Topic : Wisdom

ஏனென்றால், ஞானத்தை தரு கிறவர் ஆண்டவர் தாமே; அவரு டைய வாயினின்றே விவேகமுஞ் சாஸ்திரமும் புறப்படுகின்றது.

Proverbs 2:6

ஆதலால் சகோதரரே, நீங்கள் எவ்வளவு ஜாக்கிரதையாய் நடக்க வேண்டுமென்று பார்த்துக்கொள்ளுங்கள். புத்தியீனரைப்போல் நடவாமல், (கொலோ. 4:5.)
காலம் கெட்டுப்போயிருக்கிறபடியால், போன காலத்தை மீட்டு, ஞானிகளைப்போல் நடங்கள். *** 16. காலத்தை மீட்டுக்கொள்ளுங்கள் என்பதின் கருத்தாவது: இக்காலங்கள் கெட்டவைகளாயிருக்கிறபடியினாலே எச்சரிக்கையோடும், விமரிசையோடும், விழிப் போடுமிருந்து எவ்விதத்திலும் காலத்தைப் புண்ணிய வளர்ச்சிக்குப் பிரயோசன மாக்கிக்கொள்ளுங்கள். அவனவன் இதுவரையில் ஜீவித்த ஜீவியத்தை இப்போது யோசித்துப்பார்த்தால், அதில் அநேககாலம் வீணாய்க் கெட்டுப்போயிற்றென்று காண்பான். அவன் இவ்விதமாய் நஷ்டமாக்கின காலத்துக்குப் பரிகாரஞ்செய்து அந்தக் காலத்தை மீட்கும்படி சுறுசுறுப்போடு புண்ணிய சம்பத்துக்களை அதிகமாய்த் தேடிக்கொள்ளவேண்டுமென்பது கருத்து.

Ephesians 5:15-16

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறையுள்ளவனாயிருந்தால், கடிந்து கொள்ளாமல் யாவருக்கும் ஏராளமாய்க் கொடுக்கிற சர்வேசுரனிடத்தில் கேட்கக்கடவான். அப்போது அவனுக்குக் கொடுக்கப்படும். (மத். 7:7.)

James 1:5

மேலாவிலிருந்து வருகிற ஞானமோ முந்தமுந்தக் கற்புள்ளதும், பின்னும் சமாதானமுள்ளதும், மரியா தையுள்ளதும், இணக்கமுள்ளதும், நல்லவைகளுக்கு உடந்தையுள்ளதும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததுமாயிருக்கின்றது. அது யாதொன் றுக்கும் தீர்ப்பிடுகிறதுமில்லை, பாசாங்கு பண்ணுகிறதுமில்லை.

James 3:17

பொன்னைவிட உத்தமமா யிருக்கிற ஞானத்தைக் கொண்டிரு; வெள்ளியிலும் விலையுயர்ந்ததாய் இருக்கிற விவேகத்தை அடைந்து கொள்.

Proverbs 16:16

சீக்கிரத்தில் கோபித்துக் கொள்ள வேண்டாம்; மூடர்களு டைய இருதயங் கோபத்திற்கு ஆசனம்.

Ecclesiastes 7:10

காலத்தை மீட்டுக்கொண்டு, புறம்பேயிருக்கிறவர்கள்மட்டில் விவே கத்தோடு நடந்துகொள்ளுங்கள். *** 5. எபேசியர் நிருபம் 5-ம் அதிகாரம் 16-ம் வசன வியாக்கியானம் காண்க. புறம்பேயிருக்கிறவர்கள்மட்டில் விவேகம்:- அஞ்ஞானிகளால் உங்கள் ஆத்துமங் களுக்கு எவ்விதத்திலும் கெடுதல் வராதபடிக்கு அவர்கள் நடுவில் எச்சரிக்கையாய் நடந்து, தருணத்தையும் சமயத்தையும் பார்த்து திறமையான முறையில் அவர்களுக்கு நல்ல புத்தி சொல்லுங்கள். வேதத்தைக்குறித்து அவர்கள் கேட்கிற கேள்விகளுக்குத் தக்க மறு மொழி சொல்லவும், அதன்பேரில் அவர்கள் சொல்லுகிற தூஷணங்களை திறமையான முறையில் மறுக்கவும், அவனவனுடைய அந்தஸ்துகளுக்குத்தக்கது நடப்பித்துக் கொள்ளவும் வேணுமென்று அர்த்தமாம்.
அவனவனுக்கு இன்னவிதமாக மறுமொழி சொல்லவேண்டுமென்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு உங்கள் பேச்சு எப்போதும் இனிதாகவும், (விவேகமாகிய) உப்பின் சாரமுள்ளதாகவும் இருக்கவேண்டியது.

Colossians 4:5-6

அகங்காரிகளுக்குள் எப்போ தும் சச்சரவுகளிருக்கின்றன; ஆனால் ஆலோசனçயோடு எல்லாத்தையுஞ் செய்கிறவர்கள் ஞானத்தால் நடத்தப் படுகிறார்கள்.

Proverbs 13:10

அறிவுடையோன் தன் ஆன்மா வைச் சிநேகிக்கிறான்; விவேகத்தைக் காக்கிறவனும் நன்மையைக் கண்டடைவான்.

Proverbs 19:8

ஒருவனும் தன்னைத்தான் ஏய்க்க வேண்டாம். இப்பிரபஞ்சத்தில் உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால், அவன் ஞானியாயிருக்கும்படிக்குப் பைத்தியகாரனாகக் கடவான்.

1 Corinthians 3:18

உங்களில் ஞானியும் கல்விமானும் யார்? அவன் ஞானத்துக்குரிய சாந்தகுணத்தோடு தன் கிரியைகளை நல்லொழுக்கத்தினாலே காண்பிக்கக் கடவான்.

James 3:13

தன் வாயைக் காக்கிறவன் தன் ஆன்மாவையே காப்பாற்றுகிறான். ஆனால் பேச்சில் கவனமில்லாதிருக் கிறவன் தீமையைச் சகிப்பான்.

Proverbs 13:3

விஷ நாகத்தின்பேரிலும் வலு சர்ப்பத்தின்பேரிலும் நடப்பாய்; சிங்கக்குட்டியையும் பறவை அரவத் தையும் நீ மிதித்துப்போடுவாய்.

Psalms 90:12

ஆகையால் என்னுடைய இவ் வார்த்தைகளைக் கேட்டு, இவைகளை அனுசரிக்கிற எவனும் கற்பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டி எழுப்பின விவேகமுள்ள மனுஷனுக்கு ஒப்பாவான். (லூக். 6:48; உரோ . 2:13; இயா . 1:22.)

Matthew 7:24

ஆங்காரம் எங்கே இருந்ததோ அங்கேயே அவமானமும்; தாழ்ச்சி எங்கேயோ அங்கே ஞானமும் (உண்டு).

Proverbs 11:2

அவன் மனிதன் இச்சையின்படி நீ பேசாவிடில், மதிகெட்டவன் விவேகத்தின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளான்.

Proverbs 18:2

நம்முடைய எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் போன்றதன்று; நம்முடைய வழிப்பாடுகள் உங்கள் வழிகளை ஒத்ததன்று என ஆண்டவர் சொல்லுகின்றார்.

Isaiah 55:8

என்னைக் கண்டுபிடித்திருப் பவனெவனோ அவன் சீவியத்தைக் கண்டுபிடிப்பான்; ஆண்டவரிடத்தில் இரட்சிப்பையும் பெற்றுக்கொள் வான்.

Proverbs 8:35

பொறுமையாயிருக்கிறவன் மிகு விவேகத்தைக் காட்டுகிறான்; பொறாமையாயிருக்கிறவனோ வெனில் தன் மதியீனத்தை எடுத்துக் காட்டுகிறான்.

Proverbs 14:29

தேவ பயமே ஞான போதினி; தாழ்மை மகிமைக்கு முன்செல் கின்றது.

Proverbs 15:33

இருதயத்தில் ஞானமுள்ளவன் கற்பனைகளைக் கைக்கொள்ளு கிறான்; மதிகெட்டவனோ உதடுகளால் அடிபடுகிறான்.

Proverbs 10:8

மதியீனனுங்கூட மெளனமா யிருப்பானாகில் ஞானியாகவும், தன் உதடுகளை மூடுவானாகில் அறிவுடை யோனாகவும் மதிக்கப்படுவான்.

Proverbs 17:28

எங்கள் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானத்தையும், வல்லமை யையுங் கொடுத்து, நாங்கள் உம் மிடத்திலே வேண்டிக்கேட்டதை இப்போது எனக்கு அறிவித்து, இராசா வின் காரியத்தை எங்களுக்குத் தெரி வித்தபடியினாலே உம்மைத் துதித் துப் புகழுகிறேன் என்றார்.

Daniel 2:23

இந்தச் செய்பாகமானது ஆண்டவருடைய ஞானயுக்தியை விளங்கச் செய்யவும், அவர் நீதித் தன்மையை மகிமைப்படுத்தவும் சேனைகளின் தேவனான ஆண்டவரி டமிருந்து வந்ததாகும்.

Isaiah 28:29

கடவுள் பூமியின் எல்லைகளைச் சிருஷ்டித்த நித்தியரான தேவன் எனவும், அவர் இராச்சிய பாரத்தில் களைக்கிறதுமில்லை, உழைக்கிறது மில்லை; அவருடைய ஞானமோ புத்திக்கெட்டதாய் இருக்கின்றதென வும், நீங்கள் அறியீர்களோ? கேள்வி யுற்றதுமில்லையோ?

Isaiah 40:28


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |