Topic : Mind

ஆதலால் சகோதரரே, நீங்கள் எவ்வளவு ஜாக்கிரதையாய் நடக்க வேண்டுமென்று பார்த்துக்கொள்ளுங்கள். புத்தியீனரைப்போல் நடவாமல், (கொலோ. 4:5.)
காலம் கெட்டுப்போயிருக்கிறபடியால், போன காலத்தை மீட்டு, ஞானிகளைப்போல் நடங்கள். *** 16. காலத்தை மீட்டுக்கொள்ளுங்கள் என்பதின் கருத்தாவது: இக்காலங்கள் கெட்டவைகளாயிருக்கிறபடியினாலே எச்சரிக்கையோடும், விமரிசையோடும், விழிப் போடுமிருந்து எவ்விதத்திலும் காலத்தைப் புண்ணிய வளர்ச்சிக்குப் பிரயோசன மாக்கிக்கொள்ளுங்கள். அவனவன் இதுவரையில் ஜீவித்த ஜீவியத்தை இப்போது யோசித்துப்பார்த்தால், அதில் அநேககாலம் வீணாய்க் கெட்டுப்போயிற்றென்று காண்பான். அவன் இவ்விதமாய் நஷ்டமாக்கின காலத்துக்குப் பரிகாரஞ்செய்து அந்தக் காலத்தை மீட்கும்படி சுறுசுறுப்போடு புண்ணிய சம்பத்துக்களை அதிகமாய்த் தேடிக்கொள்ளவேண்டுமென்பது கருத்து.

Ephesians 5:15-16

பூமியில் உள்ளவைகளையல்ல, மேலாவில் உள்ளவைகளையே நாடுங்கள்.

Colossians 3:2

சேசுநாதர் அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தாவை உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்து மத்தோடும், உன் முழு மனதோடும் சிநேகிப்பாயாக. (உபாக. 6:5.)

Matthew 22:37

அறிவுடையோன் தன் ஆன்மா வைச் சிநேகிக்கிறான்; விவேகத்தைக் காக்கிறவனும் நன்மையைக் கண்டடைவான்.

Proverbs 19:8

இரும்பு இரும்பால் தீட்டப் படுகின்றது; மனிதனோ தன் சிநேகித னால் தூண்டப்படுவான்.

Proverbs 27:17

விமரிசையுள்ள மனிதன் தீமை யைக் கண்டு மறைந்துகொண்டான்; அதை கவனியாமையினால் கஷ்டங் களை அநுபவித்தார்கள்.

Proverbs 27:12

உங்களில் ஞானியும் கல்விமானும் யார்? அவன் ஞானத்துக்குரிய சாந்தகுணத்தோடு தன் கிரியைகளை நல்லொழுக்கத்தினாலே காண்பிக்கக் கடவான்.

James 3:13

ஆகையால் என்னுடைய இவ் வார்த்தைகளைக் கேட்டு, இவைகளை அனுசரிக்கிற எவனும் கற்பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டி எழுப்பின விவேகமுள்ள மனுஷனுக்கு ஒப்பாவான். (லூக். 6:48; உரோ . 2:13; இயா . 1:22.)

Matthew 7:24

எனக்கு அளிக்கப்பட்ட வரத்தினாலே நான் உங்கள் எல்லாருக்குஞ் சொல்லுகிறதாவது: வேண்டிய ஞானத் துக்கு மிஞ்சின ஞானமுள்ளவர்களாக வேண்டாம். அளவு மட்டோடும், அவனவனுக்குக் கடவுள் பகிர்ந்த விசு வாசத்தின் அளவுக்கேற்றாற்போலும், உங்கள் ஞானமிருக்கட்டும். ( 1கொரி. 12:11; எபே. 4:7.)

Romans 12:3

எவ்வாறெனில், கண்ணுக்கெட்டாத அவருடைய இலட்சணங்கள் உலகமுண்டானதுமுதல் சிருஷ்டிக்கப் பட்ட பொருட்களாலே புத்திக்கெட் டும்படியாகி, அவருடைய நித்திய வல்லமையையும், தெய்வீகத்தையுங் கூட விளங்கப்பண்ணுவதால் அவர் கள் போக்குச்சொல்வதற்கு இடமே யில்லை

Romans 1:20

எப்படியெனில், உங்களுக்குள்ளே நான் சேசுக்கிறீஸ்துநாதரை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி வேறொன்றையும் அறிந்தவனாயிருக்க வேண்டுமென்று எண்ணவில்லை. (கலா. 6:14.)

1 Corinthians 2:2

மதியீனனுங்கூட மெளனமா யிருப்பானாகில் ஞானியாகவும், தன் உதடுகளை மூடுவானாகில் அறிவுடை யோனாகவும் மதிக்கப்படுவான்.

Proverbs 17:28

மதிகேடன் தன் பிதாவின் கண்டனையை நகைக்கிறான்; ஆனால் கண்டனைகளைக் காக்கிற வன் மிக விவேகியாவான். நீதித் துவம் எவ்வளவு மிகுவோ அவ்வள வாக அதிக மனத் திடனுண்டாகும்; அக்கிரமிகளின் சிந்தனைகளோ வெனில் வேருடன் கலைக்கப்படும்.

Proverbs 15:5

ஏனெனில் அதிக ஞானத்தில் அதிக சலிப்புண்டாம்; படிக்கப் படிக்கப் கஷ்டமும் அதிகரிக்கும்.

Ecclesiastes 1:18

ஞானத்தைக் கண்டுபிடித்து, விமரிசையால் மிகுந்திருக்கும் மனிதனே பாக்கியவான்.

Proverbs 3:13


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |