Topic : Idols

அன்புக் குழந்தைகளே, பொய்த் தேவர்களிடமிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

1 John 5:21

அநியாயம் செய்பவர்களுக்குக் கடவுளின் அரசு உரிமையாகாது என்பது உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்துபோக வேண்டாம். காமுகர், சிலைவழிபாட்டினர், விபசாரர்,
இயற்கைக்கு மாறான பாவம் செய்வோர், அதற்கு உடன்படுவோர், திருடர், பொருளாசை பிடித்தவர், குடிகாரர், பழி பேசுவோர், கொள்ளைக்காரர் இவர்களுக்குக் கடவுளின் அரசு உரிமையாகாது.

1 Corinthians 6:9-10

நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மட்டுமே பின்பற்றி, அவருக்கு அஞ்சுகிறவர்களுமாய் அவருடைய கட்டளைகளை அனுசரிக்கிறவர்களுமாய், அவருடைய வார்த்தைக்குச் செவி கொடுக்கிறவர்களுமாய், அவருக்கு மட்டுமே ஊழியம் செய்து, அவரோடு ஒன்றித்திருக்கக் கடவீர்கள்.

Deuteronomy 13:4

இருளின் பயனற்ற செயல்களைச் செய்பவர்களோடு சேர வேண்டாம்; அவை தவறெனக் காட்டுங்கள்.
மறைவில் அவர்கள் செய்வதெல்லாம் சொல்லக்கூட வெட்கமாயிருக்கிறது.

Ephesians 5:11-12

ஆகையால், மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் கடவுளாகிய ஆண்டவரே கடவுள்; அவரைத் தவிர வேறொருவருமில்லை என்பதை நீ இன்று அறிந்து உன் இதயத்தில் சிந்திக்கக் கடவாய்.

Deuteronomy 4:39

ஆகவே உங்களில் உலகிற்கடுத்தவற்றைச் சாகச் செய்யுங்கள். கெட்ட நடத்தை, கற்பின்மை, காமம், தீய இச்சைகள், சில வழிபாட்டுக்கு ஒப்பான பொருளாசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள்.

Colossians 3:5

ஆண்டவரைத் தொழுவது தீமையானது எனத் தென்பட்டால் உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். மெசோப்பொத்தேமியாவில் உங்கள் முன்னோர் தொழுது வந்த தேவர்களை வழிபடுவதா அல்லது நீங்கள் வாழுகின்ற அமொறையர் நாட்டுத் தேவர்களை வழிபடுவதா என்பதில் எது உங்களுக்கு விருப்பமோ அதை இன்றே தீர்மானித்து விடுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவரையே தொழுது வருவோம்" என்றார்.

Joshua 24:15

அலகையின் வஞ்சகத் தந்திரங்களை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் தரும் படைக்கலங்களை அணிந்து கொள்ளுங்கள்.

Ephesians 6:11

உனக்கு விரோதமாய்த் தயாரிக்கப்பட்ட படைக்கலம் உன்மேல் பயன்படுத்தப்படாது; உனக்குத் தண்டனை விதிக்க வழக்காடும் நாவை நீயே கண்டனம் செய்து அடக்கி விடுவாய். ஆண்டவருடைய ஊழியர்களின் உரிமைச் சொத்தும் அவர்களுக்கு எம்மிடம் கிடைக்கும் நீதியும் இதுவே, என்றார் ஆண்டவர்.

Isaiah 54:17

எகிப்து நாட்டினின்று உன்னை விடுவித்த நாள் முதல் நாமே உன் கடவுளாகிய ஆண்டவர்; நம்மைத் தவிர வேறு கடவுளை நீ அறிவாய், நம்மையன்றி வேறு மீட்பரும் இல்லை.

Hosea 13:4

தீமை உன்னை வெல்ல விடாதே, நன்மையால் தீமையை வெல்க.

Romans 12:21

பண ஆசைதான் எல்லாத் தீமைகளுக்கும் வேர். அந்த ஆசையால்தான் சிலர் தங்களையே ஊடுருவக் குத்திக்கொள்வதுபோல் பல துன்பங்களைத் தங்கள்மேல் வருவித்துக்கொண்டார்கள்.

1 Timothy 6:10

உலகிலிருந்து அவர்களை எடுத்துவிடும்படி நான் மன்றாடவில்லை, தீயவனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே உம்மை மன்றாடுகிறேன்.

John 17:15

தீமையைத் தவிர்த்து நன்மை செய்: சமாதானத்தை விரும்பித் தேடு.

Psalms 34:14

பாவமே சாவின் கொடுக்கு; பாவத்திற்கு வலிமை தருவது சட்டம்.

1 Corinthians 15:56


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |