Topic : Peace

ஆண்டவர் உனக்கு ஆசீர் அளித்துக் காப்பாற்றுவாராக.
ஆண்டவர் உனக்குத் தம்முடைய திருமுகத்தைக் காண்பித்து, உன்மேல் இரக்கமாய் இருப்பாராக.
ஆண்டவர் உன் பக்கம் தம் திருமுகத்தைத் திருப்பி, உனக்குச் சமாதானம் அருள்வாராக என்பதாம்.

Numbers 6:24-26

என்னில் நீங்கள் சமாதானத்தைக் கண்டடையும்படி இதையெல்லாம் நான் உங்களுக்குச் சொன்னேன். உலகில் உங்களுக்கு வேதனை உண்டு; ஆயினும் தைரியமாயிருங்கள்: நான் உலகை வென்றுவிட்டேன்" என்றார்.

John 16:33

சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்.

Matthew 5:9

சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் சமாதானத்தையே உங்களுக்கு அளிக்கிறேன்; நான் உங்களுக்கு அளிக்கும் சமாதனமோ உலகம் தரும் சமாதானம்போல் அன்று. உள்ளம் கலங்க வேண்டாம், மருள வேண்டாம்.

John 14:27

" வாழ்வை விரும்பி இன்பநாளைச் சுவைக்க விழைபவன், தீமையினின்று தன் நாவைக் காத்துக் கொள்க; வஞ்சகப் பேச்சினின்று தன் வாயைக் காத்துக்கொள்க;
தீமையினின்று விலகி நன்மை செய்க; அமைதியை நாடி அதனைத் தொடர்க;

1 Peter 3:10-11

கலக்கமின்றி நான் இனிப் படுத்துறங்க முடியும்: ஏனெனில், ஆண்டவரே, நான் பாதுகாப்பில் வாழச் செய்கின்றீர்.

Psalms 4:8

ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவர் மீது ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால், மன்னித்துவிடுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்ததுபோல் நீங்களும் மன்னியுங்கள்.

Colossians 3:13

கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இதயங்களில் ஆட்சி புரிவதாக. இச் சமாதானத்திற்கே நீங்கள் ஒரே உடலின் உறுப்பினராய் அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாயும் இருங்கள்.

Colossians 3:15

மன உறுதியுள்ளவனை நீர் சமாதானத்தில் உறுதிப்படுத்துகிறீர், ஏனெனில் உம்மீது அவன் நம்பிக்கை வைக்கிறான்.

Isaiah 26:3

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால், எல்லாத் தேவைகளிலும் நன்றியோடு கூடிய செபத்திலும் மன்றாட்டிலும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களை ஒப்படையுங்கள்.
அப்பொழுது அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவுக்குள் உங்கள் உள்ளத்துக்கும் மனத்துக்கும் அரணாயிருக்கும்.

Philippians 4:6-7

சமாதானம் செய்வோர், சமாதானத்தில் விதைக்கும் விதையிலிருந்து இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வென்னும் கனி விளைகிறது.

James 3:18

வல்லவனைவிடப் பொறுமைசாலி உத்தமன். நகரங்களை முற்றுகையிட்டவனைவிடத் தன் மனத்தை ஆள்பவன் உத்தமன்.

Proverbs 16:32

இரக்கம், சமாதானம், அன்பு உங்களுக்குப் பெருகுக!

Jude 1:2

சமாதானத்தின் ஊற்றாகிய ஆண்டவர் எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்குச் சமாதானம் அருள்வாராக.

2 Thessalonians 3:16

தேவ ஆவி அளிக்கும் ஒருமைப்பாட்டைச் சமாதானம் என்னும் பிணைப்பால் காப்பாற்றக் கண்ணும் கருத்துமாய் இருங்கள்.

Ephesians 4:3

எல்லாருடனும் சமாதானமாயிருக்க முயலுங்கள்; பரிசுத்தத்தை நாடுங்கள். பரிசுத்தம் இல்லாமல் ஆண்டவரை ஒருவனும் காணமாட்டான்.

Hebrews 12:14

தீமையைத் தவிர்த்து நன்மை செய்: சமாதானத்தை விரும்பித் தேடு.

Psalms 34:14

விண்ணினின்று வரும் ஞானமோ தீய எண்ணத்துடன் கலவாதது; இதுவே அதன் தலையான பண்பு. மேலும் அது சமாதானத்தை நாடும்; பொறுமையைக் கடைப்பிடிக்கும்; இணக்கத்தை விரும்பும்; இரக்கமும் நற்செயல்களும் பெருகச் செய்யும்; நடுநிலை தவறாது; கள்ளமறியாது.

James 3:17

நற்செய்தியை அறிவிக்கவும், சமாதானத்தைத் தெரிவிக்கவும், மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவிக்கவும், மீட்பைத் தெரிவிக்கவும், சீயோனைப் பார்த்து, "உன் கடவுள் அரசாளுகிறார்" என்று பறைசாற்றவும் வருகிறவருடைய மலரடிகள் மலைகள் மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!

Isaiah 52:7

நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்ட போதனைகள், பெற்றுக்கொண்ட படிப்பிணைகள், என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்க்கையில் நீங்கள் பார்த்தவை அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அப்போது சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உங்களோடிருப்பார்.

Philippians 4:9

கண்டித்துத் திருத்தம் பெறுவது இப்பொழுது இன்பமாயிராமல் துன்பமாகத் தான் தோன்றும். ஆனால், அவ்வாறு பயிற்றப் பட்டவர்கள் பின்னர் அமைதியையும் நீதி வாழ்வையும் பயனாகப் பெறுவர்.

Hebrews 12:11

சச்சரவுகளுக்கு உட்படாமல் இருப்பது மனிதனுக்கு மகிமையாம். ஆனால் மதியீனர் அனைவரும் சச்சரவுகளில் கலந்து கொள்கிறார்கள்.

Proverbs 20:3

உமது சட்டத்தை நேசிப்பவர்களுக்கு மிகுதியான அமைதியுண்டு: அவர்களை விழத்தாட்டக் கூடிய தடைகள் இல்லை.

Psalms 119:165

ஊனியல்பின் நாட்டத்தால் விளைவது சாவே; ஆவியால் தூண்டப்படும் இயல்பின் நாட்டத்தால் வருவது வாழ்வும் அமைதியுமே.

Romans 8:6

அமைதியுடனிருந்து, நான் கடவுள் என்று உணர்ந்து கொள்ளுங்கள்: புறவினத்தாரிடையிலும், மாநில மீதும் உன்னதர் நானே என்று அறிந்து கொள்ளுங்கள்".

Psalms 46:10


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |