Topic : Righteousness

நீதியையும் இரக்கத்தையும் பின்பற்றுகிறவன் வாழ்வையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.

Proverbs 21:21

அவரோ ஒவ்வொருவனுக்கும் அவனவன் செயல்களுக்கேற்பக் கைம்மாறு தருவார்.

Romans 2:6

ஆனால், கடவுளின் அடியாராகிய நீர் இவையெல்லாம் தவிர்த்துவிடும். நீதி, பக்தி, விசுவாசம், அன்பு, மனவுறுதி, சாந்தம் இவற்றைக் கடைப்பிடியும்.

1 Timothy 6:11

ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகிறார், தம் புனிதர்களை அவர் கைவிடுவதில்லை: நெறிகெட்டவர் அழிவுறுவர், அவர்கள் மக்கள் வேரோடு ஒழிந்து போவர்.

Psalms 37:28

ஏமாந்து போக வேண்டாம். கடவுளை ஏமாற்ற முடியும் என நினைக்காதீர்கள். ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

Galatians 6:7

மனிதனுடைய நெறியெல்லாம் அவனுக்கு முறையானவையாய்த் தோன்றுகின்றன. ஆனால், ஆண்டவர் இதயங்களை எடைபோடுகிறார்.

Proverbs 21:2

எந்நாளும் அவன் அசைவுறான்: என்றென்றும் அவன் மக்கள் நினைவில் வாழ்வான்.

Psalms 112:6

ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்; இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.

Matthew 6:33

நன்மை செய்வதில் மனந்தளராதிருப்போமாக! நாம் சோர்வுறாதிருந்தால், தக்க காலத்தில் அறுவடை கிடைக்கும்.

Galatians 6:9

இரக்கத்தையும் நீதியையும் கடைப்பிடித்தல் பலிகளைவிட ஆண்டவருக்கு அதிக விருப்பமாம்.

Proverbs 21:3

நீதியின் பொருட்டுத் துன்புற்றாலும், நீங்கள் பேறு பெற்றவர்களே. மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள், மனங்கலங்காதீர்கள்.

1 Peter 3:14

கடவுளோடு ஒப்புரவாகுங்கள். கடவுளுடைய அருள் தன்மையோடு நாமும் கிறிஸ்துவுக்குள் விளங்கும்படி, பாவமே அறியாத அவரை நமக்காகப் பாவ உருவாக்கினார்.

2 Corinthians 5:21

உங்களுள் யாரும் பழிக்குப் பழி வாங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். மாறாக எப்போதும் நன்மையே செய்ய நாடுங்கள்; ஒருவருக்கொருவர் நன்மை செய்யுங்கள்; மற்றெல்லார்க்கும் நன்மை செய்யுங்கள்.

1 Thessalonians 5:15

இறுதியாக, சகோதரர்களே, உண்மை எதுவோ, கண்ணியமானது எதுவோ, நீதி எதுவோ, தூயது எதுவோ, இனியது எதுவோ, எதெல்லாம் நற்பண்புடையதோ, எதெல்லாம் புகழ்ச்சிக்குரியதோ, அவற்றையே மனத்தில் கொள்ளுங்கள்.

Philippians 4:8

ஆண்டவருடைய கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவருடைய செவிகள் அவர்களது குரலைக் கேட்கின்றன.

Psalms 34:15

மாந்தர் அனைவருக்கும் மீட்பளிக்கும் கடவுளின் அருள் பிரசன்னமாகி
நாம் இறைப் பற்றின்மையையும் உலக இச்சைகளையும் விட்டொழித்து விவேகத்தோடும் நீதியோடும் பக்தியோடும் இம்மையில் வாழ நம்மைப் பயிற்றுகிறது.

Titus 2:11-12

அநியாயமாய்ச் சேர்த்த செல்வங்கள் யாதொரு பயனையுந் தராது. நீதியோ சாவினின்று விடுவிக்கும்.

Proverbs 10:2

தீயோரின் அறிவுரைப்படி நடவாதவன், பாவிகளின் வழியில் செல்லாதவன், பழிகாரர் கூட்டத்தில் அமராதவன் பேறு பெற்றோன்.

Psalms 1:1

சமாதானம் செய்வோர், சமாதானத்தில் விதைக்கும் விதையிலிருந்து இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வென்னும் கனி விளைகிறது.

James 3:18

உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால், அதனால் உங்களுக்கு என்ன பலன்? பாவிகளும் அவ்வாறு செய்கின்றனரே.

Luke 6:33

அக்கிரமி செய்த வேலை நிலைகொள்ளாது. நீதியை விதைப்பவனோ உண்மையான ஊதியம் பெறுவான்.

Proverbs 11:18

அவன், பாவம் செய்தவனாயிருந்தால், மன்னிப்புப் பெறுவான். ஆகவே, ஒருவர்க்கொருவர் பாவ அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவருக்காக ஒருவர் செபியுங்கள்; அப்போது குணமடைவீர்கள். நீதிமான் முழு உள்ளத்தோடு செய்யும் மன்றாட்டு ஆற்றல் மிக்கது.

James 5:16

பரிசுத்தவான்களை விழுங்குவதும், தன் நேர்ச்சைகளைத் தட்டிக்கழிப்பதும் மனிதனுக்கு அழிவையே தரும்.

Proverbs 20:25

முழு மனத்தோடு நான் உம்மைத் தேடுகிறேன்: உம் கற்பனைகளை விட்டுத் தவறிச் செல்ல என்னை விடாதேயும்.

Psalms 119:10

அலகையை எதிர்த்து நில்லுங்கள், அது ஓடி விடும். கடவுளை அணுகிச் செல்லுங்கள்; அவரும் உங்களை அணுகி வருவார். பாவிகளே, உங்கள் கைகளைத் தூய்மையாக்குங்கள்; இருமனத்தோரே, இதயங்களைப் புனிதப்படுத்துங்கள்.

James 4:8


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |