Topic : Sin

நம்முடைய பாவங்களை நாம் சங்கீர்த்தனம்பண்ணினால், நம்முடைய பாவங்களை நமக்கு மன்னித்துச் சகல அக்கிரமத்திலும் நின்று நம்மைப் பரி சுத்தமாக்குவதற்கு அவர் பிரமாணிக் கமும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

1 John 1:9

அநீதர்கள் சர்வேசுரனுடைய இராச்சியத்தைச் சுதந்தரித்துக்கொள்ள மாட்டார்கள் என்று அறியீர்களோ? மோசம் போகாதேயுங்கள்: தூர்த்தரும், விக்கிரக ஆராதனைக்காரரும், விபசாரக் காரரும், (கலாத். 5:19; எபே. 5:5.)
சிற்றின்பப்பிரியரும், ஆணும் ஆணுமாய் மோகிக்கிறவர்களும், திருடரும், பொருளாசைக்காரரும், குடி வெறியரும் உதாசினரும், கொள்ளைக்காரரும் சர்வேசுரனுடைய இராச்சியத்தைச் சுதந்தரிப்பதில்லை.

1 Corinthians 6:9-10

எல்லாரும் பாவஞ்செய்து, கடவுளின் மகிமையற்றவர்களாகி,
அவருடைய கிருபையால் கிறீஸ்து சேசுநாதரிடத்திலுள்ள இரட் சணியத்தால் இலவசமாய் நீதிமான்க ளாக்கப்படுகிறார்கள்.

Romans 3:23-24

ஆகையால் உங்களுடைய இலெளகீக அவயவங்களைச் சாகடியுங்கள். அவையாவன: விபசாரம், அசுத்தம், காமம், துர் இச்சை, விக்கிரக ஆராதனையாகிய பொருளாசை. *** 5. விக்கிரகங்களுக்கு அடிமைத்தனமாகிற பொருளாசை என்பதற்கு எபேசியர் 5-ம் அதிகாரம் 5-ம் வசனம் காண்க.

Colossians 3:5

மேலும் உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்திருப்பா னாகில், நீ போய், நீயும் அவனுந் தனித் திருக்கையில் அவனைக் கடிந்துகொள். அவன் உனக்குக் காது கொடுத்தால் உன் சகோதரனை ஆதாயமாக்கிக்கொள் வாய். (லூக். 17:3: லேவி. 19:17; சர்வப். 19:13; இயா . 5:19, 20.)

Matthew 18:15

அப்படியானால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டிராமல், வரப்பிரசாதத்துக்குக் கீழ்ப்பட்டிருப்பதால் பாவஞ் செய்வோமோ? சுவாமி இரட்சிக்க!

Romans 6:15


விபசாரக்காரரே, இவ்வுலகத்தின் சிநேகம் சர்வேசுரனுக்குப் பகை யாயிருக்கிறதென்று அறியீர்களோ? ஆகையால் இவ்வுலகத்துக்குச் சிநேகித னாயிருக்க விரும்புகிறவன் சர்வேசுர னுக்குத் தன்னைப் பகைஞனாக்கிக் கொள்ளுகிறான். (லூக். 6:26; 1 அரு. 2:15.)

James 4:4

ஆயினும் நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தைப் பாராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? (லூக். 6:41.)

Matthew 7:3

எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரோடொருவர் நிலைமையான சிநேகமுள்ளவர்களாயிருங்கள். ஏனெனில் சிநேகமானது திரளான பாவங்களை மூடும். (பழ. 10:12.)

1 Peter 4:8

எதார்த்தமாய் நடக்கிறவன் நம்பிக்கையாய் நடக்கிறான்; தன் வழிகளைக் கெடுக்கிறவனோ வெளிப் படுத்தப்படுவான்.

Proverbs 10:9

அக்கிரமத்தை செய்ய வல்ல வனாயிருக்கிற நீ ஏன் துஷ்டத்தனத் தில் மகிமை பாராட்டுகிறாய்?
நாள்முழுதும் உன் நாவு நீ (எனக்குச்) செய்த அநியாயத்தையே சிந்தித்தது; மோசகரமான சவரகன் கத்தியைப் போல் (என்னை உபா தித்தது).

Psalms 51:1-2

நல்ல மனிதன் தன் இருதயமா கிய நல்ல பொக்கிஷத்தினின்று நல்லவைகளை எடுத்துக் காட்டுகிறான். கெட்ட மனிதனும் கெட்ட பொக்கிஷத்தினின்று கெட்டவைகளை எடுத்துக் காட்டுகிறான். ஏனெனில் இருதயத்தின் நிறைவாகவேதான் வாய் பேசுகின்றது.

Luke 6:45

சகோதரரே, ஒரு மனிதன் நினையாமல் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஞானவான்களாகிய நீங்கள் சாந்தகுணத்தோடு அப்படிப்பட்டவனுக்குப் புத்தி சொல்லுங்கள். ஆனால் சோதனையில் நீயும் அகப்படாதபடிக்கு உன்மட்டில் கண்ணுண்டாயிரு.

Galatians 6:1

ஆகையால் நாம் அவரோடு ஐக்கியமாயிருக்கிறோமென்று சொல்லியும் இருளில் நடப்போமானால், நாம் பொய்யரேயன்றி, உண்மைப்படி நடப்பவர்களல்ல.

1 John 1:6

பலனில்லாத இருள்களின் கிரியைகளோடு நீங்கள் கலவாதிருப்பதன்றியே, அவைகளைக் கடிந்து கொள்ளுங்கள்.
ஏனெனில் அவர்களால் இரகசியத்தில் செய்யப்படுகிறவைகளைச் சொல்லுகிறதும் வெட்கக்கேடாயிருக்கின்றது.

Ephesians 5:11-12

நாம் பாவங்களுக்கு மரித்தவர்களாய் நீதிக்கு ஜீவிக்கும்படி, அவர் தாமே சிலுவைமரத்தின்மேல் தமது சரீரத்தில் நமது பாவங்களைச் சுமந்தார். அவரு டைய காயங்களினால் சொஸ்தமாக்கப் பட்டீர்கள். (இசை. 53:5; 1 அரு. 3:5.)

1 Peter 2:24

ஸ்துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்தே புறப்படுகின்றது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.

James 3:10

ஏனெனில் நீங்கள் மனிதருடைய குற்றங்களை அவர்களுக்கு மன்னிப்பீர்க ளேயாகில், உங்களுக்கும் உங்கள் பரம் பிதா உங்கள் குற்றங்களை மன்னிப்பார். (மத். 18:35; மாற். 11:25: சர்வப். 28:3-5.)

Matthew 6:14

அப்படியே கிறீஸ்துநாதரும் அநேகருடைய பாவங்களை நிர்மூலமாக்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டார். இரண்டாந்தரமோ தம்மை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இரட்சகராகப் பாவமின்றித் தோன்றுவார். (உரோ. 5:9; 1 இரா. 3:18.)

Hebrews 9:28

சர்வேசுரனை அண்டிப்போங்கள்; அவரும் உங்களை அண்டிவருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள். இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். (இசை. 1:16.)

James 4:8

எந்த மனுஷனும் வேதப்பிரமாணத்தின் கிரியைகளால் தேவ சமுகத்தில் நீதிமானாக்கப்படுவதில்லை. ஏனெனில் வேதப்பிரமாணத்தின் வழியாய்ப் பாவத் தின் அறிவுண்டாகிறது. (கலாத். 2:16.)

Romans 3:20

மேலும் அர்ச்சிக்கப்பட்டவர்களுக்கு யோக்கியமானபடி எவ்வித வேசித்தனமும், அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பெயர் முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படக்கூடாது. (கொலோ. 3:5.)

Ephesians 5:3

கபடமற்றவர்களின் நடுவில் என் கரங்களைக் கழுவி, உமது பீடத் தைச் சுற்றிவந்து;
(அவ்விடம்) உமது துதிகளின் சப்தத்தைக் கேட்டு, உமது அதிசயங் களனைத்தையும் வெளிப்படுத்து வேன்.

Psalms 25:6-7

துர்மார்க்கரின் ஆலோசனை யின்படி நடவாமலும் பாவிகளு டைய வழியில் நில்லாமலும் துர்ப் (போதனையின்) பிரசங்காசனத்தில் உட்காராமலும்,

Psalms 1:1


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |