Topic : Transformation

நாங்களெல்லோரும் ஆண்டவருடைய பிரதாப மகிமையைத் திறந்த முகமாய்த் தரிசித்து ஆண்டவ ருடைய இஸ்பிரீத்துவின் செயலால் ஒளிக்குமேல் ஒளிபெற்று, அந்தச் சாயலாக மறுரூபமாகிறோம். *** 18. 12-ம் வசனமுதல் கடைசிமட்டுமுள்ள வசனங்களின் அர்த்தமாவது: புதிய ஏற்பாட் டின் ஊழியருக்குண்டாயிருக்கிற நிகரற்ற மகிமையை நாங்கள் உத்தேசித்து மோயீசன் இஸ்ராயேல் பிரஜைகளோடு பேசும்போது தன் முகத்தை மூடினதுபோல் நாங்கள் மூடாமலும் கூச்சப்படாமலும் சுவிசேஷத்தை மிகுந்த தைரியத்தோடே பிரசங்கிக்கிறோம். மோயீசன் முகத்தின்மேல் போடப்பட்ட முக்காடு இஸ்ராயேல் பிரஜைகளின் இருதயக் கடினத்துக்கும் குருட்டாட்டத்துக்கும் அடையாளமாயிருந்தபடியால், அவர்கள் மோயீசன் ஆகமங்களை வாசிக்கும்போதெல்லாம் அந்த முக்காடு அவர்கள் இருதயங்களின்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிறாப்போலே மோயீசன் ஆகமங்களில் கிறீஸ்துநாதரைக்குறித்துச் சொல்லியிருக்கிற சாட்சியை அவர்கள் கண்டுபிடியாமல், அவரை இந்நாள்வரைக்கும் விசுவசியாதிருக்கிறார்கள். அவரை அவர்கள் விசுவசிக்கும்போது அந்த முக்காடு எடுபடும். அதுவும் சேசுக்கிறீஸ்துநாதரால்தான் ஆகவேண்டும். எங்கள் இருதயமோ அப்படிப்பட்ட முக்காட்டினால் மூடப்படாமல், இஸ்பிரீத்துசாந்துவின் வரப்பிரசாதமாகிய ஞான வெளிச்சத்தைக்கொண்டு ஞானப்பிரகாசத்தை நாளுக்குநாள் அதிகமதிகமாய் அடைந்து அந்தப் பிரகாசத்தினால் ஆண்டவருடைய மகிமையைத் தரிசிக்கிறாப்போல் இவ்வுலகத் திலே தரிசித்து மறுவுலகத்திலே அதற்கு ஒப்பானவர்களாவோம் என்று அர்த்தமாம்.

2 Corinthians 3:18

நீங்கள் இவ்வுலகத்துக்கு ஏற்றபடி நடவாமல், சர்வேசுரனுடைய சித்தத் துக்கு இன்னது நலமாகவும், பிரிய மாகவும், உத்தமமாகவும் இருக்கிற தென்று அறிந்துகொள்ளும்படி உங்கள் மனதைப் புதிப்பித்து, உங்களைச் சீர்திருத்திக்கொள்ளுங்கள். (எபே. 5:17; 1 தெச. 4:3.)

Romans 12:2

கர்த்தர் உங்கள் இருதயங்களைத் தேவசிநேகத்தாலும், கிறீஸ்துநாதருடைய பொறுமையிலும் நடத்துவாராக.

2 Thessalonians 3:5

சகோதரரே, உங்களுக்குள்ளே பிரிவினைகளில்லாமல், நீங்களனைவரும் ஒரே காரியத்தைப் பேசவும், ஒரே மன மும் ஒரே அபிப்பிராயமுமுள்ள உத்தம ராயிருக்கவும் வேண்டுமென்று நம்மு டைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து வின் நாமத்தினாலே நான் உங்களை மன்றாடுகிறேன். (பிலிப். 2:2; 3:16.)

1 Corinthians 1:10

இஸ்பிரீத்துவின் கனிகள் ஏதென் றால்: பரம அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயாளம், நன்மைத்தனம், சகிப்பு,
சாந்தம், விசுவாசம், அடக்க வொடுக்கம், இச்சையடக்கம், நிறைகற்பு இவைகளாம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணமில்லை.

Galatians 5:22-23

ஆனால் நான் அவனுக்குக் கொ டுக்கும் ஜலம் அவனிடத்தில் நித்திய ஜீவியத்துக்குப் பாய்கிற நீருற்றாகும் என்றார்.

John 4:14

ஆகையால் உங்களுடைய இலெளகீக அவயவங்களைச் சாகடியுங்கள். அவையாவன: விபசாரம், அசுத்தம், காமம், துர் இச்சை, விக்கிரக ஆராதனையாகிய பொருளாசை. *** 5. விக்கிரகங்களுக்கு அடிமைத்தனமாகிற பொருளாசை என்பதற்கு எபேசியர் 5-ம் அதிகாரம் 5-ம் வசனம் காண்க.

Colossians 3:5

உங்கள் வஸ்திரங்களை (மாத்திரம்) அல்ல; உங்கள் இருதயங் களையும் (மனஸ்தாபத்தால்) கிழித்து, உங்கள் தேவனாகிய ஆண்டவரிடந் திரும்புங்கள்; ஏனெனில், அவர் நல்ல வர், இரக்கமுள்ளவர், பொறுமை யுள்ளவர், மிகுந்த தயையுடையவர், தீமைமீது பச்சாத்தாபங் கொள்பவர் (சங். 85:5).

Joel 2:13

ஆகையால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்படி மனஸ்தாபப்பட்டு மனந்திரும்புங்கள்.

Acts 3:19

இல்லாவிட்டால், நாம் இன்னும் பலவீனராயிருக்கும்போது, குறித்த காலத்திலே அக்கிரமிகளுக்காகக் கிறீஸ்து நாதர் மரிப்பானேன்? (எபி. 9:14; 1 இரா. 3:18.)

Romans 5:6

இராயப்பர் அவர்களை நோக்கி : நீங்கள் தவஞ்செய்து, உங்கள் பாவங்களின் மன்னிப்புக்காக உங்களில் ஒவ்வொருவனும் சேசுக்கிறீஸ்துநாதரு டைய நாமத்தினாலே ஞானஸ்நானம் பெறக்கடவான்; அப்பொழுது இஸ்பி ரீத்துசாந்துவின் வரத்தைப் பெற்றுக் கொள்வீர்கள்.

Acts 2:38

அது முதல் சேசுநாதர், தவஞ் செய்யுங்கள், ஏனெனில் மோட்ச இராச்சியம் சமீபித்திருக்கிறதென்று பிரசங்கிக்கத் தொடங்கினார். (மாற். 1:15.)

Matthew 4:17


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |