Topic : Work

உன் கிரிகைகளை ஆண்டவ ருக்குத் திறந்து காட்டினால் உன் சிந்தனைகள் சீர்படுத்தப்படும்.

Proverbs 16:3

நீங்கள் எதைச் செய்தாலும், மனிதருக்கென்று செய்யாமல், ஆண்டவருக்கென்று மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.
ஆண்டவரிடத்தில் சுதந்திரத்தின் சம்பாவனையைப் பெற்றுக்கொள்வீர்களென்று அறிந்து, கிறீஸ்துநாதருக்கு ஊழியஞ்செய்யுங்கள். *** 23,24. உரோமையர்களுக்குள் அடிமைகள் என்ன வேலை செய்தாலும் அவர்களுக்குச் சுதந் திரமென்று ஒன்றுமில்லை. சர்வேசுரனுடைய ஊழியர்களாகிற கிறீஸ்தவர்கள் எவ்விதத் தாராயிருந்தாலும் ஆண்டவருடைய இராச்சியத்துக்குச் சுதந்திரக்காரராயிருக்கிறார்கள்.

Colossians 3:23-24

உங்கள் காரியமெல்லாம் பரம அன்போடு செய்யப்படக்கடவது.

1 Corinthians 16:14

ஆகையால் நமக்குப் பிரியமான சகோதரரே, ஆண்டவரிடத்தில் நீங்கள் படுகிற பிரயாசம் வீணாய்ப் போகிறதில்லையென்று அறிந்து, நிலை மையுள்ளவர்களாயும், அசையாத வர்களாயும், இடைவிடாமல் ஆண்ட வருக்குரிய கிரியைகளை மிகுதியாய்ச் செய்பவர்களாயும் இருப்பீர்களாக.

1 Corinthians 15:58

வல்லவர்களின் புஜம் ஆட்சி செலுத்தும்; அசமந்தமான கரமோ வெனில் கப்பங்களுக்குச் சேவிக்கும்.

Proverbs 12:24

தேவாசீர்வாதத்தால் மனிதர் திரவிய சம்பன்னராவார்கள்; துன்ப மும் அவர்களைச் சேராது.

Proverbs 10:22

வார்த்தையினாலாவது கிரியையினாலாவது நீங்கள் எதெதைச் செய்தாலும், அவையெல்லாம் ஆண்டவரா கிய சேசுக்கிறீஸ்துவின் நாமத்தினாலே செய்து, அவர் மூலமாய்ப் பிதாவாகிய சர்வேசுரனுக்கு நன்றியறிந்த ஸ்தோத் திரம் பண்ணுங்கள். (1 கொரி. 10:31.)

Colossians 3:17

சடுதியான சம்பாத்தியம் குறைந்துபோகும்; மெதுவாய்க் கையில் சேர்ந்ததோ மிகுந்து வரும்.

Proverbs 13:11


நீர் வெட்கப்படாத ஊழியனாகச் சத்திய வாக்கியத்தை ஒழுங்காய்ப் போதித்து, சர்வேசுரனுடைய அங்கீகரிப்புக்கு ஏற்றவராக உம்மைக் காட்டும்படி அக்கறையாய்ப் பார்த்துக் கொள்ளும்.

2 Timothy 2:15

நீங்கள் செய்த வேலையை இழக்காமல், அதன் பூரண சம்பாவனையைப் பெற்றுக்கொள்ளும்படிக்கு எச்சரிக்கை யாயிருங்கள். (அரு. 8:31.)

2 John 1:8

மேலும் நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் உங்களுக்குப் போதுமான யாவற்றையுங் கொண்டிருந்து, எவ்வித நற்கிரியைகளிலும் சம்பூரணமுள்ளவர்களாகும்படி சர்வேசுரன் உங்களிடத்தில் எவ்வித நன்மைகளையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.

2 Corinthians 9:8

ஆகாயப் பட்சிகளை நோக்கிப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறது மில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சி யங்களில் குவிக்கிறதுமில்லை . ஆகிலும் அவைகளை உங்கள் பரம பிதா போஷித்து வருகிறாரே. அவைகளிலும் நீங்கள் மிகவும் மேன்மையுள்ளவர்கள் அல்லவோ?

Matthew 6:26

என் வாழ்நாட்களில் மகிழ் வதையும் நன்மை செய்வதையும் பார்க்கிலும் நலமானதொன்று மில்லை என்றறிந்தேன்.
ஏனெனில் எவன் புசித்துக் குடித்துத் தன் பிரயாசத்தால் உண் டான நன்மையைப் பார்ப்பது அவனுக்கு தேவன் தந்த வரம்.

Ecclesiastes 3:12-13

ஆயினும் அவைகளில் யாதொன் றிற்கும் நான் பயப்படுகிறதுமில்லை; என்னைப்பார்க்கிலும் என் உயிரைப் பெரிய காரியமாக எண்ணுகிறதுமில்லை. சர்வேசுரனுடைய கிருபையின் சுவிசேஷத்துக்குச் சாட்சியஞ் சொல்லும்படி ஆண்டவராகிய சேசுநாதரிடத்தில் நான் பெற்றுக்கொண்ட பிரசங்கத் தொழிலை யும் நிறைவேற்றி, என் ஜீவிய அயனத் தையும் முடிப்பேனாகில் அதுவே போதும்.

Acts 20:24

நீங்கள் நன்மையை நாடிச்சென்றால், உங்களுக்குத் தீங்குசெய்பவன் யார்?

1 Peter 3:13

சர்வேசுரனுடைய மனுஷன் எவ்வித நற்கிரியையும் செய்வதற்குத் தகுந்த உத்தமனாவதற்குத் தேவ ஏவலால் அருளப்பட்ட வேதாகமங்கள் போதிப்பதற்கும், கண்டிப்பதற்கும், திருத்துவதற்கும், நீதிநெறியில் நடத்துவதற்கும் பிரயோஜனமுள்ளது. (2 இரா. 1:20.)


2 Timothy 3:16-17

தேவன் அவனுடைய இருத யத்திற்கு இன்பத்தைத் தந்தருளின படியால் அவன் தன் உயிர் நாட் களை அதிகமாய் நினையான்.

Ecclesiastes 5:19

அப்படியிருக்க, ஒன்றியாயிருக் கிறதிலும் இருவராகக் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய கூட்டுற வினால் அவர்களுக்கு நன்மையுண் டாகும்.

Ecclesiastes 4:9


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |