Topic : Gentleness

கனிந்த உங்கள் உள்ளம் அனைவர் முன்னும் விளங்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார்.

Philippians 4:5

ஆதலால், கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டு அவரால் அன்பு செய்யப்பட்ட இறைமக்கள் நீங்கள். இரங்கும் உள்ளம், பரிவு, தாழ்ச்சி, சாந்தம், பொறுமை ஆகிய பண்புகளை அணிந்து கொள்ளுங்கள்.

Colossians 3:12

திருச்சபையைச் சேராதவர்களிடம் ஞானத்தோடு பழகுங்கள். நாம் வாழும் இக்காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்.
உங்கள் பேச்சு இனியதாகவும், சாரமுள்ளதாகவும் இருக்கட்டும். இங்ஙனம் ஒவ்வொருவருக்கும் எவ்வாறு பதில் அளிக்க வேண்டுமென அறிந்துகொள்வீர்கள்.

Colossians 4:5-6

சாந்தமான பதில் கோபத்தை அடக்கும். கடுஞ் சொல் கோபத்தை மூட்டும்.

Proverbs 15:1

நல்ல வார்த்தைகள் தேனைப்போல் (இன்பமாய் இருக்கும்). உடல் நலமும் ஆன்மாவின் இனிமையாய் இருக்கும்.

Proverbs 16:24

ஆனால், தேவ ஆவி விளைவிக்கும் பலன்களாவன: அன்பு, மகிழ்ச்சி, அமைதி பொறுமை, பரிவு, நன்னயம், விசுவாசம், சாந்தம், தன்னடக்கம்.
இவையுள்ள இடத்தில் சட்டம் எத்தடையும் விதிப்பதற்கு இடமில்லை. .

Galatians 5:22-23

உன் சகோதரனை உன் இதயத்தில் பகைக்காதே. ஆனால், அவனுடைய பாவத்திற்கு நீ உடந்தையாகாதபடிக்கு வெளிப்படையாய் அவனுக்கு அறிவுரை சொல்.
பழிக்குப் பழி வாங்கத் தேடாதே. உன் மக்கள் உனக்கு அநீதி செய்தாலும், மனத்தில் பொறாமை கொள்ளாதே. உனக்கு அன்பு செய்வது போல் உன் அயலானுக்கும் அன்பு செய். நாம் ஆண்டவர்.

Leviticus 19:17-18

ஆகையால், இனி ஒருவரைக் குறித்து ஒருவர் தீர்ப்பிடுவதை விட்டுவிடுவோமாக. மாறாக, சகோதரனுக்கு இடைஞ்சலாகவோ. இடறலாகவோ இருக்கமாட்டோம் எனத் தீர்மானம் செய்துகொள்ளுங்கள்.

Romans 14:13

ஆகையால், இன்னும் காலம் இருக்கும்போதே, எல்லார்க்கும் சிறப்பாக விசுவாசத்தால் நம் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை செய்வோமாக!

Galatians 6:10

சகோதர அன்பில் நிலைத்திருங்கள்.
விருந்தோம்பலை மறவாதீர்கள். 'விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வானதூதர்களையும் உபசரித்ததுண்டு.

Hebrews 13:1-2

சேனைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நேர்மையான தீர்ப்புக் கூறுங்கள்; ஒவ்வொருவனும் தன் சகோதரனுக்கு இரக்கமும் அன்பும் காட்டுவானாக!
கைம்பெண்ணையோ அனாதைப் பிள்ளையையோ அந்நியனையோ ஏழையையோ துன்புறுத்தவேண்டா; உங்களுள் எவனும் தன் உள்ளத்தில் தன் சகோதரனுக்குத் தீமை செய்யக் கருதக்கூடாது."

Zechariah 7:9-10

உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்பவனோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான்."

John 13:20


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |