Topic : Worship

ஆண்டவரே, நீர் என் தேவ னாயிருக்கின்றீர்; உம்மை மகிமைப் படுத்தி உமது நாமகரணத்தைப் போற்றுவேனாக; ஏனெனில், அதிசய உத்தமமானவைகளைச் செய்தீர்; நித்திய கோரிக்கைகளை ஸ்திரப் படுத்தினீர்; அங்ஙனமேயாகக் கடவது.

Isaiah 25:1

உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் சேவித்து வந்தால் நீங்கள் புசிக்கும் அப்பத்துக்கும் குடிக்கும் தண்ணீருக்கும் நாம் ஆசீர்வாதங் கொடுத்து வியாதியை உங்களிடத்திலிருந்து விலகப்பண்ணுவோம்.

Exodus 23:25

சகல ஜீவாத்துமாக்களும் அவரைத் துதியுங்கள்! அல்லே லுய்யா.

Psalms 150:6

நடுராத்திரியில் சின்னப்பரும், சீலாவும் ஜெபஞ்செய்து சர்வேசுரனை ஸ்துதித்தார்கள். சிறையிலிருந்தவர்களும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

Acts 16:25

சர்வேசுரன் ஞான வஸ்துவாயிருக்கிறார். ஆதலால் அவரை ஆராதிக்கிறவர்கள் ஞானத்திலும் உண்மையிலும் ஆராதிக்கவேண்டும் என்றார். (1 கொரி. 3:17.) * 21-24. சாலமோன் இராஜா ஜெருசலேமில் கட்டின தேவாலயத்தில் மாத்திரம் அந்நாள் பலிகளெல்லாம் செலுத்தப்படவேண்டியதாயிருந்தது. பிரிவினைக்காரரான சமாரியர்கள் ஜெருசலேமில் பலியிடப்போகாமல், அவர்கள் பட்டணத்துக்கு அருகேயிருந்த காரீசிம் என்ற மலையின்மேல் சர்வேசுரனுடைய கற்பனைக்கு விரோதமாய்ப் பலிகளைச் செலுத்திக்கொண்டிருந்தார்கள். இந்தப் பலிகளெல்லாம் தெய்வபக்தியில்லாமல் யூதர்கள் வெறுஞ் சடங்குகளாக நிறைவேற்றிவந்ததினாலே அவைகளுக்கு முடிவுகாலம் வந்ததென்றும், இது முதற்கொண்டு ஞானமாயிருக்கப்பட்ட சர்வேசுரனை ஞானமும் உண்மையும் அடங்கிய தேவ விசுவாசம் தேவ நம்பிக்கை தேவ சிநேகத்தினாலே ஆராதிக்கிற காலம் வந்திருக்கிறதென்றும் சேசுநாதர்சுவாமி படிப்பிக்கிறார்.

John 4:24

என் ஆத்துமாவே! ஆண்ட வரை வாழ்த்துவாயாக; என் தேவனா கிய ஆண்டவரே! சொல்லுக்கு எட்டாவண்ணம் உம்முடைய மகத் துவத்தை விளக்கினீர்.

Psalms 103:1

ஆண்டவரைத் துதியுங்கள்; அவர் நல்லவர்; அவருடைய கிருபை சதாகாலத்துள்ளது.

1 Chronicles 16:34

சர்வேசுரா! நான் உம்மை வேண்டிக் கொள்ளும்போது என் மன்றாட்டைக் கேட்டருளும்; என் சத்துருவினுடைய பயத்திலிருந்து என்னை விடுவித்தருளும்.

Psalms 63:1

ஏனெனில், (அக்காலையில்) அத்தி புஷ்பிக்காது; திராட்சைக் கொடிகள் தளிர் கொள்ளா; ஒலீவ் மரம் கனி மோசஞ் செய்யும்; வயல் கள் தானியந் தராது; ஆடின்றி மந்தை வெறுமையாகும்; தொழுவங்களில் மாடு கன்றுகளிரா.
யானோ ஆண்டவரில் சந்தோ ஷங் கொண்டாடுவேன்; என் இரட்சகராகிய தேவனின் அக்களிப் புக் கொள்வேன்.

Habakkuk 3:17-18

எத்தியோப்பியர் அவருக்கு முன் பணிந்து வணங்குவார்கள்; அவருடைய சத்துருக்கள் (அவருக் குத்) தண்டம் பண்ணுவார்கள்.

Psalms 71:8

சர்வேசுரனும் நமது ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய பிதாவும், இரக்கங்களின் தகப்பனும், சர்வ ஆறுதலின் தெய்வமுமாயிருக்கிறவர் ஸ்துதிக்கப்படுவாராக. (எபே.1:3; 1 இரா. 1:3.)
நாங்களே சர்வேசுரனிடத்தில் பெற்றுக்கொள்ளுகிற ஆறுதலைக்கொண்டு எவ்வித இடையூறுகளிலும் அகப்பட்டிருக்கிறவர்களுக்கு நாங்களும் ஆறுதல் வருவிக்கத் திராணியுள்ளவர்களாயிருக்கும்படிக்கு எங்களுக்கு நேரிடும் எல்லாத் துன்பங்களிலும் அவரே எங்களைத் தேற்றிவருகிறார்.

2 Corinthians 1:3-4

ஆகையால், ஓ, தேவனாகிய கர்த்தாவே நீர் மகத்தானவரென்று எவராலும் பாராட்டப்பட்டிருக்கிறீர்; நாங்கள் காதினாலே கேட்ட சகல வார்த்தைகளின்படியன்றோ தேவரீ ருக்கு நிகரானவர் ஒருவருமில்லை என்றும், தேவரீரைத் தவிர வேறு தேவ னுமில்லையென்றும் அறிந்திருக் கிறோம்.

2 Samuel 7:22

ஆண்டவரே! மகத்துவமும், வல்லமையும், மகிமையும், செயமும் தேவரீருடையது. உமக்கே தோத்திரம். பரலோகத்திலும் பூலோகத்திலும் இருக்கின்ற அனைத்தும் உம்முடைய தாமே. அரசாட்சி, கர்த்தரே, உம் முடையது. தேவரீர் எல்லோருக்கும் ஆண்டவராக உயர்ந்திருக்கிறீர்.

1 Chronicles 29:11

வீணிலே என்னைப் பகைக் கிறவர்கள் என் தலைமயிர்களிலும் மிகுந்து போனார்கள்; அநியாயமாய் என்னை உபாதிக்கிற என் சத்துருக் கள் கெம்பீரங்கொண்டு திரிகிறார் கள்; நான் பறிக்காததை கொடுக்க லானேன்.
தேவனே! என் புத்தியீனத்தை அறிவீர்; என்னுடைய பாவங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.

Psalms 68:4-5

சகலமும் அவராலும், அவரைக் கொண்டும், அவரிலும் உண்டாயிருக்கின்றது. அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

Romans 11:36

நீங்கள் நம்மை மன்றாடித் திரும்ப வருவீர்கள்; நீங்கள் நம்மை வேண்டுவீர்கள்; நாம் உங்கள் மன்றாட்டைக் கேட்டருளுவோம்.

Jeremiah 29:12

ஏனெனில், சிரஞ்சீவியர் நாமே, எல்லா முழங்கால்களும் நமக்கு முன்பாக முடங்கும், எல்லா நாவும் சர்வேசுரனை ஸ்துதிக்கும் என்று ஆண்டவர் சொல்லுகிறாரென்று எழுதியிருக்கிறது. (இசை. 45:24; பிலிப். 2:10.)

Romans 14:11


ஆண்டவர் நல்லவராகவும், அவருடைய கிருபாகடாட்சம் என்று முள்ளதுமாகவும் இருக்கிறபடி யினாலே அவரைத் துதியுங்கள் (யூதித். 13:21).

Psalms 105:1

மின்னல்களை மின்னப் பண் ணும்; அவர்களைச் சிதற அடிப்பீர்; உமது அம்புகளை எய்து அவர்களைக் கலங்க அடியும்.

Psalms 143:6

ஆண்டவரைப் போலப் பரிசுத் தர் இல்லை; உம்மையன்றி வேறொரு வருமில்லை; நமது கடவுளுக்கொத்த வல்லமையுள்ளவருமில்லை.

1 Samuel 2:2


உமது சந்நிதியில் நின்று எனக்கு ஞாயத் தீர்ப்பு வருவதற்கு உமது விழிகள் சரியானவைகளைப் பார்ப் பதாக.

Psalms 16:2

ஸ்துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்தே புறப்படுகின்றது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.

James 3:10



All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |