கடைசியாய் நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளின் பெரிய மேய்ப்பரான நமது ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாத ரை மரித்தோரினின்று எழுந்து வரச் செய்த சமாதான தேவன், (உரோ. 15:33.)
சேசுக்கிறீஸ்துநாதரைக் கொண்டு தமது சமுகத்திற்குப் பிரியமானதை உங்களிடத்தில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படி செய்ய உங்களைச் சகலவித நற்கிரியைகளுக் கும் இணக்குவாராக. சேசுக்கிறீஸ்துநாதருக்கே அநவரதகாலமும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
Hebrews 13:20-21