Topic : Honesty

அன்புக் குழந்தைகளே, நம் அன்பு சொல்லிலும் பேச்சிலும் இராமல், செயலில் விளங்கும் உண்மையான அன்பாய் இருக்கட்டும்.

1 John 3:18

நீதிமான்களின் நேர்மை அவர்களை நடத்தும். தீயோரின் சதியோ அவர்களையே நாசமாக்கும்.

Proverbs 11:3

இரக்கத்தையும் நீதியையும் கடைப்பிடித்தல் பலிகளைவிட ஆண்டவருக்கு அதிக விருப்பமாம்.

Proverbs 21:3

இருளிலே வாழ்ந்துகொண்டு அவரோடு நமக்கு நட்புறவு உண்டு என்போமானால் நாம் பொய்யர்கள், உண்மைக்கு ஏற்ப நடப்பவர்கள் அல்ல.

1 John 1:6

ஆகையால், அவரவர்க்குத் செலுத்த வேண்டியதை அவரவர்க்குச் செலுத்துங்கள். வரிப்பணம் வாங்குவோருக்கு வரிப்பணமும், தீர்வைக் கேட்போருக்குத் தீர்வையும் செலுத்துங்கள். அஞ்ச வேண்டியவர்களுக்கு அஞ்சுங்கள். மதிக்க வேண்டியவர்களை மதியுங்கள்.

Romans 13:7

கெட்டுப்போன மனிதன் சச்சரவை மூட்டுகிறான். வாயாடி அரசர்களைப் பிரிக்கிறான்.

Proverbs 16:28

ஆண்டவரில் மன அமைதிகொள்; அவரில் நம்பிக்கை வை: தான் செய்பவற்றில் வெற்றி பெறுபவனைப் பார்த்துப் பொறாமை கொள்ளாதே; அநீதி செய்யத் திட்டமிடுகிறவனையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே.

Psalms 37:7

தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்.

Matthew 5:8

விண்ணினின்று வரும் ஞானமோ தீய எண்ணத்துடன் கலவாதது; இதுவே அதன் தலையான பண்பு. மேலும் அது சமாதானத்தை நாடும்; பொறுமையைக் கடைப்பிடிக்கும்; இணக்கத்தை விரும்பும்; இரக்கமும் நற்செயல்களும் பெருகச் செய்யும்; நடுநிலை தவறாது; கள்ளமறியாது.

James 3:17

கடவுளால் ஏற்கப்படத்தக்கவராய் விளங்கவும். நாணித் தலைகுணியவேண்டிய செயலில் ஈடுபடாத வேலையாளாய் இருக்கவும், நெறிபிறழாது உண்மையின் வார்த்தையைப் போதிப்பவராய் இருக்கவும் முயற்சி செய்யும்.

2 Timothy 2:15

அநியாயமாய்ச் சேர்த்த செல்வங்கள் யாதொரு பயனையுந் தராது. நீதியோ சாவினின்று விடுவிக்கும்.

Proverbs 10:2

குறிப்பாக, என் சகோதரர்களே, ஆணையிடாதீர்கள். விண்ணுலகின் மீதோ மண்ணுலகின் மீதோ, வேறெதன் மீதோ ஆணையிட வேண்டாம். நீங்கள், ஆம் என்றால் ஆம் என்றிருக்கட்டும்; இல்லை என்றால் இல்லை என்றிருக்கட்டும். இப்படிச் செய்தால் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.

James 5:12

நன்மை புரிய முயல்கிறவனை நீ விலக்காதே. உன்னால் இயலுமானால், நீயும் நன்மை செய்.

Proverbs 3:27

மனமிரங்கி கடன் கொடுக்கும் மனிதன் நல்லதைச் செய்கிறான்: தன் அலுவல்களை நீதியுடன் செய்பவனும் அப்படியே.

Psalms 112:5

எவனும் விளக்கை ஏற்றிப் பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. உள்ளே வருபவர் ஒளியைக் காணும்படி அதை விளக்குத் தண்டின் மீது வைப்பான்.

Luke 8:16

அக்கிரமத்தோடு நிறைவு கொண்டிருப்பதைவிட நீதியோடு வறுமையுற்றிருப்பது நன்று.

Proverbs 16:8

இதற்காகவே நீங்கள் வரிகள் செலுத்துகிறீர்கள். ஏனெனில் அரசினர் தங்கள் பணியில் ஈடுபடும்போது கடவுளுக்கே தொண்டு செய்கின்றனர்.

Romans 13:6

அப்போதன்றோ நீதியையும் நியாயத்தையும் நேர்மையையும் நன்னெறி அனைத்தையும் நீ கண்டு பிடிப்பாய் ?

Proverbs 2:9

உன் கண்கள் நேரானவற்றை நோக்கக்கடவன. உன் கண் இமைகளும் உன் அடிச் சுவடுகளுக்குமுன் செல்லக்கடவன.

Proverbs 4:25


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |