Topic : Serving

ஊக்கத்தளராதிருங்கள்; ஆர்வம் தணியாதிருங்கள்: நீங்கள் ஊழியஞ் செய்வது ஆண்டவருக்கே.

Romans 12:11

அப்போது அவர் அமர்ந்து பன்னிருவரையும் அழைத்து, "ஒருவன் முதல்வனாய் இருக்க விரும்பினால் அவன் அனைவரிலும் கடையனாய் இருக்கட்டும், அனைவருக்கும் பணியாளன் ஆகட்டும்" என்றார்.

Mark 9:35

ஆகையால், என் அன்பார்ந்த சகோதரர்களே, உறுதியாய் இருங்கள், நிலை பெயராதீர்கள். உங்கள் உழைப்பு ஆண்டவருக்குள் வீணாவதில்லை என்பதை அறிந்து, ஆண்டவரின் வேலையைச் செய்வதில் சிறந்து விளங்குங்கள்.

1 Corinthians 15:58

எனக்குப் பணிவிடை செய்பவன் என்னைப் பின்செல்லட்டும்; எங்கே நான் இருக்கிறேனோ, அங்கே என் பணியாளனும் இருப்பான். எவனாவது எனக்குப் பணிவிடைசெய்தால், அவனுக்கு என் தந்தை மதிப்பளிப்பார்.

John 12:26

ஏனெனில், மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும், பலருடைய மீட்புக்கு விலையாகத் தம் உயிரை அளிக்கவும் வந்தார்."

Mark 10:45

அதற்குத் தலைவன், ' நன்று, நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியனே, சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவனாய் இருந்தாய்; ஆதலால் உன்னைப் பெரியவற்றுக்கு அதிகாரியாக்குவேன். உன் தலைவனது மகிழ்ச்சியில் சேர்ந்துகொள்' என்றான்.

Matthew 25:21

மறைநூலில் உள்ளதெல்லாம் கடவுளால் ஏவப்பட்டுள்ளது. போதிக்கவும் கண்டிக்கவும் சீர்திருத்தவும், இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வில் மக்களைப் பயிற்றவும், பயன்படும்.
இவ்வாறு கடவுளின் அடியான், திறமை நிரம்பப் பெற்று, எல்லா வகையான நற்செயல்களையும் செய்யத் தகுதியுள்ளவனாகின்றான்.

2 Timothy 3:16-17

நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மட்டுமே பின்பற்றி, அவருக்கு அஞ்சுகிறவர்களுமாய் அவருடைய கட்டளைகளை அனுசரிக்கிறவர்களுமாய், அவருடைய வார்த்தைக்குச் செவி கொடுக்கிறவர்களுமாய், அவருக்கு மட்டுமே ஊழியம் செய்து, அவரோடு ஒன்றித்திருக்கக் கடவீர்கள்.

Deuteronomy 13:4

நீங்களோ, சகோதரர்களே, உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அந்த உரிமை, ஊனியல்பின் இச்சைகளுக்கு ஏற்ற வாய்ப்பாகும்படி விட்டுவிடாதீர்கள். மாறாக ஒருவருக்கொருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள்.

Galatians 5:13

இப்பொழுது, இஸ்ராயலே, நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய நெறியில் ஒழுகி, உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கொண்டு, உன் முழு இதயத்தோடும் ஆன்மாவோடும் அவருக்கு ஊழியம் செய்து,
உனக்கு நன்மை பயக்கும் பொருட்டு நான் இன்று உனக்குக் கற்பிக்கிற ஆண்டவருடைய கட்டளைகளையும் ஆசாரங்களையும் நீ கைக்கொண்டு கடைப்பிடிக்க வேண்டுமென்பதேயல்லாது, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னிடம் வேறு எதனைக் கேட்கிறார் ?

Deuteronomy 10:12-13

ஆண்டவரைத் தொழுவது தீமையானது எனத் தென்பட்டால் உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். மெசோப்பொத்தேமியாவில் உங்கள் முன்னோர் தொழுது வந்த தேவர்களை வழிபடுவதா அல்லது நீங்கள் வாழுகின்ற அமொறையர் நாட்டுத் தேவர்களை வழிபடுவதா என்பதில் எது உங்களுக்கு விருப்பமோ அதை இன்றே தீர்மானித்து விடுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவரையே தொழுது வருவோம்" என்றார்.

Joshua 24:15

ஆகவே, ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் ஒருவருடைய பாதங்களைக் கழுவவேண்டும்.

John 13:14

ஆயினும், ஆண்டவராகிய கடவுளின் அடியாரான மோயீசன் உங்களுக்குக் கொடுத்துள்ள கட்டளைகளையும் சட்டங்களையும் உறுதியாய்க் கைக்கொண்டு நுணுக்கமாய் நிறைவேற்றுவதில் கவனமாயிருங்கள். அதாவது. நீங்கள் ஆண்டவர் பால் அன்புகூர்ந்து, அனைத்திலும் அவர் வழி நின்று. அவர் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரைச் சார்ந்து நின்று, உங்கள் முழு இதயத்தோடும், முழு மனத்தோடும் அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும்" என்றார்.

Joshua 22:5

ஒருவனுடைய வாழ்வின் நெறி உறுதி பெறுவது ஆண்டவராலே: அவனுடைய வாழ்வை அவர் உகந்ததென ஏற்கிறார்.

Psalms 37:23

"எவனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது. ஏனெனில், ஒருவனை வெறுத்து மற்றவனுக்கு அன்பு செய்வான். அல்லது, ஒருவனைச் சார்ந்துகொண்டு மற்றவனைப் புறக்கணிப்பான். கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்யமுடியாது.

Matthew 6:24

தம் ஊழியரின் ஆத்துமங்களை ஆண்டவர் மீட்கிறார்: அவரிடம் அடைக்கலம் புகுபவன் எவனும் தண்டனையடையான்.

Psalms 34:22

உரிமை அடைந்தவர்களென வாழுங்கள்; ஆனால், இந்த உரிமையை, தீவினை செய்வதற்குப் போர்வையாகக் கொள்ளாதீர்கள். கடவுளுக்கு அடிமைகளென்றே வாழுங்கள்.

1 Peter 2:16

நீங்களோ உங்கள் உறுப்புக்களைத் தீமைசெய்யும் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்படைக்காதீர்கள்; மாறாக, இறந்தோர்களிடமிருந்து உயிர்த்து வாழ்கிறவர்களாய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்; கடவுளுக்கு ஏற்புடையதைச் செய்வதற்குரிய கருவிகளாய் உங்கள் உறுப்புகள் இருக்கட்டும்.

Romans 6:13


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |