அவன், பாவம் செய்தவனாயிருந்தால், மன்னிப்புப் பெறுவான். ஆகவே, ஒருவர்க்கொருவர் பாவ அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவருக்காக ஒருவர் செபியுங்கள்; அப்போது குணமடைவீர்கள். நீதிமான் முழு உள்ளத்தோடு செய்யும் மன்றாட்டு ஆற்றல் மிக்கது.
மாறாக, நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோமானால், அவர் நம்பிக்கைக்குரியவர், நீதியுள்ளவர் என விளங்குவார். நம் பாவங்களை மன்னிப்பார்; எல்லா அநீதியினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்.
என் பாவத்தை நான் உமக்கு வெளியிட்டேன்; என் குற்றத்தை நான் உம் திருமுன் மறைத்தேனில்லை: "ஆண்டவரிடம் என் பாவத்தை ஒப்புக்கொள்கிறேன்" என்றேன்; நீரும் என் குற்றத்தை மன்னித்தீர்.
அலகையை எதிர்த்து நில்லுங்கள், அது ஓடி விடும். கடவுளை அணுகிச் செல்லுங்கள்; அவரும் உங்களை அணுகி வருவார். பாவிகளே, உங்கள் கைகளைத் தூய்மையாக்குங்கள்; இருமனத்தோரே, இதயங்களைப் புனிதப்படுத்துங்கள்.
எல்லாருமே கடவுளது மாட்சிமையின் சாயலின்றி உள்ளனர். ஆனால் இறைவன் அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகிறார்கள்; கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய விடுதலைச் செயலின் வாயிலாய் அங்ஙனம் ஆக்கப்படுகிறார்கள்.
அந்த வார்த்தை நாங்கள் அறிவிக்கிற விசுவாச அறிக்கையே. ஏனெனில், 'இயேசு ஆண்டவர்' என உன் வாயினால் அறிக்கையிட்டு, கடவுள் அவரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்தார் என உன் உள்ளத்தில் விசுவசித்தால், நீ மீட்புப் பெறுவாய்.
விசுவாச வாழ்வு என்னும் சீரிய பந்தயத்தில் தளராதீர். முடிவில்லா வாழ்வைக் கைப்பற்றிக் கொள்ளும். அதற்காகவே அழைக்கப் பெற்றிருக்கிறீர். அதை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில் சிறந்த விசுவாச அறிக்கை செய்தீர்.