Topic : Love

தேவசிநேகமோ பொறுமையுள்ளது, தயவுள்ளது. தேவசிநேகம் பொறாமைப்படாது, துடுக்காய்ச் செய்யாது, அகங்காரப்படாது.
பெருமையைத் தேடாது, சுயநலத் தை விரும்பாது, கோபங்கொள்ளாது, தீங்கு நினையாது.

1 Corinthians 13:4-5

உங்கள் காரியமெல்லாம் பரம அன்போடு செய்யப்படக்கடவது.

1 Corinthians 16:14

அவர்களுடைய வாய் வீண் பேச்சுப் பேசினது; அவர்களுடைய வலது கை தோஷத்தின் கையாயிருக் கின்றது.

Psalms 143:8

இரக்கமுஞ் சத்தியமும் உன்னை விட்டுவிடாதிருக்கும்; அவற்றை உன் கழுத்துக்கு (ஆரமாய்ச்) சூடு வாய்; உன் இருதயத்தில் பதியவைப் பாய்.
அப்போது நீ தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாகக் கிருபை யையும், நல்லறிவையுங் கண்டடை வாய்.

Proverbs 3:3-4

ஆனால் இவையெல்லாவற்றிற்கும் மேலாக உத்தமதனத்தின் பந்தன மாகிய பரம அன்பைக் கொண்டிருங்கள்.

Colossians 3:14

சர்வேசுரன் நமதுமேல் வைத்திருக்கிற நேசத்தை நாம் அறிந்து, விசுவசித்திருக்கிறோம். சர்வேசுரன் சிநேகமாகவே இருக்கிறார். சிநேகத்தில் நிலைத்திருக்கிறவன் சர்வேசுரனிடத் தில் நிலைத்திருக்கிறான்; சர்வேசுரனும் அவனிடத்தில் நிலைத்திருக்கிறார்.

1 John 4:16

எவ்வித தாழ்ச்சியோடும், சாந்தத்தோடும், பொறுமையோடும், ஒருவ ரொருவரைப் பரம அன்போடு தாங்கிக் கொண்டு,

Ephesians 4:2

ஆகையால் சர்வேசுரன் நம்மை முந்திச் சிநேகித்தபடியினாலே நாமும் அவரைச் சிநேகிப்போமாக.

1 John 4:19

இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் இம்மூன்றும் நிலை கொண்டிருக்கிறது. ஆகிலும் இவை களில் தேவசிநேகமே சிரேஷ்டமானது.

1 Corinthians 13:13

எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரோடொருவர் நிலைமையான சிநேகமுள்ளவர்களாயிருங்கள். ஏனெனில் சிநேகமானது திரளான பாவங்களை மூடும். (பழ. 10:12.)

1 Peter 4:8

நீங்கள் அவருடைய இஸ்பிரீத்துவினால் உள்ளரங்க மனிதனாக வல்லமையால் பலப்படவும்,
விசுவாசத்தினாலே கிறீஸ்துநாதர் உங்கள் இருதயங்களில் வாசம் பண்ண வும், நீங்கள் பரம அன்பில் வேரூன்றி நிலைபெற்று, (கொலோ. 2:7.)

Ephesians 3:16-17

உங்கள் சிகேம் பாசாங்கற்றிருப் பதாக; தின்மையை வெறுத்து, நன்மை யைக் கைப்பற்றிக்கொள்ளுங்கள். (யாத். 20:14; உபாக. 5.18.)

Romans 12:9

நான் தீர்க்கதரிசன வரத்தைக் கொண்டிருந்தாலும், எல்லா இரகசியங்களையும், எல்லாக் கல்விகளையும் அறிந்தவனாயிருந்தாலும், மலைகளைப் பெயர்க்கத்தக்க எவ்வித விசுவாசத்தையுமுடையவனா யிருந்தாலும் என்னிடத்திலே தேவசிநேகமில்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை. (மத். 21:21.)

1 Corinthians 13:2

(அதற்கு மாறுத்தாரமாக:) பெண்ணானவள் தன் பாலனை மறப் பதுண்டோ? தன் கற்பகர குழந்தைக்கு இரங்காதிருப்பாளோ? அப்படி அவள் மறந்தாலும் நாம் உன்னை ஒரு போதும் மறக்கவறியோம்.
இதோ நமது கரங்களில் உன்னை அட்சரமிட்டிருக்கின்றோம்; உன் பட்டணத்து மதிள்கள் நம் கண் கள் முன் எப்போதும் பிரசன்ன மாகும் (யாத்.13:9).

Isaiah 49:15-16

நான் உங்களைச் சிநேகித்தது போல, நீங்களும் ஒருவர் ஒருவரைச் சிநேகிக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. (அரு. 13:34; எபே. 5:2; 1 தெச. 4:9.)

John 15:12

புருஷர்களே, கிறீஸ்துநாதர் திருச்சபையை நேசித்து, அதற்காகத் தம்மைத்தாமே கையளித்ததுபோல, நீங்களும் உங்கள் மனைவிகளை நேசியுங்கள். (கொலோ. 3:19.)
கிறீஸ்துநாதர் ஜீவ வாக்கியத்தைக்கொண்டு ஜல ஞானஸ்நானத்தால் அதைச் சுத்திகரித்துப் பரிசுத்தமாக்கவும்,

Ephesians 5:25-26

சகோதர சிநேகத்தோடு அன்னியோன்னிய நேசமாயிருங்கள். கனம் பண் ணுவதில் ஒருவரையயாருவர் முந்திக் கொள்ளுங்கள். (எபே. 4:3; 1 இரா. 2:17.)

Romans 12:10

கர்த்தர் உங்கள் இருதயங்களைத் தேவசிநேகத்தாலும், கிறீஸ்துநாதருடைய பொறுமையிலும் நடத்துவாராக.

2 Thessalonians 3:5

சர்வேசுரனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. நாம் ஒருவரொருவரைச் சிநேகித்தால், சர்வேசுரன் நம்முள் நிலைத்திருக்கிறார். அவருடைய பரம அன்பும் நம்மில் உத்தமமாயிருக்கின்றது. (அரு. 1:18; 1 தீமோ. 6:16.) *** 12. சர்வேசுரனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. இவ்வுலகத்தில் அநேகர் சர்வேசுரனைக் கண்டதாக வேதத்தில் எழுதப்பட்டிருப்பது மெய்யே. ஆனாலும் அர்ச். சின்னப்பர் 1 கொரி. 13-ம் அதி. 12-ம் வசனத்தில் சொல்லியிருக்கிறபடியே: கண்ணாடியில் கண்டதுபோல அவரைத் தரிசித்தார்களேயன்றி, அவருடைய சுபாவ சொரூபத்தில் ஒருவரும் கண்டதில்லை.

1 John 4:12

சர்வேசுரனைச் சிநேகிக்கிறேன் என்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். ஏனெனில், தான் கண்ணால் காண்கிற சகோதரனைச் சிநேகியாதவன், தான் காணாத சர்வேசுரனை எப்படிச் சிநேகிக்கக்கூடும்?

1 John 4:20

ஒருவன் தன் சிநேகிதர்களுக்காகத் தன் பிராணனைக் கொடுக்கிறதைவிட அதிகமான சிநேகம் எவனிடத்திலும் இல்லை. நான் உங்களுக்குக் கற்பிக்கிறவைகளைச் செய்வீர்களாகில் என் சிநேகிதராய் இருப்பீர்கள். (1 அரு. 3:16.)

John 15:13

நமது கண்களுக்கு நீ கனமுற்ற தாயும், விலையேறப்பெற்றதாயும் ஆனது தொட்டு உன்னை விசேஷ விதமாய் நேசித்தோம்; உனக்காக மனிதரை (பிறர்) கையளிப்போம், உன் சீவனுக்காகச் சனங்களைப் போக்கடிப்போம்.

Isaiah 43:4

ஆனால் எழுதப்பட்டிருக்கிற படியே சர்வேசுரன் தம்மை நேசிக்கிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணியிருக்கிறவைகளைக் கண் கண்டதுமில்லை; காதுகேட்டதுமில்லை; மனிதருடைய இருதயத்திற்கு அவைகள் எட்டினது மில்லை. (இசை. 64:4.)

1 Corinthians 2:9

நாம் சர்வேசுரனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்பட்டு, மெய்யாகவே அவருக்குப் பிள்ளைகளாயிருக்கும்படிக்கு எத்தன்மையான பரம அன்பைப் பிதாவானவர் நமக்குத் தந்தருளினாரென்று பாருங்கள். ஆகையால் உலகம் நம்மை அறியாதிருந்தால், அது அவரையும் அறியாதிருப்பதே அதற்குக் காரணம். (உரோ. 8:15.)

1 John 3:1

நீங்கள் ஒருவரையயாருவர் சிநேகிக்கவேண்டிய கடன் நீங்கலாக, மற்ற எந்த விஷயத்திலும் கடன்காரராகாதேயுங்கள். ஏனெனில் பிறனைச் சிநேகிக்கிறவன் எவனோ, அவனே வேதகற்பனையை நிறைவேற்றினவன்.

Romans 13:8


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |