Topic : Easter

அப்பொழுது, தேவதூதன் அந்த ஸ்திரீகளைப் பார்த்து: நீங்கள் பயப் படவேண்டாம், சிலுவையிலே அறை யுண்ட சேசுநாதரைத் தேடுகிறீர்க ளென்று அறிவேன்.
அவர் இங்கே இல்லை . ஏனெனில் தாம் திருவுளம்பற்றினபடியே உயித் தெழுந்தார். ஆண்டவர் வைக்கப்பட் டிருந்த இடத்தை வந்து பாருங்கள்.

Matthew 28:5-6

அவர் இங்கேயில்லை, உயிர்த்தெழுந்தார். அவர் இன்னம் கலிலேயாவிலிருந்தகாலத்தில் உங்களுக்கு எவ்விதஞ் சொல்லியிருந்தாரென்று நினைவுகூருங்கள். (மத். 16:21.)
மனுமகன் பாவிகளான மனிதர் கையில் ஒப்புக்கொடுக்கப்படவும் சிலு வையிலே அறையப்படவும் மூன்றாம் நாள் உயிர்க்கவும் வேண்டியதென்று உரைத்தாரல்லோ, என்றார்கள். (மத். 17:21; மாற். 9:30.)

Luke 24:6-7

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் அஞ்சவேண்டாம்; சிலுவையில் அறை யுண்ட நசரேனுவாகிய சேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார். இங்கேயில்லை; அவரை வைத்த இடம் இதுவே.

Mark 16:6

அவருடைய வஸ்திரங்களைக் கழற்றி, ஓர் சிவப்புச் சால்வையை அவர்மேல் போர்த்தினார்கள்.
முள்ளுகளால் ஓர் முடியையும் பின்னி, அவருடைய சிரசின்மேல் வைத்து, ஓர் மூங்கில் தடியையும் அவருடைய வலது கையில் கொடுத் தார்கள். பின்னும், அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: யூதருடைய இராஜாவே வாழ்கவென்று அவரைப் பரிகாசம்பண்ணி , (அரு. 19:2, 3.)

Matthew 27:28-29

சேசுநாதர் அந்தக் காடியை வாங்கிக்கொண்டபின்பு: எல்லாம் முடிந்தது என்று சொல்லித் தலை குனிந்து பிராணனைக் கொடுத்தார்.

John 19:30

அல்லாமலும் அவருக்கு முன்னும் பின்னுமாக நடந்துவந்த திரளான ஜனங் கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! சர்வேசுரனுடைய நாமத்தினால் வரு கிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்! உந்நதங் களில் ஓசன்னாவென்று கூவி ஆர்ப் பரித்துக்கொண்டு போனார்கள். (சங். 117:26; மாற். 11:10; லூக். 19:38.) * 9. ஓசன்னா என்பதற்கு, புகழ்ச்சி, தோத்திரம், வாழ்த்துதல் உண்டாகக்கடவதென்று அர்த்தமாம்.

Matthew 21:9

சேசுநாதரோ உரத்த சத்தமாய்க் கூப்பிட்டு: பிதாவே, என் ஆத்துமத்தை உம்முடைய கரங்களிலே ஒப்புக் கொடுக்கிறேன் என்றார். இவைகளைச் சொல்லி உயிர்விட்டார். (சங். 30:5.)

Luke 23:46

இதோ நாம் ஜெருசலேமுக்கு ஏறிப்போகிறோம். மனுமகன் பிரதான குருக்களிடத்திலும். வேதபாரகரிடத்தி லும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர் கள் அவரை மரணத்தீர்வையிட்டு,
அவரை ஆகடியஞ்செய்யவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும், புறஜாதியாருக்குக் கையளிப்பார்கள். ஆயினும், மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழும்புவார் என்றார்.

Matthew 20:18-19

அன்றியும், இவன் யூதர்களு டைய இராஜாவகிய சேசு என்பதாய் அவருடைய தீர்ப்பின் நியாயத்தை எழுதி, அவருடைய சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.

Matthew 27:37

அப்படியிருக்க, முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த அந்த வேறு சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, தானும் கண்டு விசுவசித்தான்.
ஏனெனில் அவர் மரித்தோரிடத்தினின்று உயிர்த்தெழுந்தருள வேண்டும் என்கிற வேத வாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.

John 20:8-9

சீயோன் மாதே! மிகு களிகூர் வாயாக; எருசலேம் மாதே! அகமகிழ் வாயாக, நீதிமானும் இரட்சகனு மான உன் அரசன் உன்னிடம் இதோ வருகின்றார்; அவர் எளியவராய்ப் பெட்டைக் கழுதை மீதும், கழுதைக் குட்டிமீதும் ஆரோகணராய் (வரு கின்றார்.)

Zechariah 9:9

அப்பா, பிதாவே! உம்மால் எல்லாங் கூடும். இந்தப் பாத்திரத்தை என்னிடத்தினின்று அகற்றியருளும்; ஆயினும் என் மனதின்படியல்ல, உம் முடைய மனதின்படியே ஆகட்டும் என்றார்.

Mark 14:36


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |