும், தனித்தனியே பார்த்தால் ஒருவருக்கொருவர் உறுப்புகளாகவும் இருக்கிறோம்.

Romans 12:4-5

இதோ ஆண்டவருடைய வீட் டிலே நம்முடைய சர்வேசுரனுடைய வாசஸ்தலத்தின் தலை வாசல்களிலே பிரவேசித்திருக்கும் ஆண்டவரு டைய சகல ஊழியர்களே! கர்த்தரை இப்போது வாழ்த்துங்கள்.

Psalms 133:1

சகோதரரே, உங்களுக்குள்ளே பிரிவினைகளில்லாமல், நீங்களனைவரும் ஒரே காரியத்தைப் பேசவும், ஒரே மன மும் ஒரே அபிப்பிராயமுமுள்ள உத்தம ராயிருக்கவும் வேண்டுமென்று நம்மு டைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து வின் நாமத்தினாலே நான் உங்களை மன்றாடுகிறேன். (பிலிப். 2:2; 3:16.)

1 Corinthians 1:10

ஏனெனில் என் நாமத்தினாலே எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே நானிருக்கிறேனென்று திருவு ளம்பற்றினார்.

Matthew 18:20

கடைசியாய் நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், அந்நியோந்நிய இரக்கமுள்ளவர்களும், சகோதர நேசமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், சாந்தமும் தாழ்ச்சியுள்ளவர் களுமாயிருங்கள்.

1 Peter 3:8

ஆனால் இவையெல்லாவற்றிற்கும் மேலாக உத்தமதனத்தின் பந்தன மாகிய பரம அன்பைக் கொண்டிருங்கள்.

Colossians 3:14

ஒருவரோடொருவர் ஏக சிந்தனையுள்ளவர்களாய் இருங்கள். பெருமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களோடு ஒத்து நடங்கள். உங்களையே புத்திசாலிகளென்று எண்ணாதிருங்கள்.

Romans 12:16

அல்லாமலும் அவர்கள் ஒரே மனதாய் அநுதினமும் தேவாலயத்தில் நிலைத்து வீடுவீடாய், அப்பமும்பகிர்ந்து, ஆனந்த அக்களிப்போடும், கபடில்லாத இருதயத்தோடும் போசனம் பண்ணி,
சர்வேசுரனை ஸ்துதித்து, சகல ஜனங்களுக்கும் பிரியமுள்ளவர்களாயிருப்பார்கள். ஆண்டவரோவெனில் இரட்சிக்கப்படத்தக்கவர்களை அநுதினமும் அந்தச் சபையில் அதிகரிக்கப் பண்ணிவருவார். *** 46-47. அப்பொழுது புதுக்கிறீஸ்துவர்களுக்குச் சொந்தமான கோவில்களில்லாமையாலும், யூதருடைய விரோதத்தைப்பற்றியும் திருச்சபையிலுட்பட்டவர்கள் திவ்விய பூசை காணவும், தேவநற்கருணை வாங்கவும் ஏகமாய் ஓரிடத்தில் கூடிவரக் கூடாதிருந்ததைப்பற்றி, அங்கங்கே வெவ்வேறு வீடுகளில் கூடி, அந்த ஞானக்கிருத்தியங்களையும் நிறைவேற்றி அந்நியோந்நிய சிநேகத்தின் அடையாளமாகப் பொதுவில் விருந்து உண்பார்களென்பதே கருத்து.

Acts 2:46-47

மிகவும் பிரியமானவர்களே, சர்வேசுரன் நம்மை இத்தன்மையாய்ச் சிநேகித்திருக்கையில், நாமும் ஒருவரொருவரைச் சிநேகிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

1 John 4:11

பொறுமையையும், ஆறுதலையும் தந்தருளுகிற சர்வேசுரன் சேசுக்கிறீஸ்து நாதருக்கு ஒத்தவண்ணம் நீங்கள் ஒரு வருக்கொருவர் ஏக சிந்தையுள்ளவர்க ளாகும்படி உங்களுக்குக் (கிருபை) செய்வாராக. (1 கொரி. 1:10.)

Romans 15:5

விசுவாசிகளுடைய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே ஆத்துமமுமாய் இருந்ததுமன்றி, அவர் களில் ஒருவனும் தனக்குள்ளவை களில் எதையும் தன்னுடையதென்று சொல்லவில்லை. சகலமும் அவர்களுக் குப் பொதுவாயிருந்தது.

Acts 4:32

சமாதான பந்தனத்தில் மன ஒற்றுமையை ஜாக்கிரதையாய்க் காப்பாற்றிக்கொள்ளுங்கள். (உரோ. 12:10.)

Ephesians 4:3

யூதனென்றும், கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீன னென்றுமில்லை. ஆணென்றும் பெண் ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் சேசுக்கிறீஸ்துநாதரிடத்தில் ஒன்றாயிருக் கிறீர்கள்.
நீங்கள் கிறீஸ்துவினுடையவர்களானால், அபிரகாமுடைய வித்தாயும் வாக்குத்தத்தத்தின்படிக்குச் சுதந்திரவாளிகளுமாயிருக்கிறீர்கள்.

Galatians 3:28-29

அவர் பிரகாசத்தில் இருப்பது போல், நாமும் பிரகாசத்தில் நடப்போமானால், நாம் அந்நியோன்னிய ஐக்கியமுள்ளவர்களாயிருப்பதுமன்றி, அவருடைய குமாரனாகிய சேசுக்கிறீஸ்துவின் இரத்தம் நம்மைச் சகல பாவத்திலும் நின்று சுத்திகரிக்கும்.

1 John 1:7

அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்துக்கு ஒவ் வாத பிரிவினைகளையும், இடறல்களையும் உண்டாக்குகிறவர்கள்மேல் கண்ணாயிருந்து, நீங்கள் அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களை மன்றாடுகிறேன். (2 தெச. 3:14; 2 அரு. 10.)

Romans 16:17

விசுவாசத்தில் பலவீனமாயிருக் கிறவனுடைய எண்ணங்களைப் பற்றித் தர்க்கியாமல், அவனை ஏற்றுக்கொள் ளுங்கள்.

Romans 14:1

இவர்கள் எல்லாரும் ஸ்திரீக ளோடும், சேசுநாதருடைய தாயா ராகிய மரியம்மாளோடும் அவரு டைய சகோதரரோடும் ஒரே மனமாய் ஜெபத்தில் நிலைத்திருந்தார்கள். (மாற். 6:3.) *** 14. இதில் சொல்லப்பட்ட ஸ்திரீகள் கலிலேயா நாட்டிலிருந்து வந்து, சேசுநாதருக்கும் அப்போஸ்தலருக்கும் ஊழியஞ்செய்து தங்கள் சொந்தச் செலவினால் அவர்களைப் பராமரித்துக்கொண்டுவந்த புண்ணியவதிகளாம். மத். 27-ம் அதி. 55-56-ம் வசனங்களிலும், மாற். 15-ம் அதி. 41-ம் வசனத்திலும் காண்க.

Acts 1:14

நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். என்னை ஏற்றுக்கொள்ளுகிறவனோ, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத். 10:40.)

John 13:20

அதெப்படியென்றால், நாம் யூத ரானாலும், புறஜாதியாரானாலும், அடிமைகளென்றாலும், சுயாதீனரானாலும் எல்லோரும் ஒரே இஸ்பிரீத்துவி னாலே ஒரே சரீரமாயிருக்கும்படிக்கு ஞானஸ்நானம் பெற்று, எல்லோரும் ஒரே இஸ்பிரீத்துவில் பானம் பண்ணுகி றோம். (கலாத். 3:28; எபே. 2:13, 14.) *** 13. எல்லோரும் ஒரே இஸ்பிரீத்துவில் பானம்பண்ணுகிறோமென்பதற்கு அர்த்த மாவது: இஸ்பிரீத்துசாந்து ஆத்துமத்திலே பாய்ந்தோடுகிற ஜீவ ஜலமாயிருக்கிறாரென்று அப்போஸ்தலர் நடபடி 2-ம் அதிகாரம் 17, 18-ம் வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் இஸ்பிரீத்துசாந்துவில் பானம்பண்ணுகிறதென்கிறது இஸ்பிரீத்துசாந்துவின் வரங்களால் நிரப்பப்படுகிறதென்றறிக.

1 Corinthians 12:13

அப்படியே இராயப்பர் சிறைச்சாலையில் காக்கப்பட்டிருக்கையில், அவருக்காக இடைவிடாமல் சர்வேசுரனை நோக்கி ஜெபம் நடந்துவந்தது.

Acts 12:5

மெய்யான விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணும்.

1 Timothy 5:3


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |