Topic : Thoughts

உன் கிரிகைகளை ஆண்டவ ருக்குத் திறந்து காட்டினால் உன் சிந்தனைகள் சீர்படுத்தப்படும்.

Proverbs 16:3

சகோதரரே, உங்களுக்குள்ளே பிரிவினைகளில்லாமல், நீங்களனைவரும் ஒரே காரியத்தைப் பேசவும், ஒரே மன மும் ஒரே அபிப்பிராயமுமுள்ள உத்தம ராயிருக்கவும் வேண்டுமென்று நம்மு டைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து வின் நாமத்தினாலே நான் உங்களை மன்றாடுகிறேன். (பிலிப். 2:2; 3:16.)

1 Corinthians 1:10

ஏனெனில் தேவ வாக்கியமானது உயிருள்ளதும், சக்தியுள்ளதும், இருபுறமும் கருக்குள்ள எந்த வாளிலும் அதிகக் கூரானதுமாயிருந்து, ஞானாத்துமாவையும், ஜீவாத்துமாவையும், மூட்டுகளையும், மூளையையுங்கூட ஊடுருவிப் பிரிக்கத்தக்கதுமாய், இருதயத்தின் நினைவுகளையும் கருத்துகளையும் வகையறுக்கத்தக்கதுமாய் இருக்கின்றது.

Hebrews 4:12

உன் இருதயத்தை எவ்வித எச்சரிக்கையுடனும் பாதுகாத்துக் கொள்! ஏனெனில், சீவியமே அதி னின்று புறப்படுகின்றது.

Proverbs 4:23

மனிதனுடைய மார்க்கமெல் லாம் அவனுக்கு நேரானதாய்த் தோன்றுகின்றது;ஆனால் ஆண்டவர் இருதயங்களை நிறுத்துப் பார்க் கிறார்.

Proverbs 21:2


மனிதனுடைய இருதயத்திலி ருந்து புறப்படுகிறவைகளே மனிதனை அசுத்தப்படுத்துகின்றன.
ஏனெனில் மனிதனுடைய இரு தயத்துக்குள்ளிருந்து துர்ச்சிந்தனை களும், விபசாரங்களும், வேசித்தனங் களும், கொலைபாதகங்களும்,
களவுகளும், லோபித்தனங்க ளும், துஷ்டத்தனங்களும், கபடங்களும், காமவிகாரங்களும், வன்கண்ணும், தேவ தூஷணமும், ஆங்காரமும், மதிகேடும் புறப்படுகின்ற ன. (ஆதி. 6:5.)
இந்தத் தின்மைகளெல்லாம் உள்ளத்தினின்று புறப்பட்டு, மனி தனை அசுத்தப்படுத்துகின்றன என்றார்.

Mark 7:20-23

நீங்கள் இவ்வுலகத்துக்கு ஏற்றபடி நடவாமல், சர்வேசுரனுடைய சித்தத் துக்கு இன்னது நலமாகவும், பிரிய மாகவும், உத்தமமாகவும் இருக்கிற தென்று அறிந்துகொள்ளும்படி உங்கள் மனதைப் புதிப்பித்து, உங்களைச் சீர்திருத்திக்கொள்ளுங்கள். (எபே. 5:17; 1 தெச. 4:3.)

Romans 12:2

அல்லாமலும் நீங்கள் ஜெபம் செய்யும்போது அஞ்ஞானிகளைப் போல வளர்த்துச் சொல்லாதேயுங்கள். ஏனென் றால் தங்களுடைய சொல் மிகுதியினால் தங்கள் மன்றாட்டுக் கேட்டருளப்படு மென்று நினைக்கிறார்கள்.

Matthew 6:7

நம்முடைய எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் போன்றதன்று; நம்முடைய வழிப்பாடுகள் உங்கள் வழிகளை ஒத்ததன்று என ஆண்டவர் சொல்லுகின்றார்.

Isaiah 55:8

கடைசியாய்ச் சகோதரரே, எதெது உண்மையோ, எதெது யோக்கியமோ, எதெது நீதியோ, எதெது பரிசுத்தமோ, எதெது அன்புக்குரியதோ, எதெது நற்கீர்த்திக்குரியதோ, எதெது புண்ணிய மோ, எதெது நல்லொழுக்கப் புகழ்ச்சி யோ, அவைகளைச் சிந்தித்துக்கொண் டிருங்கள்.

Philippians 4:8

ஆதலால் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: உங்கள் உயிர் பிழைக்க எதை உண்போமென்றும், உங்கள் உடலை மூட எதை உடுத்திக் கொள்வோமென்றும் ஏக்கமாயிராதேயுங்கள். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் மேன்மையானதல்லவோ ? (லூக். 12:22-31; பிலிப். 4:6; 1 தீமோ . 6:7; 1 இரா . 5:7: சங். 54:23, 24.)

Matthew 6:25

ஒருவனும் தன்னைத்தான் ஏய்க்க வேண்டாம். இப்பிரபஞ்சத்தில் உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால், அவன் ஞானியாயிருக்கும்படிக்குப் பைத்தியகாரனாகக் கடவான்.

1 Corinthians 3:18

நமக்குள் முயற்சியாயிருக்கிற தமது வல்லபத்தைக்கொண்டு, நாம் கேட்பதற்கும், எண்ணுவதற்கும் மிகவும் அதிகமாய்ச் சகலத்தையும் செய்ய வல்லமையுள்ளவராகிய அவருக்குத்,
திருச்சபையில் கிறீஸ்துநாதர் மூலமாய்த் தலைமுறை தலைமுறைகளாகச் சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது. ஆமென்.

Ephesians 3:20-21

கன்னிப் பெண்களின் மேல் சிந்தனை முதலாய் எனக்கு வராத படிக்கு நான் என் கண்களோடு உடன்படிக்கை பண்ணியிருந்தேன்.மீ

Job 31:1

அக்கிரமியானவன் தன் பாதை யையும், அநீதன் தன் துர் எண்ணங் களையும் விட்டு, ஆண்டவரிடந் திரும்பி வரட்டும்; அவர் அவனுக்குத் தயை பாராட்டுவார்; நம்தாண்டவ ரிடம் வரட்டும்; ஏனெனில், அவ னுக்கு மன்னிக்க அவர் மிகு தயை யுளராயிருக்கின்றார்.

Isaiah 55:7

எனக்கு அளிக்கப்பட்ட வரத்தினாலே நான் உங்கள் எல்லாருக்குஞ் சொல்லுகிறதாவது: வேண்டிய ஞானத் துக்கு மிஞ்சின ஞானமுள்ளவர்களாக வேண்டாம். அளவு மட்டோடும், அவனவனுக்குக் கடவுள் பகிர்ந்த விசு வாசத்தின் அளவுக்கேற்றாற்போலும், உங்கள் ஞானமிருக்கட்டும். ( 1கொரி. 12:11; எபே. 4:7.)

Romans 12:3

மனிதனுக்குச் சரியெனக் காணப்படுகிற வழியுண்டு; அதின் முடிவுகளோ மரணத்துக்குக் கூட்டிச் செல்லுகின்றன.

Proverbs 14:12

உன் பாதங்களுக்குப் பாதை யைச் செவ்வையாக்கு; உன் வழி களெல்லாம் ஸ்திரப்படும்.

Proverbs 4:26

அத்தறுவாயிலே திரளான ஜனங்கள் ஒருவரொருவரை மிதிக்கத்தக்க விதமாய் வந்து சூழ்ந்திருக்கையில், அவர் தமது சீஷர்களை நோக்கி வசனிக்கத் தொடங்கினதாவது: பரிசேயருடைய கள்ள ஞானமாகிய புளிக்காரத்தின் மட்டில் நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். * 1. மத். 16-ம் அதி. 11-ம் வசன வியாக்கியானம் காண்க.
ஆயினும், வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை அறியப்படாத இரகசியமுமில்லை. (மத். 10:26.)
ஏனென்றால் நீங்கள் இருளிலே சொன்னவைகள் வெளிச்சத்திலே சொல் லப்படும்; நீங்கள் அறைகளிலே காதுக் குள் பேசினது வீடுகளின் மேலே பிரசங் கிக்கப்படும்.
என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதற்குமேல் ஒன் றுஞ் செய்யத் திராணியற்றவர்களுக்கு நீங்கள் அஞ்சவேண்டாம்.
ஆனால் நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென்று உங்களுக்குக் காண்பிப்பேன்; உயிரைப் பறித்த பின்பு நரகத் தில் தள்ள வல்லமையுள்ளவருக்கே அஞ்சுங்கள்; ஆம், அவருக்கே அஞ்சுங்க ளென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இரண்டு காசுக்கு ஐந்து அடைக்க லங்குருவிகள் விற்கிறதல்லவோ? ஆயி னும் அவைகளில் ஒன்றானாலும் சர்வேசுரனுடைய சமுகத்தில் மறக்கப்படுவதில்லை.
உங்கள் தலை உரோமங்களெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன; ஆகை யால் நீங்கள் அஞ்சவேண்டாம்; அநேகம் அடைக்கலங்குருவிகளைவிட நீங்கள் அதிகவிலையுள்ளவர்களாயிருக்கி றீர்கள். (லூக். 21:18)
மீளவும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: மனிதர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவ னோ, அவனை மனுமகனும் சர்வேசுர னுடைய தூதர் முன்பாக அறிக்கை பண்ணுவார். (மாற். 8:38; 2 தீமோ. 2:12.)
மனிதர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் சர்வேசுரனுடைய தூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான்.
மனுமகன் பேரில் குறைபேசின எவனுக்கும் மன்னிக்கப்படும். இஸ்பிரீத்துசாந்துவானவருக்கு விரோதமாய்த் தூஷணஞ் சொன்னவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை. (மத். 12:31; மாற். 3:28-29; எபி. 6:4-6.) * 10. மத். 12-ம் அதி. 32-ம் வசன வியாக்கியானம் காண்க. இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனுடைய ஏவுதலுக்குக் கொஞ்சமாகிலும் இடங்கொடாத பாவி மனந்திரும்பி இரட்சண்யமடைவது கூடாத காரியமென்று சொல்லவேண்டியிருக்கிறது.
இதன்றியே, ஜெப ஆலயங்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய் விடும்போது, எவ்விதமாய் அல்லது என்ன மாறுத்தரஞ் சொல்லுவோம். என்றும், எதைப்பேசு வோம் என்றும் கவலைப்படாதிருங்கள். (மாற். 13:11.)
ஏனெனில் நீங்கள் பேசவேண்டியதை இஸ்பிரீத்துசாந்துவானவர் அந் நேரத்தில் உங்களுக்குப் படிப்பிப்பார் என்றார். (மத். 10:19; லூக். 21:14.)
அப்பொழுது ஜனக்கூட்டத்திலிருந்து ஓர் மனிதன் அவரை நோக்கி: குருவே, என் சகோதரன் என்னோடு காணியாட்சியைப் பங்கிட்டுக்கொள்ளும்படி அவனுக்குச் சொல்லும் என்றான்.
அவரோ, அவனை நோக்கி மனுஷனே, உங்கள்மேல் என்னை நடுவனாகவும், பங்கிடுகிறவனாகவும் நியமித்தவன் யார் என்றார்.
பின்பு அவர் அவர்களைப் பார்த்து திருவுளம்பற்றினதாவது: எவ்வித பொருளாசையின் மட்டிலும் எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்குள்ள ஆஸ்தியின் பெருக்கத்தில் அவனுடைய உயிர் நிற்கிறதில்லை என்றார்.
மீளவும் அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார், அதாவது: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய காணிபூமி ஏராளமான பலனைத் தந்தது.
அதனாலே அவன் தனக்குள்ளே யோசித்துக்கொண்டு: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேகரித்துவைக்க எனக்கு இடமில்லையே.
ஆகையால் நான் இப்படிச் செய்வேன்: என் களஞ்சியங்களை இடித்து அதிகப் பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த பலன்களெல்லாவற்றையும், என் ஆஸ்தியையும் அதிலே சேர்த்து வைத்து,
என் ஆத்துமாவை நோக்கி: என் ஆத்துமாவே, அநேகம் வருஷங்களுக்கு வேண்டிய வெகு சம்பத்துக்கள் உனக்குச் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் நீ இளைப்பாறி, உண்டு, குடித்து விருந்தாடு என்பேன் என்றான். (சர்வப். 11:19.)
அப்பொழுது சர்வேசுரன் அவ னை நோக்கி: மூடனே, இந்த இராத் திரியில்தானே உன் உயிரை உன்னிடத் தினின்று வாங்குவார்களே; அப்போது நீ தேடினவைகள் யாருடையதாகும் என்றார்.
சர்வேசுரனிடத்தில் திரவியவானாயிராமல், தனக்குப் பொக்கிஷத்தைச் சேர்த்துவைக்கிறவன் இவ்விதமாய் இருக்கிறான் என்றார். (1 தீமோ. 6:17; இயா. 5:1.)
பிற்பாடு அவர் தம்முடைய சீஷர்களைப் பார்த்து: இப்படியிருக்க, எதை உண்போமென்று உங்கள் ஜீவனுக்காகவும், எதை உடுத்திக் கொள்ளுவோமென்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்களென்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத். 6:25.)
உணவைவிட ஜீவனும், உடையைவிட உடலும் மேன்மையுள்ளதாயிருக்கிறது. (1 இரா. 5:7; சங். 54:23, 24.)
காகங்களைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, அவைக ளுக்கு உக்கிராணமுமில்லை, களஞ்சியமுமில்லை; என்றாலும், சர்வேசுரன் அவைகளைப் போஷிக்கிறார். அவைகளிலும் நீங்கள் எவ்வளவோ அதிக மேன்மையுள்ளவர்களா யிருக்கிறீர்கள்.
பின்னும் யோசிப்பதினாலே தன் வளர்த்திக்குமேல் ஒரு முழங்கூட்ட உங்களுக்குள் எவனாலே கூடும்?
ஆகையால் அற்ப சொற்பக்காரியம் முதலாய் உங்களாலே கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுவானேன்?
லீலிப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப் பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலோமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியதில்லையென்று உங்ககளுக்குச் சொல்லுகிறேன்.
ஆதலால் இன்றைக்குக் காட்டிலிருந்து, நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லைச் சர்வேசுரன் இவ்விதமாய் உடுத்துவித்தால், அற்பவிசுவாசிகளே, உங்களை எவ்வளவோ அதிகமாய் உடுத்துவிப்பார்?
ஆனபடியினாலே எதை உண் போம், எதை குடிப்போமென்று விசாரப்பட்டு, ஏக்கமாய் வானத்தைப் பாராதேயுங்கள்.
ஏனெனில் இவையெல்லாம் உலகத்தார் (விசாரப்பட்டுத்) தேடுகிறார்கள்; உங்கள் பிதாவோ, இவைகள் உங்களுக்கு வேண்டியதென்று அறிந்திருக்கிறார்.
ஆகையால் சர்வேசுரனுடைய இராச்சியத்தையும், அவருடைய நீதியையும் முந்த முந்தத் தேடுங்கள்; அப்பொழுது இவையெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
சிறு மந்தையே, நீங்கள் பயப்படாதேயுங்கள்; ஏனெனில் உங்களுக்குத் தம்முடைய இராச்சியத்தைத் தரும்படி உங்கள் பிதாவுக்குச் சித்தமாயிற்று.
உங்களுக்கு உள்ளவைகளை விற்று, பிச்சைகொடுங்கள்; பழமைப் படாத பணப்பைகளையும், குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள்; அங்கே திருடனும் அணுகான், பூச்சியும் அரிக்காது. (மத். 6:20; 19:21.)
அது ஏனென்றால், உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ, அங்கேயே உங்கள் இருதயமும் இருக்கும்.
உங்கள் இடைகள் வரிந்து கட்டப்படவும், எரிகிற தீபங்கள் உங்கள் கைகளில் இருக்கவுங்கடவது. (மத். 25:1.)
தங்கள் எஜமான் வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக் கும்படியாக அவர் கலியாணத்தினின்று எப்பொழுது திரும்புவாரென்று காத் திருக்கிற மனிதருக்கு நீங்கள் ஒப்பா யிருக்கக்கடவீர்கள். (மாற். 13:34.)
எஜமான் வரும்போது, விழித் திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியரே பாக்கியவான்கள்; அவர் தமது இடையை வரிந்து கட்டி, அவர்களைப் பந்தியமரச்செய்து, அவர்களில் ஒவ்வொருவரிடத்திலும் போய் அவர்களுக்குப் பரிமாறுவாரென்று உண்மை யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
அவர் இரண்டாஞ் சாமத்தில் வந்தாலும், மூன்றாஞ் சாமத்தில் வந்தாலும், அவ்வண்ணமே காண்பாராகில், அவ்வூழியர் பாக்கியவான்கள்.
அல்லாமலும், திருடன் இன்ன வேளையில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், சந்தேகமற விழித் திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட் டானென்று அறிந்து கொள்ளுங்கள். (மத். 24:43.)
அப்படியே, நீங்களும் ஆயத்தமாயிருங்கள். ஏனென்றால் நீங்கள் நினை யாத வேளையில் மனுமகன் வருவார் என்று திருவுளம்பற்றினார்.(காட்சி.16:15.)
அப்பொழுது இராயப்பர் அவரைப்பார்த்து: சுவாமி, இந்த உவமையை எங்களுக்கு மாத்திரஞ் சொல்லுகிறீரோ, அல்லது எல்லாருக்குஞ் சொல்லுகிறீரோ என்று கேட்க,
ஆண்டவர் திருவுளம்பற்றினதாவது: தன் வீட்டாருக்குத் தக்க சமயத்திலே கோதுமையை அளந்து கொடுக்கும்பொருட்டு எஜமானால் அவர்கள்மேல் ஏற்படுத்தப்பட்ட பிரமாணிக்கமும் விவேகமுமுள்ள காரியஸ்தன் யாரென்று நினைக்கிறாய்? (மத். 24:45; 1 கொரி. 4:2.)
எஜமான் வரும்போது, அப்படியே செய்துகொண்டிருக்கிறதாகக் காணப்படுகிற அந்த ஊழியனே பாக்கியவான்.
தனக்குண்டாகிய எல்லாவற்றின்பேரிலும் அவனை அதிகாரியாக ஏற்படுத்துவானென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஆனால் அந்த ஊழியன்: என் எஜமான் வரத் தாமதித்திருக்கிறா ரென்று தன் இருதயத்தில் சொல்லிக் கொண்டு, மற்ற ஊழியரையும் ஊழியக்காரிகளையும் அடிக்கவும், உண்டு குடித்து, வெறியெடுக்கவும் துவக்கினால்,
அந்த ஊழியன் நினையாத நாளிலும் அறியாத நேரத்திலும் எஜமான் வந்து, அவனைப் புறம்பாக்கி, பிரமாணிக்கமற்றவர்களோடு அவனுக்கு வீதம் விதிப்பான்.
மேலும் தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்து, ஆயத்தம் பண்ணாமலும் அவன் சித்தப்படியே செய்யாமலுமிருந்த ஊழியன் அநேகம் அடிபடுவான்.
அறியாமல் தண்டனைக்குரியவைகளைச் செய்தவனோ, கொஞ்சம் அடிபடுவான். அதெப்படியென்றால் எவனுக்கு அதிகங் கொடுக்கப்பட்டதோ, அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவித்தார்களோ, அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்.
நான் பூமியிலே அக்கினியைப் போட வந்தேன். அது பற்றியெரிய வேண்டும் என்பதல்லாதே, வேறென்னத்தை விரும்புகிறேன்?
அன்றியும் நான் பெறவேண்டிய ஸ்நானம் ஒன்றுண்டு; அது நிறைவேறுமளவும் எவ்வளவோ நெருக்கிடைப்படுகிறேன். (மாற். 10:38.) * 49-50. இந்த இரண்டு வசனங்களுக்கும் அர்த்தமாவது: சேசுநாதர் பூலோகத்திலே பற்றுவிக்கக் கொண்டுவந்த அக்கினி: முதலாவது, இருதயங்களைப் பற்றியெரியப்பண்ணுகிற தேவசிநேக அக்கினி. 2-வது, தேவ ஸ்தோத்திரத்தைப் பரம்பச் செய்யவும் ஆத்துமங்களை இரட்சிக்கவும் வேகமான பற்றுதல் என்கிற அக்கினி. 3-வது, புண்ணியவான்களைப் பரிசுத்தமாக்குகிற வேத கலகங்களின் அக்கினியாம். அவர் பெறவேண்டியிருந்த ஸ்நானம் மனுஷருடைய இரட்சணியத்துக்காக அவர் சிந்த வேண்டியிருந்த தமது இரத்த ஸ்நானந்தான்.
நான் பூமியிலே சமாதானத்தைக் கொண்டுவந்தேன் என்று நினைக்கிறீர் களோ? சமாதானத்தையல்ல; பிரிவினையையே கொண்டு வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத். 10:34.)
எவ்வாறெனில், இது முதல் ஐந்து பேர் உள்ள ஒரு வீட்டில் மூவர் இருவருக்கும், இருவர் மூவருக்கும் விரோதமாய்ப் பிரிந்து நிற்பார்கள்.
தகப்பன் மகனுக்கும், மகன் தன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியாள் தன் மருமகளுக்கும், மருமகள் தன் மாமியாளுக்கும் விரோதமாய்ப் பிரிந்து போவார்கள் என்றார். * 51-53. மத். 10-ம் அதி. 34-36-ம் வசன வியாக்கியானம் காண்க.
மறுபடியும் அவர் ஜனக்கூட்டத்தைப் பார்த்து: மேற்குத் திசையிலிருந்து ஓர் மேகம் எழும்புகிறதைக் கண்டவுடனே மழை வரும் என்கிறீர்கள்; அப்படியே ஆகின்றது. (மத். 16:2.)
தென்றல் வீசுகிறதைக் காணும் போது, உஷ்ணமுண்டாகும் என்கிறீர்கள்; அப்படியும் ஆகிறது.
கள்ள ஞானிகளே, வானம் பூமி இவைகளின் தோற்றத்தை நிதானிக்க வகை அறிந்திருக்கிறீர்களே; இக்காலத்தை நீங்கள் நிதானியாமல் போவதெப்படி? * 54-56. மத். 12-ம் அதி. 40-ம் வசன வியாக்கியானம் காண்க.
நியாயமாயிருக்கிறதை நீங்களே தீர்மானிக்காமல் இருப்பதெப்படி?
நீ உன் எதிராளியோடு அதிகாரியினிடத்திற்குப் போகும்போது, வழியில்தானே அவனிடத்தினின்று விடுதலையாகும்படி பிரயாசப்படு. இல்லாவிட்டால், ஒருவேளை அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாக இழுத்துக்கொண்டு போவான்; நியாயாதிபதி உன்னைச் சேவகனுக்குக் கையளிப்பான்; சேவகன் உன்னைச் சிறைச் சாலையில் போடுவான். (மத். 5:25.)
நீ கடைசிச் சல்லி உத்தரிக்குமளவும் அவ்விடம் விட்டு வெளிப்படமாட்டாயென்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். * 59. மத். 5-ம் அதி. 25-ம் வசன வியாக்கியானம் காண்க.

Luke 12:22b-23

ஆதலால், உங்கள் மனதின் இடையை வரிந்துகொண்டு, உள்ளடக்க முள்ளவர்களாய், சேசுக்கிறீஸ்துநாதர் வெளிப்படும் காலத்திற்காக உங்களுக்கு அளிக்கப்படுகிற வரப்பிரசாதத்தின் பேரில் பூரண நம்பிக்கையாயிருங்கள்.

1 Peter 1:13


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |