Topic : Learning

நீங்கள் என்னிடத்தில் எவைகளைக் கற்றும், பெற்றும், கேட்டும், கண்டுமிருக்கிறீர்களோ, அவைகளை யே செய்யுங்கள். அப்போது சமாதா னக் கடவுள் உங்களோடிருப்பார்.

Philippians 4:9

பூமி முழுவதுங் கர்த்தருக்குப் பயப்படுவதாக! உலக வாசிகளெல் லாரும் அவருக்கஞ்சி நடுங்கக்கட வார்கள்.

Psalms 32:8

ஆனதால், நீங்கள் இப்போது செய்துவருகிறபடியே ஒருவரொருவரைத் தேற்றி, ஒருவரொருவருக்கு நன்மாதிரியாயிருங்கள்.

1 Thessalonians 5:11

ஆண்டவருடைய கண்டிதத்தை என் மகனே! நீ தள்ளிவிடாதே; அவ ரால் கண்டிக்கப்படுகையிலுஞ் சோர்ந்து போகாதே (எபி.12:5; காட்சி.3:19).
ஏனெனில், ஆண்டவர் தாம் சிநேகிக்கிறவனைக் கண்டிக்கிறார்; தகப்பன் தன் மகளில் சந்தோஷிப் பதுபோல் அவருஞ் சந்தோஷிக் கிறார்.

Proverbs 3:11-12

தேவ பயமே ஞானத்தின் ஆதி யாம்; மதியீனர் ஞானத்தையும், போதனையையும் புறக்கணிக் கிறார்கள் (சங்.110:10; சர்வ.1:16).

Proverbs 1:7

நான் வீணருடைய ஆசனத்தில் உட்கார்ந்தவனுமல்ல; தோஷம் செய்பவரிடத்தில் சேர்வதுமில்லை.

Psalms 25:4

ஆண்டவரே! உமது வீட்டின் அலங்காரத்தையும் உமது மகிமை விளங்கச் செய்யும் இடத்தையும் விரும்பினேன்.
சர்வேசுரா! என் ஆத்துமாவை அவபத்தியுள்ளவர்களோடும், என் சீவனை இரத்தப் பிரியரோடும் போக்கடியாதேயும்.

Psalms 25:8-9

என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவனாயிருக்கி றேனென்று என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் ஆத்துமங்களுக்கு இளைப்பாற்றியைக் கண்டடைவீர்கள். (எரே. 6:16.)
ஏனெனில் என் நுகம் இனிதாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது. (1 அரு. 5:3.) * 30. சேசுநாதர்சுவாமியுடைய கட்டளையெல்லாம் தேவசிநேகம் பிறர்சிநேகங்களில் அடங்கியிருக்கிறதினாலேயும், சிநேகமானது எல்லாவற்றையும் இன்பமாக மாற்றுகிறதினாலேயும் சேசுநாதர்சுவாமி: என் நுகம் இனிது, என் சுமை இலகுவானது என்கிறார்.

Matthew 11:29-30

பொல்லாதவர்களுடைய கூட்டத்தை நான் பகைத்தேன்; அவ பத்தியுள்ளவர்களோடு நான் உட்கார மாட்டேன்.

Psalms 25:5

கிறீஸ்துநாதருடைய வாக்கியம் உங்களிடத்தில் சம்பூரணமாய்ச் சகல ஞானத்தோடுங் குடிகொண்டிருக்கக்கடவது. அப்படியே நீங்கள் ஒருவரொருவருக்குப் போதித்து, புத்தி சொல்லி, சங்கீதங்களிலும், கீர்த்தனைகளிலும், ஞானப்பாட்டுகளிலும் சர்வே சுரனுக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரங் களை உங்கள் இருதயங்களில் பாடிக் கொண்டுவாருங்கள்.

Colossians 3:16

ஆகையால் நீங்கள் போய், சகல ஜாதி ஜனங்களுக்கும் உபதேசித்து: பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத் தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, (மாற். 16:15.)
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவற்றையும் அனுசரிக்கும்படி அவர்களுக்குப் போதியுங்கள். இதோ நான் உலகமுடியுமட்டும் எந்நாளும் உங்களோடுகூட இருக்கிறேனென்று திருவுளம்பற்றினார். * 20. அப்போஸ்தலர்கள் மரிப்பார்களென்று சேசுநாதர் அறிந்திருந்தும், உலக முடியுமட்டும் அவர்களோடுகூடத் தாமிருக்கிறதாகச் சொல்லுகிறபடியால், அப்போஸ்தலர்களுடைய மரணத்துக்குப்பின், அவர்களுடைய ஸ்தானத்திலே இருக்கிறவர்களோடும் சேசுநாதர் சுவாமி வசிக்கிறாரென்று சொல்லவேண்டியது. அப்போஸ்தலர்களுடைய ஸ்தானங்களும் உலகமுடியுமட்டும் நிலைநிற்குமென்று நிச்சயமாயிருக்கிறது.

Matthew 28:19-20

நீரோ, குணமான உபதேசத்துக் கேற்றவைகளைப் பேசும்.

Titus 2:1

அவராலே நீங்கள் பெற்றுக் கொண்ட அபிஷேகம் உங்களிடத்தில் நிலைத்திருப்பதாக. அப்பொழுது ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டிய தில்லை. அவருடைய அபிஷேகம் சகலத் தையும்பற்றி உங்களைப் படிப்பிப்பதி னாலே, அந்தப் படிப்பினை உண்மையுள் ளதும் பொய்யற்றதுமாயிருக்கின்றது. அது உங்களைப் படிப்பித்தபடியே அவரிடத்தில் நிலைக்கொள்வீர்களாக.

1 John 2:27

என் ஆத்துமமானது இரவில் உம்மை அபேட்சித்தது; நானும் அதி காலையே என் புத்தியுள்ள உள்ள முடன் உம்மை நோக்கி விழித்திருப் பேன்; (பூதல வாசிகள் அப்படியல்ல,) நீர் பூமிமீது நீதி செலுத்தியபின்னர் தான் நீதியாயிருக்கத் தேடுவர்.

Isaiah 26:9

அரசர்களுக்கு இரட்சணியங் கொடுக்கிறவரே! உமது தாசனாகிய தாவீதைப் பெரும் பட்டயத்திலிருந்து விடுதலையாக்கினவரே! என்னை இரட்சியும்.

Psalms 143:10

நான் உனக்கு ஞானத்தின் மார்க்கத்தைக் காண்பிப்பேன்; நேர் மையின் மார்க்கங்களில் உன்னை நடத்துவேன்.

Proverbs 4:11

ஆனால் என் நாமத்தினாலே பிதாவானவர் அனுப்பப்போகிற தேற்றுகிறவராகிய இஸ்பிரீத்துசாந்துவானவர் சகலத்தையும் உங்களுக்குப் படிப்பித்து, நான் உங்ளுக்குச் சொன்ன யாவற்றை யும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

John 14:26

சேசுநாதர் அவர்களுக்கு மறு மொழியாக: என் போதகம் என்னுடைய தல்ல, என்னை அனுப்பினவருடையதா யிருக்கின்றது.

John 7:16

பிரயோசனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்காமல், பிரசித்தமாயும் அந்தந்த வீடுகளிலும் உங்களுக்கு அறிவித்துப் போதித்தேன்.

Acts 20:20


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |