Topic : Blessing

ஆண்டவரை நம்புகிறவனோ ஆசீர்வதிக்கப்பட்டவன்; ஆண்டவர் அவனுடைய நம்பிக்கை.
அவன் நீர் அருகில் நடப்பட்ட விருட்சத்திற்குச் சமம்; அது நயப்பில் வேரூன்றி இருக்கின்றமையால் உஷ்ண காலத்தில் அதற்குப் பயமில்லை; அதன் இலைகள் பசுமையோடிருக் கும்; வறட்சிகாலத்தில் அதற்குக் கவலையில்லை; அது ஒருக்காலுங் கனிகொடாதிருக்காது (சங். 1:3).

Jeremiah 17:7-8

அவர் உம்மிடத்தில் சீவியத் தைக் கேட்டார்; நீர் என்றென்றைக் கும் சதாகாலமும் அவருக்குத் தீர்க் காயுசை அளித்தீர்.

Psalms 20:4

ஆண்டவர் உன்னை ஆசீர் வதித்துக் காப்பாற்றுவாராக! (சர்வப். 36:19).
கர்த்தர் உனக்குத் தம்முடைய திருமுகத்தைக் காண்பித்து உன்மேல் கிருபையாயிருப்பாராக.
கர்த்தர் உன் மேலே தம்மு டைய திருமுகத்தைத் திருப்பி உனக் குச் சமாதானம் கட்டளையிடுவா ராக என்பதாம்.

Numbers 6:24-26

உன் கிரிகைகளை ஆண்டவ ருக்குத் திறந்து காட்டினால் உன் சிந்தனைகள் சீர்படுத்தப்படும்.

Proverbs 16:3

ஏனெனில் நாம் உங்கள் விஷய மாய் எண்ணும் எண்ணங்கள் நமக் குத் தெரியும்; அவைகள் உங்களுக் குப் பொறுமையையும், முடிவையுந் தரும்பொருட்டு நாம் கொண்ட சமாதான எண்ணங்களே தவிர துன்ப எண்ணங்களல்ல.

Jeremiah 29:11

ஆதலால் என் சர்வேசுரன் தம்முடைய ஐசுவரியத்தின்படியே உங்கள் விருப்பமெல்லாவற்றையும் கிறீஸ்து சேசுநாதருக்குள் மகிமையாக நிறைவேற்றுவாராக.

Philippians 4:19

உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் சேவித்து வந்தால் நீங்கள் புசிக்கும் அப்பத்துக்கும் குடிக்கும் தண்ணீருக்கும் நாம் ஆசீர்வாதங் கொடுத்து வியாதியை உங்களிடத்திலிருந்து விலகப்பண்ணுவோம்.

Exodus 23:25

நீ பிழைத்துப் பெருகும்படிக் கும் நீ சுதந்தரிக்கப் போகிற தேசத் தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும் நீ அவரிடத் தில் அன்புகூரவும், அவருடைய வழி களில் நடக்கவும் அவருடைய கற்பனைகளையும் கட்டளை களையும், ரீதி ஆச்சாரங்களையும் கைக்கொண்டு அநுசரிக்கவும் கடவாய்.

Deuteronomy 30:16

அவனறியாத கண்ணியில் அவன் மாட்டிக்கொள்ளக்கடவான்; அவன் மறைவாய் வைத்த வலையில் அவனே பிடிக்கப்படக்கடவான்; அவன் (வைத்த) வலையில் அவனே விழக்கடவான்.

Psalms 34:8

பூமியும், அதிலடங்கிய சகல மும், பூமண்டலத்தின் சக்கரமும், அதில் வாழுஞ் சகலருந் தேவனுக்குச் சொந்தம்.
ஏனெனில், அவரே சமுத்திரங் களுக்கு மேலே அதற்கு அஸ்திவாரம் போட்டு நதிகளுக்கு மேலே அதை ஸ்தாபித்திருக்கிறார்.

Psalms 23:1-2


எனக்குச் செவிகொடுக்கிற உங்க ளுக்கு நான் சொல்லுகிறதாவது: உங்கள் சத்துருக்களை நேசியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங் கள்; (மத். 5:44.)
உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்கள்மேல் அபாண் டம் சொல்லுகிறவர்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்;

Luke 6:27-28

வார்த்தையில் கதித்தவன் நன்மையைக் கண்டுபிடிப்பான்; ஆண்டவரில் நம்பிக்கையாயிருக் கிறவனே பாக்கியவானாம்.

Proverbs 16:20

நீங்கள் தின்மைக்குத் தின்மை செய்யாமலும், சாபத்துக்குச் சாபமிடா மலும் இருப்பதுந்தவிர, அதற்குப் பதி லாக நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்த ரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்ட வர்களாகையால், ஆசீர்வதியுங்கள். (பழ. 17:13; உரோ. 12:17; 1 தெச. 5:15.)

1 Peter 3:9

நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய இஷ்டப்பிரசாதம் உங்கள் ஆத்துமத்தோடே கூடஇருப்பதாக. ஆமென்.

Philemon 1:25

இஸ்பிரீத்துவின் கனிகள் ஏதென் றால்: பரம அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயாளம், நன்மைத்தனம், சகிப்பு,
சாந்தம், விசுவாசம், அடக்க வொடுக்கம், இச்சையடக்கம், நிறைகற்பு இவைகளாம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணமில்லை.

Galatians 5:22-23

ஆனால் உன் தேவனாகிய கர்த்தருடைய குரல் சப்தத்திற்கு நீ செவிகொடுத்து நான் இன்று உனக் குக் கற்பிக்கிற அவருடைய கட்டளை களில் யாவையுங் கைக்கொண்டு ஆசரிப்பாயாகில், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதி களைப் பார்க்கிலும் உன்னை மேன் மைப்படுத்துவார்.

Deuteronomy 28:1

பத்தில் பாகங்களெல்லாம் (நமது) களஞ்சியஞ் சேருங்கள்; அது நமது வீட்டில் (நம்மூழியருக்குப்) போஷணையாயிருக்கட்டும்; அதற் குப்பின் யாம் உங்களுக்கு வானக மழைத் தாரைகளைத் திறந்து விடா மல் போகின்றோமா? (எல்லா நன்மைகளிலும்) சம்பூரணம் வரை யாக நமது நல்லாசியை உங்கள்மீது சொரியாதிருக்கின்றோமா என நம் மைப் பரீட்சியுங்கள் என்கிறார் ஆண்டவர்.

Malachi 3:10

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்: ஏனெனில் அவர்கள் தேவ மக்கள் என்னப்படுவார்கள்.

Matthew 5:9

நமதாண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாதருடைய இஷ்டப்பிரசாதம் உங்கள் ஆத்துமத்தோடுகூட இருப்பதாக. ஆமென்.

Philippians 4:23

எஜமான் அவனைப்பார்த்து: சவ்வாஸ், நம்பிக்கையுள்ள நல்ல ஊழி யனே! நீ சொற்பக்காரியங்களில் பிர மாணிக்கனாயிருந்ததினால், அநேக காரியங்களின்மேல் உன்னை அதிகாரி யாக்குவேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி என்றான்.

Matthew 25:21

நல்ல மனிதன் தன் இருதயமா கிய நல்ல பொக்கிஷத்தினின்று நல்லவைகளை எடுத்துக் காட்டுகிறான். கெட்ட மனிதனும் கெட்ட பொக்கிஷத்தினின்று கெட்டவைகளை எடுத்துக் காட்டுகிறான். ஏனெனில் இருதயத்தின் நிறைவாகவேதான் வாய் பேசுகின்றது.

Luke 6:45

ஆண்டவரே, அநியாயம் பேசு கிற உதடுகளுக்கும் கபடுள்ள நாவுக் கும் என்னைத் தப்புவியும்.

Psalms 119:2

துர்மார்க்கரின் ஆலோசனை யின்படி நடவாமலும் பாவிகளு டைய வழியில் நில்லாமலும் துர்ப் (போதனையின்) பிரசங்காசனத்தில் உட்காராமலும்,

Psalms 1:1

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர் கள் பாக்கியவான்கள்: ஏனெனில் அவர்கள் திருப்தியடைவார்கள். (லூக். 6:21.) * 6. நீதி:- நீதியென்றால் புண்ணிய சாங்கோபாங்க நெறியாகும்; வேதாகமத்தில் நீதி என்னும் இச்சொல் இந்த அர்த்தத்திலே பல இடங்களில் வழங்குகிறது.

Matthew 5:6


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |