Topic : Righteousness

நீதியையும் இரக்கத்தையும் பின்செல்பவன் சீவியத்தையும், நீதி யையும், மகிமையையுங் கண்டெடுப் பான்.

Proverbs 21:21

அவனவனுடைய கிரியைகளுக் குத் தக்கபடியே சர்வேசுரன் அவனவனுக்குப் பதிலளிப்பார். (மத். 16:27.)

Romans 2:6

கடவுளுடைய மனுஷனாகிய நீரோ, இவைகளுக்கு விலகி ஓடி, நீதியையும், பக்தியையும், விசுவாசத்தையும், பரம அன்பையும், பொறுமையையும், சாந்தகுணத்தையும் நாடுவீராக.

1 Timothy 6:11


மோசம்போகாதேயுங்கள். சர்வேசுரன் நகைக்கப்படுகிறவரல்ல.

Galatians 6:7

மனிதனுடைய மார்க்கமெல் லாம் அவனுக்கு நேரானதாய்த் தோன்றுகின்றது;ஆனால் ஆண்டவர் இருதயங்களை நிறுத்துப் பார்க் கிறார்.

Proverbs 21:2

எளியவனை மண்ணில் நின் றெடுக்கிறவருமாய்த், தரித்திரனைப் பிரபுக்களோடுந் தமது ஜனத்தின் தலைவர்களோடும் ஸ்தாபிக்கும்படி அவனைக் குப்பையில் நின்று உயர்த்துகிறவருமாய்,

Psalms 112:6

ஆகையால் சர்வேசுரனுடைய இராச்சியத்தையும் அவருடைய நீதியையும் முந்தபந்தத் தேடுங்கள். அப்போது இவைகள் எல்லாம் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.

Matthew 6:33

ஆகையால் நன்மை செய்வதில் சோர்ந்து போகாதிருப்போமாக. ஏனெ னில் நாம் சோர்ந்துபோகாதிருந்தால், தக்க காலத்திலே பலனையறுப்போம். (2 தெச. 3:13.)

Galatians 6:9

இரக்கத்தையும் நீதியையும் அனுசரிப்பது பலிகளைவிட ஆண்ட வருக்கு அதிகப் பிரியமாம்.

Proverbs 21:3

ஆகிலும் நீங்கள் நீதியினிமித்தம் ஏதேனும் பாடுபட்டால் பாக்கியவான்கள். ஆதலால் அவர்கள் மிரட்டலுக்குப் பயப்படாமலும், கலங்காமலு மிருங்கள். (மத். 5:10.)

1 Peter 3:14

அவரிடமாய் நாம் சர்வேசுரனுடைய நீதியாகும்படிக்குச் சர்வேசுரன் பாவமறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். *** 21. பாவமாக்கினாரென்பதற்குப் பாவப்பலியாக்கினாரென்பது கருத்து. ஏனெனில் எபிரேய பாஷையில் பாவப்பரிகாரமாக ஒப்புக்கொடுக்கப்படுகிற பலியைப் பாவமென்றுசொல்வது வழக்கமாம்.

2 Corinthians 5:21

ஒருவரும் எவனுக்காவது தின்மைக்குத் தின்மை செய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்குள்ளும் மற்றெல்லாருக்குள்ளும் எப்போதும் நலமானதைச் செய்யும்படி நாடுங்கள். (பழ. 17:13; உரோ. 12:17.)

1 Thessalonians 5:15

கடைசியாய்ச் சகோதரரே, எதெது உண்மையோ, எதெது யோக்கியமோ, எதெது நீதியோ, எதெது பரிசுத்தமோ, எதெது அன்புக்குரியதோ, எதெது நற்கீர்த்திக்குரியதோ, எதெது புண்ணிய மோ, எதெது நல்லொழுக்கப் புகழ்ச்சி யோ, அவைகளைச் சிந்தித்துக்கொண் டிருங்கள்.

Philippians 4:8

அவர்களோவெனில், எனக்கு விரோதமாகச் சந்தோஷப்பட்டு கூட்டங் கூடி எனக்குப் பொல்லாப் புச் செய்தார்கள்; அப்படி செய் வதற்கு அவர்களுக்கு காரணமென்ன வென்று அறியாமலிருந்தேன்.

Psalms 34:15

ஏனெனில் நமது இரட்சகராகிய சர்வேசுரனுடைய வரப்பிரசாதம் சகல மனிதருக்கும் வெளியாகி, (தீத்து. 3:4.)
நாம் அவபக்தியையும், இலெளகீக இச்சைகளையும் வெறுத்து விட்டு, இவ்வுலகத்தில் மன அமைதி யோடும், நீதியோடும், பக்தியோடும் நடக்கவும்,

Titus 2:11-12

அநியாயமாய் சேகரித்த திரவி யங்கள்யாதொரு பயனையுந் தராது; நீதியோவெனில் மரணத்தினின்று விடுவிக்கும்.

Proverbs 10:2

துர்மார்க்கரின் ஆலோசனை யின்படி நடவாமலும் பாவிகளு டைய வழியில் நில்லாமலும் துர்ப் (போதனையின்) பிரசங்காசனத்தில் உட்காராமலும்,

Psalms 1:1

நீதியாகிய கனியானது சமாதானத்தை உண்டாக்குகிறவர்களால் சமாதானத்திலே விதைக்கப்படுகின்றது. (இசை. 32:17; மத். 5:9.)

James 3:18

உங்களுக்கு நன்மை செய்கிற வர்களுக்கே நீங்கள் நன்மை செய் தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் இவ்விதம் செய்கிறார்களே.

Luke 6:33

அக்கிரமி செய்த வேலை நிலை கொள்ளாது; நீதியை விதைப் பவனுக்கோவெனில் பிரமாணிக்க மான சம்பாவனையாம்.

Proverbs 11:18

நீங்கள் இரட்சணியம் அடையும் பொருட்டு, ஒருவருக்கொருவர் உங்கள் பாவங்களைச் சங்கீர்த்தனம் பண்ணி, ஒருவரொருவருக்காக வேண்டிக்கொள்ளுங்கள். ஏனெனில் நீதிமானுடைய அயராத வேண்டுதல் மிகுந்த வல்லமையுள்ளது. * 16. பின்னும் நீங்கள் இரட்சணியமடையும்படிக்கு ஒருவருக்கொருவர் உங்கள் பாவங்களைச் சங்கீர்த்தனம் பண்ணுங்களென்று கற்பிக்கிறார். இங்கே ஒருவருக்கொருவர் என்கிற வார்த்தைக்கு அர்த்தமேதெனில், பாவப்பொறுத்தல் கொடுக்க அதிகாரம் பெற்ற குருமார்கள் ஒருவருக்கொருவர் என்றும் மற்றக் கிறீஸ்தஃவர்கள் அந்த அதிகாரம் பெற்றிருக்கிற தங்கள் குருமார்களிடத்திலென்றும் அர்த்தமல்லாது வேறல்ல. ஏனெனில், பாவப்பொறுத்தலைக் கொடுக்க அதிகாரமில்லாதவர்களிடத்தில் ஒருவன் தன் பாவங்களை அறிக்கையிட்டால் பிரயோஜனமென்ன?

James 5:16

பரிசுத்தவான்களை விழுங்கு வதும், தன் பொருத்தனைகளை மக்க ளிக்கிறதும் மனிதனுக்கு நாசமேயாம்.

Proverbs 20:25


சர்வேசுரனை அண்டிப்போங்கள்; அவரும் உங்களை அண்டிவருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள். இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். (இசை. 1:16.)

James 4:8


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |