Topic : Holy Spirit

பரிசுத்த ஆவியின் வல்லமையால் உங்களில் நம்பிக்கை பெருகும்படி, நம்பிக்கை தரும் கடவுள், விசுவாசத்தால் உண்டாகும் எல்லா வகையான மகிழ்ச்சியாலும் அமைதியாலும் உங்களை நிரப்புவாராக.

Romans 15:13

ஆண்டவர் என்றது ஆவியானவரைத்தான்; ஆண்டவரின் ஆவியானவர் எங்கிருக்கிறாரோ அங்கு விடுதலை உண்டு.

2 Corinthians 3:17

உங்களுடைய உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்குள் குடிகொண்டிருக்கும் அந்த ஆவியைக் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்டீர்கள். ஆகவே, நீங்கள் உங்களுக்குச் சொந்தமல்ல,
ஏனெனில், நீங்கள் விலைகொடுத்து வாங்கப்பெற்றீர்கள். ஆகவே, உங்கள் உடலில் கடவுளை மகிமைப்படுத்துங்கள்.

1 Corinthians 6:19-20

நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள். இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

Matthew 28:19-20

அதற்கு இராயப்பர், "மனந்திரும்புங்கள்; பாவமன்னிப்பு அடைவதற்காக இயேசு கிறிஸ்துவின் பெயரால் நீங்கள் ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் பெறுங்கள்; அப்பொழுது பரிசுத்த ஆவியாம் திருக்கொடையைப் பெறுவீர்கள்.

Acts 2:38

நம்பிக்கையோ பொய்க்காது; ஏனெனில், நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பும் நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.

Romans 5:5

ஆகவே, தீயோராகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிவீர்களானால், வானகத்திலுள்ள உங்கள் தந்தை, தம்மிடம் கேட்பவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய்ப் பரிசுத்த ஆவியை அளிப்பார்! " என்றார்.

Luke 11:13

நானும் தந்தையைக் கேட்பேன்: தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருவார்; அவர் உங்களோடு என்றும் இருப்பார்.

John 14:16

ஆனால், பரிசுத்த ஆவி உங்கள்மேல் வரும்போது, அவரது வல்லமையைப் பெற்று யெருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், மண்ணுலகின் இறுதி எல்லை வரைக்குமே நீங்கள் என் சாட்சிகளாயிருப்பீர்கள்" என்றார்.

Acts 1:8

நெருப்புப்போன்ற நாவுகள் அவர்களுக்குத் தோன்றிப் பிளவுண்டு, ஒவ்வொருவர்மேலும் வந்து தங்கின.
எல்லாரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று, ஆவியானவர் அருளியபடி அயல்மொழிகளில் பேசத்தொடங்கினர்.

Acts 2:3-4

தந்தை என் பெயரால் அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியான துணையாளரும் உங்களுக்கு எல்லாம் அறிவுறுத்துவார்; நான் உங்களுக்குக் கூறியதெல்லாம் நினைவூட்டுவார்.

John 14:26

இதற்கு நாங்கள் சாட்சிகள்; கடவுள் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு அளிக்கும் பரிசுத்த ஆவியும் இதற்கு சாட்சி" என்றனர்.

Acts 5:32

உங்களைக் கையளிக்கக் கொண்டுபோகும்போது என்ன சொல்வது என்று முன்னதாகவே கவலைப்படவேண்டாம். அவ்வேளையில் உங்களுக்கு அருளப்படுவதையே சொல்லுங்கள். ஏனெனில், பேசுவது நீங்கள் அல்ல, பரிசுத்த ஆவியே பேசுவார்.

Mark 13:11

அன்புக்குரியவர்களே, மிகப் பரிசுத்த விசுவாசத்தை அடிப்படையாய்க் கொண்டு உங்கள் வாழ்வைக் கட்டியெழுப்புங்கள்; பரிசுத்த ஆவியின் ஆற்றலால் செய்யுங்கள்.
நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம் இரக்கத்தில் முடிவில்லா வாழ்வை அளிக்கும் நாளை எதிர்பார்ப்பவர்களாய்,

Jude 1:20-21

ஏனெனில் இறைவாக்கு ஒருபோதும் மனிதரின் விருப்பத்தால் உண்டானதில்லை. மனிதர் பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டு கடவுளின் ஏவுதலால் பேசினர்.

2 Peter 1:21

ஒரு நாள் அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடுகையில் பரிசுத்த ஆவி, "சவுலையும் பர்னபாவையும் நான் தெரிந்தெடுத்த வேலைக்காக எனக்கென ஒதுக்கிவையுங்கள்" என்று அவர்களுக்குச் சென்னார்.

Acts 13:2

நான் தந்தையிடமிருந்து உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார்; அவர் தந்தையிடமிருந்து வரும் உண்மையின் ஆவியானவர். அவர் வந்து என்னைப்பற்றிச் சாட்சியம் கூறுவார்.

John 15:26

மக்களெல்லாம் ஞானஸ்நானம் பெறும்வேளையில் இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, செபித்துக்கொண்டிருக்க, வானம் திறந்தது.
பரிசுத்த ஆவி புலப்படும் வடிவெடுத்து, புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து குரலொலி உண்டாகி, " நீரே என் அன்பார்ந்த மகன். உம்மிடம் நான் பூரிப்படைகிறேன் " என்றது.

Luke 3:21-22

நானும் இவரை அறியாதிருந்தேன். ஆனால், நீரால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர், 'ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பவர்' என்றார்.

John 1:33

இதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், இதோ! ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "சூசையே, தாவீதின் மகனே, உம்முடைய மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில், அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான். அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்.

Matthew 1:20


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |