Topic : Understanding

நம்மை நோக்கி அபயமிடு; நாம் உனக்குக் காதுகொடுப்போம்; நீ அறியாத பெரியனவும் நிச்சயமு மான சில விஷயங்களை உனக்கு அறிவிப்போம்.

Jeremiah 33:3

பொறுமையாயிருக்கிறவன் மிகு விவேகத்தைக் காட்டுகிறான்; பொறாமையாயிருக்கிறவனோ வெனில் தன் மதியீனத்தை எடுத்துக் காட்டுகிறான்.

Proverbs 14:29

உயிராகும் விதம் இன்னதென் றும், கர்ப்பவதியினுதரத்தில் எலும்புகள் உருவாகும் விதம் இன்ன தென்றும் நீ அறியாதிருக்கிறது போலவே எல்லாவற்றையும் உண் டாக்கின தேவனுடைய கிரிகை களையும் நீ அறிவாய்.

Ecclesiastes 11:5

மனிதனுடைய மார்க்கமெல் லாம் அவனுக்கு நேரானதாய்த் தோன்றுகின்றது;ஆனால் ஆண்டவர் இருதயங்களை நிறுத்துப் பார்க் கிறார்.

Proverbs 21:2

ஞானத்தைத் தேடுவது, ஞானத் தின் துவக்கமாம், உன் சொத்து அனைத்திலும் விமரிசையை அடைய முயலு.

Proverbs 4:7

பூமி முழுவதுங் கர்த்தருக்குப் பயப்படுவதாக! உலக வாசிகளெல் லாரும் அவருக்கஞ்சி நடுங்கக்கட வார்கள்.

Psalms 32:8

நாங்கள் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளையே நோக்கிக்கொண்டிருக்கிறோம். ஏனெனில் காணப்படுகிறவைகள் அநித்தியமானவை; காணப்படாதவை களோ நித்தியமானவை.

2 Corinthians 4:18

நம்முடைய கர்த்தராகிய சேசுக்கிறீஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமாயிருக்கிறவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்குரிய ஞானமும் தெளிவுமாகிய இஸ்பிரீத்துவின் வரங்களை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,

Ephesians 1:17

மனிதனின் இருதயத்தில் சிந்தனைகள் பலவாம்; ஆண்டவர் சித்தமோவெனில் நிலைபெற் றிருக்கும்.

Proverbs 19:21

ஆனால் எல்லாவற்றையும் பரிசோதித்து, நலமானதைக் கைப்பற்றிக்கொள்ளுங்கள்.
தின்மையாகத் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.

1 Thessalonians 5:21-22


சேசுநாதர் அவர்களைப் பார்த்து: மனிதராலே இது கூடாததுதான்; சர்வே சுரனாலோ எல்லாங்கூடும் என்றார்.

Matthew 19:26

பூமிக்கு வானமண்டலங்கள் துலையிட்டிருப்பதுபோல், நமது வழிகள் உங்கள் வழிகளுக்கும், நமது எண்ணங்கள் உங்கள் எண்ணங்களுக் கும் உயர்ந்திருக்கின்றன.

Isaiah 55:9

கடவுள் பூமியின் எல்லைகளைச் சிருஷ்டித்த நித்தியரான தேவன் எனவும், அவர் இராச்சிய பாரத்தில் களைக்கிறதுமில்லை, உழைக்கிறது மில்லை; அவருடைய ஞானமோ புத்திக்கெட்டதாய் இருக்கின்றதென வும், நீங்கள் அறியீர்களோ? கேள்வி யுற்றதுமில்லையோ?

Isaiah 40:28

ஏனெனில் நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்துக்கொத்தபடி போராடுகிறவர்களல்ல.

2 Corinthians 10:3

ஆ, தெய்வ ஞானம், அறிவு இவைகளின் திரவிய பொக்கிஷம் எவ்வளவோ ஆழமானது! அவருடைய நியாயத் தீர்ப்புகள் எவ்வளவோ புத்திக்கெட்டாதவைகளுமாய், அவருடைய வழிகள் எவ்வளவோ ஆராய்ந்தறியக்கூடாதவைகளுமா யிருக்கின்றன.

Romans 11:33

எவனும் சோதிக்கப்படுகையில், சர்வேசுரனாலே நான் சோதிக்கப் படுகிறேனென்று சொல்லாதிருப்பா னாக. ஏனெனில் சர்வேசுரன் தின்மைக்குச் சோதிப்பவரல்ல. ஆகையால் அவர் எவனையும் சோதிக்கிறவரல்ல.

James 1:13

களிமண்ணும், மட்பாத்திர முமான மனிதன் தன் சிருஷ்டிகருக்கு விரோதமாய் விவாதஞ் செய்வா னேல் அவனுக்குக் கேடாம்; களி மண் தன் குயவனை நோக்கி: நீ என்ன செய்கின்றாய், உன் வேலை திறமுள கரமற்றதெனப் புகல்வதுமுண்டோ? (எரே.18:6; உரோ. 9:20)

Isaiah 45:9

யூதனென்றும், கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீன னென்றுமில்லை. ஆணென்றும் பெண் ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் சேசுக்கிறீஸ்துநாதரிடத்தில் ஒன்றாயிருக் கிறீர்கள்.
நீங்கள் கிறீஸ்துவினுடையவர்களானால், அபிரகாமுடைய வித்தாயும் வாக்குத்தத்தத்தின்படிக்குச் சுதந்திரவாளிகளுமாயிருக்கிறீர்கள்.

Galatians 3:28-29

இஷ்டப்பிரசாதத்திலும் நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய சேசுக்கிறீஸ்துவை அறியும் அறிவிலும் வளர்ந்து வருவீர்களாக. அவருக்கே இப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாகக்கடவது. ஆமென்.

2 Peter 3:18

ஓர் பிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அரவணைத்துக்கொண்டு, அவர்களுக் குச் சொன்னதாவது;

Mark 9:35

சேசுநாதர் அவனுக்கு மறுமொழி யாக: ஒருவன் மறுபடியும் பிறவாதிருந் தால், சர்வேசுரனுடைய இராச்சியத்தைக் காணமாட்டானென்று மெய்யாகவே, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (அரு. 1:13; 1 இரா. 1:23.)

John 3:3

அவர் தமது புஜங்களால் உனக்கு நிழலிடுவார்; அவர் சிறகு களின் அடைக்கலத்தில் உன் நம்பிக் கையை வைப்பாய்.

Psalms 90:4

அவர்களுடைய ஆவி பிரியவே, அவர்கள் தாங்கள் உருவான மண் ணுக்குத் திரும்புவார்கள்; அந்நாளிலே அவர்களுடைய எண்ணங்கள் யாவும் அழிந்துபோம்.

Psalms 145:3

அவன் கர்த்தரை நோக்கி: நீரே எனக்கடைக்கலம்; நீரே எனக்காதரவு என்று சொல்லுவான்; அவரே எனக் குத் தெய்வம்; அவரிடத்தில் நான் நம்பிக்கை வைப்பேன்.

Psalms 90:2


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |