Topic : Beauty

உங்களுடைய அலங்கரிப்பு கூந்தலைப் பின்னுவதும், பொன்னாபரணங்களை அணிவதும், அல்லது உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்வதுமாகிய வெளி அலங்கரிப்பாயிராமல், (1 தீமோ. 2:9; இசை. 3:18-24.)
இருதய உள்ளரங்க மனுஷத்துவமானது சாந்தமும் அமரிக்கையுமான மனத்தூய்மையினாலே அலங்கரிக்கப்படவேண்டியது. இதுவே சர்வேசுரனுடைய சமுகத்தில் விலையேறப்பெற்றது.

1 Peter 3:3-4

அந்தமும் பொய்யும் செளந் தரியமும் வியர்த்தமாம்; ஆண்டவ ருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப் படுவாள்.

Proverbs 31:30

எருசலேமே! எழுத்திரு; உன் தீபம் வந்ததாலும், ஆண்டவருடைய மகிமை உன்பேரில் உதயமானதாலும், பிரகாச மயமாய் விளங்குவாயாக.

Isaiah 60:1

ஆண்டவர் சமுவேலை நோக்கி: நீ அவனுடைய முகத்தையுஞ் சரீர உயரத்தையும் பார்க்காதே; ஏனெ னில், நான் அவனைத் தள்ளிவிட் டேன். மனுஷன் பார்க்கிறது ஒரு விதம், நாம் தீர்மானிக்கிறது வேறு விதம்; மனிதன் வெளிக்குத் தோன்று பவைகளைப் பார்க்கிறான்; ஆண்ட வர் இருதயத்தைப் பார்க்கிறா ரென்று சொன்னார் (சங். 7:10).

1 Samuel 16:7

இப்படியே நீதிமான்கள் உம்முடைய நாமத்தைத் துதிப்பார் கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்திலே வாசம்பண்ணுவார்கள்.

Psalms 139:13-14

அப்படியே ஸ்திரீகளும் யோக்கியமான ஆடையணிந்து, நாணத்தையும் இச்சையடக்கத்தையும் ஆபரணமாகப் பூண்டு, சடை பின்னாமலும், பொன்னினாலாவது முத்துக்களினாலாவது விலையேறப்பெற்ற வஸ்திரங்களினாலாவது தங்களை அலங்கரியாமலும், ( 1 இரா. 3:3.)
தேவ பக்தியை முன்னிட்டு நடக்கிற பெண்பிள்ளைகளுக்கு யோக்கியமான விதமாய் நற்கிரியைகளால் தங்களை அலங்கரிக்கக்கடவார்கள்.

1 Timothy 2:9-10

இதனிமித்தம் நாங்கள் மனச் சோர்வு அடைவதில்லை. ஏனெனில் நமது புறத்து மனிதன் அழிந்தாலும், உள்ளத்து மனிதன் நாளுக்குநாள் புதுப்பிக்கப்படுகிறான்.

2 Corinthians 4:16

புல் உலர்ந்துபோகிறது, புஷ்பம் உதிர்ந்துபோகிறது; ஆனால் நமதாண் டவரின் வார்த்தையோ நித்தியத்துக் கும் நிலைத்திருக்கும்.

Isaiah 40:8

ஆதலால் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: உங்கள் உயிர் பிழைக்க எதை உண்போமென்றும், உங்கள் உடலை மூட எதை உடுத்திக் கொள்வோமென்றும் ஏக்கமாயிராதேயுங்கள். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் மேன்மையானதல்லவோ ? (லூக். 12:22-31; பிலிப். 4:6; 1 தீமோ . 6:7; 1 இரா . 5:7: சங். 54:23, 24.)

Matthew 6:25

ஏனெனில் நாம் நற்கிரியைகளைச் செய்கிறதற்குக் கிறீஸ்து சேசு வுக்குள் சிருஷ்டிக்கப்பட்டுத் தேவனுடைய கைவேலையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார். *** 10. கைவேலை: நீதிமானாக்கப்பட்டவன் மெய்யாகவே இஷ்டப்பிரசாதத்தால் புது உயிர் அடைந்தவனாயிருப்பதால், சர்வேசுரனுடைய கைவேலை எனப்படுகிறான்.

Ephesians 2:10

அவ்வாறு கடவுள் மனிதனைத் தம்முடைய சாயலாகப் படைத்தார். தேவ சாயலாகவே அவனைச் சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். (ஞானா.2:23; சர்வப்.17:1; மத்.19:4.)

Genesis 1:27


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |