அதன்பின்பு இஸ்ராயேலின் தேவனாகிய கர்த்தருடைய பாஸ்கா வைக் கொண்டாட வேண்டுமென் றும், எருசலேமிலிருக்கிற கர்த்தரு டைய ஆலயத்திற்கு வர வேண்டு மென்றும் எசெக்கியாஸ் இஸ்ராயேல் தேசம் யூதா தேசம் எவ்விடத்தும் ஆட்களை அனுப்பினதும் தவிர எப்பிராயீம் மனாசே கோத்திரர் களுக்கும் நிருபங்களை எழுதி அனுப் பினான்.
இராசாவும் பிரபுக்களும் சபை யார் யாவரும் பெரிய சங்கமாகக்கூடி ஆலோசனை பண்ணினார்கள். அந்தச் சங்கத்திலே பாஸ்காவை இரண்டாம் மாதத்தில் ஆசரிக்க வேண்டுமென்று தீர்மானம் பண்ணி னார்கள்.
உள்ளபடி அந்தப் பண்டிகை யைக் கொண்டாட வேண்டிய திட்டமான காலத்தில் ஜனங்கள் அதை ஆசரிக்கக்கூடாமல் போயிற்று. காரணம்: ஊழியம் பண்ணத்தக்க ஆசாரியர்கள் தங்களைப் பரிசுத்தப் படுத்தினதுமில்லை, ஜனங்கள் எருச லேமில் இன்னும் கூடி வந்ததுமில் லையாம்.
மேற்சொல்லிய தீர்மானம் இராசாவின் பார்வைக்கு சமஸ்த சபையார் பார்வைக்கும் நியாயமாம் என்று காணப்பட்டது.
அவர்கள் இன்னொரு காரியத் தைத் தீர்த்துப் போட்டார்கள்; அது என்னவெனில்: இஸ்ராயேலின் தேவ னாகிய கர்த்தருடைய பாஸ்காவை எருசலேமில்தானே ஜனங்கள் வந்து கொண்டாட வேண்டுமென்று சொல் லிப் பெற்சபே முதல் தான் வரைக்கு முள்ள இஸ்ராயேல் தேசமெங்கும் ஆட்களை அனுப்பும்படி திட்டம் பண்ணினார்கள்; காரணம்; கற்ப னையை மீறி வெகு வெகு பேர்கள் (வெகு காலமாய்) பாஸ்காவை ஆசரிக்கவில்லை என்பதாம்.
அப்படியே இராசாவும் பிரபுக் களும் கொடுத்த தாக்கீதை அஞ்சல் காரர் வாங்கி, இஸ்ராயேல் தேசம் யூதா சேம் எவ்விடத்தும் போய் இராசா கட்டளையிட்ட பிரகாரம் பறைசாற்றி: இஸ்ராயேல் புத்திரரே! அபிரகாம், ஈசாக்கு, இஸ்ராயேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த் தரிடத்திற்குத் திரும்புங்கள்; திரும்பி னால் அசீரியருடைய இராசாக்களின் கைக்குத் தப்பிப் பிழைத்த உங்க ளுக்கு அவர் துணையாயிருக்கத் திரும்புவார்.
உங்கள் பிதாக்களும் உங்கள் சகோதரர்களும் தங்கள் பிதாக்களும் உங்கள் சகோதரர்களும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டு விட்டபடியால் அன்றோ அவர் அவர்களை மரணத்திற்கு ஒப்பு வித்தார்; அது உங்களுக்குத் தெரிந்த காரியம்தானே. நீங்கள் அவர்களைப் போல நடவாதேயுங்கள்.
உங்கள் பிதாக்கள் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தினார் களே, நீங்கள் அந்தப்படி செய்யாமல் கர்த்தரோடு உடன்பட்டு அவர் என் றைக்கும் பரிசுத்தமாக்கின அவரு டைய திரு ஸ்தலத்திற்குத் திரும்பி வந்து உங்கள் பிதாக்களின் தேவனா கிய அவருக்கு நல்ல ஊழியம் பண்ணு வீர்களேயாகில், கர்த்தருடைய உக்கி ரமமான கோபமானது உங்களை விட்டு அகன்றுபோம்.
ஆம்! கர்த்தரிடத்திற்குத் திரும் பினால் உங்கள் சகோதரரும், உங்கள் குமாரரும் தங்களைச் சிறைப்பிடித் துக்கொண்டுபோன எஜமான்களுக்கு முன்பாக இரக்கம் பெற்று இந்தத் தேசத்துக்குத் திரும்பி வருவார்கள். உள்ளபடி கிருபை தயாபமுள்ளவரா யிருக்கிறார் உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் அவரிடத்திற்குத் திரும்புவீர்களானால், அவரும் பாரா முகமாயிருக்கப் போகிறதில்லை என்று சொல்லி விளம்பரம் பண்ணி னார்கள்.
அஞ்சற்காரர் அவ்விதமே போய் எப்பீராயீம் தேசத்திலும், மனாசே தேசத்திலும், சபுலோன் தேசத்திலும் ஊர் ஊராகச் சீக்கிர மாய்த் திரிந்திருக்கையில் அத்தேசங் களிலிருந்த ஜனங்கள் அவர்களைத் திட்டியும் ஏசியும் பரிகாசம் பண்ணி னார்கள்.
ஆனாலும் ஆசரிலும், மனா சேயிலும், சபுலோனிலும் சிற்சில குடிகள் அஞ்சற்காரர் சொல்லைக் கேட்டு எருசலேமுக்கு வந்தார்கள்.
யூதாவிலேயோ கர்த்தருடைய கரமானது ஜனங்களை ஒருமனமா யிருக்கச் செய்தது. ஆனபடியால் அவர்கள் கர்த்தருடைய சித்தத்திற்கு அடங்கினவர்களாய் இராசாவும் பிரபுக்களும் கட்டளையிட்ட பிரகாரமே செய்துவந்தார்கள்.
அப்படியிருக்க, வெகு வெகு ஜனங்கள் எருசலேமுக்கு வந்து இரண் டாம் மாதத்திலே புளிப்பில்லாத அப்பப் பண்டிகையை ஆசரித்தார் கள்.
பின்பு அவர்கள் எழுந்து, எருச லேமிலுண்டான (மற்றுமுள்ள) பலி பீடங்களையும், விக்கிரகங்களுக்குத் தூபங் காட்டும் நானாவித தூபக் கலசங்களையும் அழித்துக் கெதிரோன் ஆற்றிலே எறிந்து போட்டார்கள்.
இப்படி இரண்டாம் மாதம் பதினாலாம் தேதியிலே பாஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள். பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர் களும், லேவியர்களும் கர்த்தருடைய ஆலயத்தில் சர்வாங்கத் தகனப் பலிகளையும், செலுத்தி வந்தார்கள்.
அவர்கள் தேவனுடைய மனுஷனாகிய மோயீசனின் நியாயப் பிரமாணத்திற்கேற்ற விதமாய்த் தங்கள் முறைமையின்படியே தம் தம் ஸ்தானத்தில் நின்றார்கள். குருக்களோ லேவியர்களின் கையிலிருந்து இரத் தத்தை வாங்கித் தெளித்தார்கள்.
சபையிலே மிகுதியான ஜனங் கள் தீட்டுப்பட்டிருந்தார்கள். ஆனது பற்றித் தங்களைப் பரிசுத்தப்படுத்தா திருந்தவர்களுக்காக லேவியர்கள் பாஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்து வந்தார்கள்.
ஆனது பற்றி எப்பிராயீம், மனாசே, இசாக்கார், சபுலோன் கோத்திரத்தாரில் மிகுதியான பேர் கள் இனனும் தீட்டுப்பட்டிருந்த போதிலும் பாஸ்காவைத் தின்றார் கள். அது எழுதியிருக்கிற நியாயப் பிரமாணத்திற்கு விரோதமாயிருந் தது வாஸ்தவம். ஆனால் எசெக்கி யாஸ் அவர்களுக்காகக் கர்த்தரிடம வேண்டிக்கொண்டு: கர்த்தர் நல்லவ ராயிருக்கிறபடியால்,
எவர்கள் முழு மனதோடு தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடி வருகிறார்களோ அவர்களுக்கு அவர் தயவுபண்ணு வார். அவர்கள் சுத்தாங்கம் அடையா திருந்தபோதிலும் அவர் அதைக் குற்றமாகப் பாராட்டாமல் மன்னிப் பாரென்று சொன்னான்.
கர்த்தர் எசேக்கியாஸுடைய விண்ணப்பத்தை அங்கீகரித்து ஜனங் களின் மேல் கோபங்கொள்ள வில்லை.
அப்படியே எருசலேமிலே இருந்த இஸ்ராயேல் புத்திரர் புளிப் பில்லாத அப்பப் பண்டிகையை ஏழு நாளளவும் மகா ஆனந்தத்தோடு ஆடம்பரமாகக் கொண்டாடினார் கள். லேவியர்களும் ஆசாரியர்களும் தம் தம் ஊழியத்திற்கேற்ற தேவ வாத்தியங்களை வாசித்து எம்மேரை யாய்க் கர்த்தரை ஸ்துதித்து வந்தார் களோ, அவர்களுக்கு அம்மேரை யாகவே செய்தார்கள்.
கர்த்தருக்கடுத்த காரியங் களை உத்தம விதமாய்க் கண்டுணரும் சகல லேவியர்களோடு எசேக்கியாஸ் பட்சமாய்ப் பேசினான். ஆனதுபற்றி அவர்கள் பண்டிகையின் ஏழு நாளள வும் புசித்துச் சமாதானப் பலி மிருகங் களைப் பலியிட்டுத் தங்கள் பிதாக் களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரம் பண்ணிவந்தார்கள்.
பின்பு ஜனங்கள் எல்லாரும் வேறு ஏழு நாளளவும் கொண்டாட் டம் பண்ணலாமென்று யோசனை பண்ணி அவ்விதமே மற்ற ஏழு நாள் திருவிழாவையும் ஆனந்தத்தோடு கொண்டாடினார்கள்.
உள்ளபடி யூதாவின் இராசா வாகிய எசேக்கியாஸ் சபைக்கு ஆயிரம் காளைகளையும், ஏழாயிரம் ஆடுகளையும் கொடுத்திருந்தான். அதுவுமல்லாமல் பிரபுக்களும் ஜனங் களுக்கு ஆயிரம் காளைகளையும், பதினாயிரம் ஆடுகளையும் கொடுத் திருந்தார்கள். ஆனதுபற்றி ஆசாரிய ரில் வெகுவெகுபேர்கள் தங்களைச் சுத்தம்பண்ணினார்கள்.
யூதாவின் சபை அனைத்தும் ஆசாரியரும் லேவியரும் இஸ்ராயே லிலிருந்து வந்த ஜனங்கள் அனை வரும் யூதாவிலும் இஸ்ராயேலிலும் குடியிருந்து யூதர்களுடைய வேதத் தைப் பற்றிக் கொண்டிருந்த அந்நியர் களும் சந்தோஷ சாகரத்தில் அமிழ்ந் திருந்தார்கள்.
அப்படியே எருசலேமில் கொண்டாடப்பட்ட திருவிழா மகா சிறப்பாயிருந்தது. இஸ்ராயேலின் இராசாவாகிய தாவீதின் குமார னாகிய சலொமோனுடைய நாட்கள் துவக்கி அப்படிப்பட்ட ஆடம்பர மான சடங்குகள் நடந்ததில்லை.
கடைசியிலே ஆசாரியர்களும் லேவியர்களும் எழுந்து நின்று ஜனக் கும்பலை ஆசீர்வதித்தார்கள். அவர் களுடைய விண்ணப்பம் பரலோக மென்கிற திருஸ்தல மட்டும் எட்டிற்று.
2 Chronicles 30:9b