Topic : Patience

அன்பு பொறுமையுள்ளது, பரிவுள்ளது. அன்பு அழுக்காறு கொள்ளாது. பெருமை பேசாது, இறுமாப்பு அடையாது,
இழிவானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது, சீற்றத்திற்கு இடந்தராது, வர்மம் வைக்காது.

1 Corinthians 13:4-5

பொறுமையாய் இருக்கிறவன் மிகுந்த விவேகத்தைக் காட்டுகிறான். பொறுமையற்றவனோ தன் மதியீனத்தை எடுத்துக் காட்டுகிறான்.

Proverbs 14:29

நிறைவான தாழ்ச்சியும் சாந்தமும் பொறுமையும் உள்ளவர்களாய், நடந்து, அன்பினால் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்.

Ephesians 4:2

நம்பிக்கை கொண்டவர்களாய் மகிழ்ச்சியோடு இருங்கள்; வேதனையில் மன ஊறுதியோடு இருங்கள்; செபத்தில் நிலையாய் இருங்கள்.

Romans 12:12

நன்மை செய்வதில் மனந்தளராதிருப்போமாக! நாம் சோர்வுறாதிருந்தால், தக்க காலத்தில் அறுவடை கிடைக்கும்.

Galatians 6:9

நாம் காணாததை எதிர்நோக்கி நம்பிக்கைகொண்டிருந்தால், அப்படி எதிர்நோக்குவதில் நம் மனவுறுதியைக் காட்டுகிறோம்.

Romans 8:25

வல்லவனைவிடப் பொறுமைசாலி உத்தமன். நகரங்களை முற்றுகையிட்டவனைவிடத் தன் மனத்தை ஆள்பவன் உத்தமன்.

Proverbs 16:32

ஆண்டவரில் மன அமைதிகொள்; அவரில் நம்பிக்கை வை: தான் செய்பவற்றில் வெற்றி பெறுபவனைப் பார்த்துப் பொறாமை கொள்ளாதே; அநீதி செய்யத் திட்டமிடுகிறவனையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே.

Psalms 37:7

ஆண்டவரை எதிர்பார்த்து வல்லவனாயிரு: உன் உள்ளம் திடம் கொள்வதாக, ஆண்டவரை எதிர்பார்த்திரு.

Psalms 27:14

ஆண்டவர் உங்களுக்காகப் போராடுவார். நீங்கள் பேசாதிருங்கள் (என்றுரைத்தார்).

Exodus 14:14

ஆண்டவர்தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலம் தாழ்த்துவதாகச் சிலருக்குத் தோன்றுகிறது; ஆனால் அவர் காலந்தாழ்த்துவதில்லை; உங்கள் பொருட்டுப் பொறுமையாயிருக்கிறார்; ஒருவரும் அழிவுறக் கூடாது, எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்றிருக்கிறார்.

2 Peter 3:9

ஆதலால், கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டு அவரால் அன்பு செய்யப்பட்ட இறைமக்கள் நீங்கள். இரங்கும் உள்ளம், பரிவு, தாழ்ச்சி, சாந்தம், பொறுமை ஆகிய பண்புகளை அணிந்து கொள்ளுங்கள்.

Colossians 3:12

நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒரு வாய்ப்பட மகிமைப்படுத்துமாறு,

Romans 15:5

ஏனெனில், அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுமட்டுமே, அவரது தயவோ வாழ் நாள் முழுவதும் நீடிக்கும்: மாலையில் அழுகை என்றால், காலையில் உண்டாவது அக்களிப்பு!

Psalms 30:5

ஆண்டவரே, உம்மையே வேண்டுகிறேன், காலையில் என் குரலைக் கேட்டருள்வீர்: காலையில் என் மன்றாட்டுகளை உம்மிடம் எடுத்துச் சொல்லி, உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

Psalms 5:3

ஆதலால் உங்களுக்கு இரக்கம் காட்டுவதற்காக ஆண்டவர் உங்களுக்காகக் காத்திருக்கிறார்; அவ்வாறு உங்களுக்கு மன்னிப்பு அளிப்பதால் அவர் மகிமைப்படுத்தப் பெறுவார்; ஏனெனில் ஆண்டவர் நீதியின் கடவுள், அவருக்குக் காத்திருப்பவர்கள் பேறு பெற்றோர்.

Isaiah 30:18

ஆண்டவர் அன்பும் அருளும் மிக்கவர்: சினங்கொள்ளத் தாமதிப்பவர்; சாந்தமுடையவர்.

Psalms 103:8

இருப்பினும் இறைவனின் இரக்கத்தைப்பெற்றேன். எதற்கெனில், இயேசு கிறிஸ்து முதன் முதல் என்னிடம் நீடிய பொறுமையைக் காட்ட விரும்பினார். இவ்வாறு, அவரில் விசுவாசம் கொண்டு, முடிவில்லா வாழ்வு பெறவேண்டியவர்களுக்கு நான் மாதிரியானேன்.

1 Timothy 1:16

அன்பிற்குரியவர்களே, இன்னொன்றையும் மறக்கவேண்டாம்: ஆண்டவருக்கு ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள்போல்! ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள்போல்!

2 Peter 3:8

"விழிப்பாயிருங்கள்; ஏனெனில், எப்போது உங்கள் ஆண்டவர் வருவார் என்று உங்களுக்குத் தெரியாது.

Matthew 24:42

உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ள வேண்டா, உங்கள் இதயங்களைக் கிழித்துக் கொள்ளுங்கள்." உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள், ஏனெனில் அவர் அருளும் இரக்கமுமுள்ளவர்: நீடிய பொறுமையுள்ளவர், நிலையான அன்புள்ளவர், செய்யக் கருதிய தீமையைக் குறித்து மனமாறுகிறவர்.

Joel 2:13

கண்டித்துப் பேசும்; கடிந்துகொள்ளும்; அறிவுரை கூறும் மிகுந்த பொறுமையோடு போதித்துக்கொண்டே இரும்.

2 Timothy 4:2

இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்.

Matthew 24:13


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |