Topic : Prophecy

நான் தீர்க்கதரிசன வரத்தைக் கொண்டிருந்தாலும், எல்லா இரகசியங்களையும், எல்லாக் கல்விகளையும் அறிந்தவனாயிருந்தாலும், மலைகளைப் பெயர்க்கத்தக்க எவ்வித விசுவாசத்தையுமுடையவனா யிருந்தாலும் என்னிடத்திலே தேவசிநேகமில்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை. (மத். 21:21.)

1 Corinthians 13:2

ஆனால் எல்லாவற்றையும் பரிசோதித்து, நலமானதைக் கைப்பற்றிக்கொள்ளுங்கள்.
தின்மையாகத் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.

1 Thessalonians 5:21-22

ஏனெனில், தீர்க்கதரிசனமானது எக்காலத்திலாவது மனுஷருடைய மனதினால் உண்டானதல்ல. சர்வே சுரனுடைய பரிசுத்த மனுஷர்கள் இஸ்பிரீத்துசாந்துவினால் ஏவப்பட்டுப் பேசினார்கள். *** 20-21. கிறீஸ்துவர்கள் பரலோக மகிமைப்பிரதாப ஒளியில் சேருந்தனையும் இவ்வுலக அந்தகாரத்தில் நடக்கிறதினாலே, எப்போதும் தேவ வாக்கியத்தைத் திருவிளக்காகக் கையிலேந்தி அதின் ஒளியில் நடக்கவேண்டுமென்று அர்ச். இராயப்பர் படிப்பிக்கிறார். இத்தோடு இன்னொரு விசேஷத்தையும் கவனிக்கவேண்டுமென்று அவர் படிப்பிக்கிறார். என்னவெனில்: பரிசுத்த தீர்க்கதரிசிகள் தங்கள் சுயமனதாய் ஒருபோதும் பேசாமல், இஸ்பிரீத்துசாந்துவானவர் தங்களுக்கு ஏவினபடியே பேசின படியால் அந்த ஏவலின்படி அவர்கள் பேசினவைகளுக்கும், எழுதினவைகளுக்கும், எவனும் தன் சுயமனதின்படி அர்த்தமாவது வியாக்கியானமாவது செய்யலாகாதென்று கட்டளையிடுகிறார். இஸ்பிரீத்துசாந்துவினால் நடத்தப்படுகிற சத்திய திருச்சபை மாத்திரம் அவைகளுக்கு மெய்யான அர்த்தத்தையும் வியாக்கியானத்தையுஞ் சொல்லக்கூடும். இதனிமித்திம் உரோமான் கத்தோலிக்கு திருச்சபையிலுள்ள வேதபாரகரெல்லாரும் வேதவாக்கியங்களுக்கு வியாக்கியானஞ் செய்யும்போது, தங்கள் இஷ்டப்படி செய்யாமல், திருச்சபையின் படிப்பினையையும் நோக்கத்தையுமுன்னிட்டு வியாக்கியானம் செய்கிறார்கள். அன்றியும் அவர்கள் வேதசம்பந்தமாய் எழுதியதெல்லாவற்றையும், திருச்சபையானது பரிசோதித்து ஆராயும்படிக்கு அதற்கு ஒப்புக்கொடுத்து, திருச்சபையால் செய்யப்படும் திருத்தங்களையும், அங்கீகரிப்பையும் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

2 Peter 1:21

எனக்கு மிகவும் அன்பரே, நீங்கள் எல்லா ஞானிகளையும் நம்பாமல், அவர்கள் சர்வேசுரனிடத்திலிருந்து வந்தவர்களோ என்று சோதித்து அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில், உலகத்தில் அநேகம் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருக்கிறார்கள். (யூதா. 4.)

1 John 4:1

தம் அடியராகிய தீர்க்கதரிசி யருக்குத் தம் மர்மத்தை வெளி யிடாது, தேவனாகிய ஆண்டவர் ஒரு காரியத்தையும் நடத்துகின்றா ரில்லை.

Amos 3:7

நீ திரும்பிப் போய் என் பிரசை யின் தலைவனான எசேக்கியாசை நோக்கி: உன் பிதாவான தாவீதின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவெனில்: உன் செபத்தைக் கேட்டோம்; (நீ சிந்திய) கண்ணீரை யுங் கண்டோம்; இதோ உன்னைச் சொஸ்தமாக்கினோம், நீ மூன்று தினத்தில் ஆண்டவருடைய தேவால யத்திற்குப் போவாய்;

2 Kings 20:5

ஆட்டுத்தோலைப் போர்த்திக் கொண்டு உள்ளத்திலே பறிக்கிற ஓநாய்களாக உங்களிடத்தில் வருகிற கள்ளத் தீர்க்கதரிசிகள் மட்டில் எச்சரிக்கையாயிருங்கள்.

Matthew 7:15

ஆகையால் மனுஷர் உங்களுக்கு எதெதைச் செய்யவேணுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். ஏனெனில் வேதப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமிதுவே. (லூக் 6:31; தோபி. 4:16.)

Matthew 7:12

ஆகையால் நீங்கள் இனி அந்நியரும், பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களுடைய நகரத்தாரும், சர் வேசுரனுடைய வீட்டாருமாயிருந்து,
அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள் எனப்பட்ட அஸ்திவாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களாயிருக்கிறீர்கள். அதற்குக் கிறீஸ்து சேசுநாதர் தாமே ஆதிமூலைக்கல்லாயிருக்கிறார்.

Ephesians 2:19-20

பிள்ளைகளே, நீங்கள் சர்வேசுரனால் உண்டாயிருக்கிறீர்கள். உங்களுக் குள் இருக்கிறவர் உலகத்திலிருக்கிறவ னைவிடப் பெரியவராய் இருக்கிறபடி யால், நீங்கள் அவனை ஜெயித்தீர்கள்.

1 John 4:4

இப்பொழுதோ, சர்வேசுரனுடைய நீதியானது வேதப்பிரமாணமின்றி வெளியாக்கப்பட்டிருக்கிறது. வேதப்பிரமாணமும் தீர்க்கதரிசனமும் அதற்குச் சாட்சியாக நிற்கின்றது. *** 20-21. வேதப்பிரமாணத்தின் வழியாய்ப் பாவத்தின் அறிவு உண்டாகிறது:- மோயீசன் வழியாய்ச் சர்வேசுரன் கட்டளையிட்ட பத்துக்கற்பனைகளினாலும் சடங்குகளினாலும் பாவமிது புண்ணியமிதென்று யூதர்கள் அறிந்துகொண்டார்களேயயாழிய பழைய ஏற்பாட்டின் சடங்குகளை அனுசரித்ததினாலே மாத்திரம் அவர்கள் நீதிமான்களாக்கப்படவில்லை. ஆனால் புதிய ஏற்பாட்டில் சேசுநாதர்சுவாமி ஏற்படுத்திய தேவதிரவிய அநுமானங்களால் மனிதன் நீதிமானாக்கப்படுகிறான். இந்தத் தேவதிரவிய அனுமானங்களெல்லாம் பழைய ஏற்பாட்டின் சடங்குகளை வியர்த்தமாக்கிப் போட்டன.
சேசுக்கிறீஸ்துநாதர்பேரிலுள்ள விசுவாசத்தினாலுண்டாகும் சர்வேசுரனுடைய நீதியானது யாதோர் வித்தியாசமுமின்றி அவரை விசுவசிக்கிற எல் லாருக்கும், எல்லார்மேலும் வருகிறது. *** 21-22. சர்வேசுரனுடைய நீதி:- இவ்வார்த்தை சர்வேசுரனால் நீதிமானாகும் தன்மையென்று அர்த்தங்கொள்ளும்.

Romans 3:21-22

ஆனதை முன்னிட்டு ஆண்ட வர்தாமே உங்களுக்கு அற்புத அடை யாளந் தருவார்; இதோ கன்னியான வள் கற்பமாகி மகவைப் பெறுவாள்; அது மனுவேலன் என்னும் அபிதா னம் பெறும் (மத்.1:23; லூக். 1:31).

Isaiah 7:14

இவையாவும் ஆண்டவர் தீர்க்கதரிசியால் மொழிந்தது நிறைவேறும்படி ஆயிற்று. அவர் சொல்வதேதெனில்:
“ஒரு கன்னி கெற்பந்தரித்து ஒரு புத்திரனைப் பெறுவாள், அவருக்கு எம்மானுவேல் என்னும் நாமமிடுவார்கள்.” அதற்கு “சர்வேசுரன் நம்மோடு” என்றர்த்தமாம். (இசை. 7:14; 61:1.) * 23. தலைப்பேறு:- லூக். 2-ம் அதி. 7-ம் வசன வியாக்கியானத்தில் இதற்கு விபரம் காண்க.

Matthew 1:22-23

சீயோன் மாதே! மிகு களிகூர் வாயாக; எருசலேம் மாதே! அகமகிழ் வாயாக, நீதிமானும் இரட்சகனு மான உன் அரசன் உன்னிடம் இதோ வருகின்றார்; அவர் எளியவராய்ப் பெட்டைக் கழுதை மீதும், கழுதைக் குட்டிமீதும் ஆரோகணராய் (வரு கின்றார்.)

Zechariah 9:9


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |