Topic : Gentleness

உங்கள் அடக்கவொடுக்கம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக; கர்த்தர் அருகில் இருக்கிறார். *** 5. கர்த்தர் அருகில் இருக்கிறார்:- அதாவது உதவிசெய்யக் காத்திருக்கிறார்.

Philippians 4:5

ஆதலால், சர்வேசுரனால் தெரிந் துகொள்ளப்பட்ட நீங்கள் பரிசுத்தரும், பிரியமுள்ளவர்களுமாய்த் தயாளமான உள்ளத்தையும், சாந்தத்தையும், தாழ்ச்சி யையும், அடக்கவொடுக்கத்தையும், பொறுமையையுந் தரித்துக்கொண்டு,

Colossians 3:12

காலத்தை மீட்டுக்கொண்டு, புறம்பேயிருக்கிறவர்கள்மட்டில் விவே கத்தோடு நடந்துகொள்ளுங்கள். *** 5. எபேசியர் நிருபம் 5-ம் அதிகாரம் 16-ம் வசன வியாக்கியானம் காண்க. புறம்பேயிருக்கிறவர்கள்மட்டில் விவேகம்:- அஞ்ஞானிகளால் உங்கள் ஆத்துமங் களுக்கு எவ்விதத்திலும் கெடுதல் வராதபடிக்கு அவர்கள் நடுவில் எச்சரிக்கையாய் நடந்து, தருணத்தையும் சமயத்தையும் பார்த்து திறமையான முறையில் அவர்களுக்கு நல்ல புத்தி சொல்லுங்கள். வேதத்தைக்குறித்து அவர்கள் கேட்கிற கேள்விகளுக்குத் தக்க மறு மொழி சொல்லவும், அதன்பேரில் அவர்கள் சொல்லுகிற தூஷணங்களை திறமையான முறையில் மறுக்கவும், அவனவனுடைய அந்தஸ்துகளுக்குத்தக்கது நடப்பித்துக் கொள்ளவும் வேணுமென்று அர்த்தமாம்.
அவனவனுக்கு இன்னவிதமாக மறுமொழி சொல்லவேண்டுமென்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு உங்கள் பேச்சு எப்போதும் இனிதாகவும், (விவேகமாகிய) உப்பின் சாரமுள்ளதாகவும் இருக்கவேண்டியது.

Colossians 4:5-6

சாந்தமான பதில் கோபத்தை அடக்கும்; கடுஞ் சொல் கோபத்தை மூட்டும் (பழ.25:15).

Proverbs 15:1

நல்ல வார்த்தைகள் தேனைப் போல (இன்பமாயிருக்கும்) திரேகத் தின் சுகமும் ஆன்மாவின் மதுரமா யிருக்கும்.

Proverbs 16:24

இஸ்பிரீத்துவின் கனிகள் ஏதென் றால்: பரம அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயாளம், நன்மைத்தனம், சகிப்பு,
சாந்தம், விசுவாசம், அடக்க வொடுக்கம், இச்சையடக்கம், நிறைகற்பு இவைகளாம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணமில்லை.

Galatians 5:22-23

உன் சகோதரனை உன் இருதயத்தில் பகைக்காதே. ஆனால் அவனுடைய பாவத்திற்கு நீ உடந்தை யாகாதபடிக்கு பிரசித்தமாய் அவனுக் குப் புத்திசொல்லக் கடவாய் (1அரு.2:1, 3:4; சர்வப். 19:13; மத். 18:5; லூக். 1:; மத்.5:43, 22:9; லுக்.6:7; உரோ.13:9)
பழிக்குப் பழி வாங்கத் தேடாதே. உன் சனத்தார் உனக்கு அநியாயம் செய்தாலும் மனதில் பொறாமை கொள்ளாதே. உன்னில் நீ அன்பு கூர்வதுபோலே உன் சிநேகிதனிலும் அன்பு கூர்வாயாக. நாம் ஆண்டவர்,

Leviticus 19:17-18

இதனாலே நாம் இனிமேல் ஒருவருக்கொருவர் தீர்ப்பிடாதிருப்போமாக; ஆனால் நீங்கள் உங்கள் சகோதரனுக்கு இடறலாய் அல்லது துர்மாதிரிகையாய் இருக்கப்படாதென்று முக்கியமாய்த் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

Romans 14:13

ஆனதால் நமக்குக் காலமிருக்கும்போதே, எல்லாருக்கும், விசேஷமாய் விசுவாசக் குடும்பத்தாருக்கும் நன்மை செய்வோமாக.

Galatians 6:10

சகோதர அன்பு உங்களில் நிலைத் திருப்பதாக.
அந்நியரை உபசரிக்க மறவாதிருங் கள். அதனாலே சிலர் தாங்கள் அறியாம லே தேவதூதர்களை உபசரித்தது உண்டு. (உரோ. 12:13; 1 இரா. 4:9; ஆதி. 18:3.)

Hebrews 13:1-2

இதோ சேனைகளின் அதிபர் உரைத்தது: (ஆண்டவருக்குப் பிரியப்பட விருப்பமிருக்குமாயின்) மெய்யான சத்தியத்தைக் கோரி தீர்மா னங் கூறுங்கள்; ஒவ்வொருவனுந் தன் சகோதரன் மட்டில் இரக்கத்தையும், பிறர்சிநேகத்தையுங் காட்டுவானாக! (மிக். 6:8; மத். 23:23)
விதவைக்கென்கிலும், (அநாத) பிள்ளைக்கென்கிலும், அந்நியனுக் கென்கிலும், ஏழைக்கென்கிலுந் துன் புறுத்த (நினைவுறாதிருக்கக்கடவான்;) எவனுந் தன் இருதயத்தில் தன் சகோதர னுக்குத் தீங்கு கருதாதிருக்கக்கட வான் (யாத்.22:22; இசா.1:23; எரே. 5:28).

Zechariah 7:9-10

நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். என்னை ஏற்றுக்கொள்ளுகிறவனோ, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத். 10:40.)

John 13:20


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |