12. சர்வேசுரனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. நாம் ஒருவரொருவரைச் சிநேகித்தால், சர்வேசுரன் நம்முள் நிலைத்திருக்கிறார். அவருடைய பரம அன்பும் நம்மில் உத்தமமாயிருக்கின்றது. (அரு. 1:18; 1 தீமோ. 6:16.) *** 12. சர்வேசுரனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. இவ்வுலகத்தில் அநேகர் சர்வேசுரனைக் கண்டதாக வேதத்தில் எழுதப்பட்டிருப்பது மெய்யே. ஆனாலும் அர்ச். சின்னப்பர் 1 கொரி. 13-ம் அதி. 12-ம் வசனத்தில் சொல்லியிருக்கிறபடியே: கண்ணாடியில் கண்டதுபோல அவரைத் தரிசித்தார்களேயன்றி, அவருடைய சுபாவ சொரூபத்தில் ஒருவரும் கண்டதில்லை.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save