கொடுங்கள், உங்களுக்கும் கொடுக் கப்படும்; அமுக்கவும் குலுக்கவும்பட்டுச் சரிந்துவிழும் நல்ல அளவை உங்கள் மடியில் போடுவார்கள். ஏனெனில் நீங்கள் அளந்த அளவினாலேயே உங்களுக்கும் பதில் அளக்கப்படும் என்றார். (மத். 7:2; மாற். 4:24.)
ஆகையால் விதைக்கிறவனுக்கு விதையைக் கொடுக்கிறவர் உங்களுக்குப் புசிப்பதற்கு அப்பத்தையுங் கொடுத்து, உங்கள் விதையையும் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் பலன்களையும் வர்த்திக்கப்பண்ணுவார்.
ஆனால் நீங்கள் தீயோராயினும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கொடைகளைக் கொடுக்க அறிந்தி ருக்கும்போது, உங்கள் பரம பிதாவானவர் தம்மை வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய் நல்ல இஸ்பிரீத்துவைத் தந்தருளுவார் என்று திருவுளம்பற்றினார்.